சற்று முன்

ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |   

croppedImg_50025421.jpeg

’வேட்டையன்’ விமர்சனம்

Directed by : T.J. Gnanavel

Casting : Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil, Rana Daggubati, Manju Warrier, Kishore, Ritika Singh, Dushara Vijayan, G M Sundar, Abirami, Rohini, Rao Ramesh, Ramesh Thilak, Rakshan

Music :Anirudh Ravichander

Produced by : Lyca Productions - Subaskaran

PRO : Riaz K Ahamed

Review :

"வேட்டையன்" டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் – சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்திரன். இந்த படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்விகா சிங், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

கன்னியாகுமரி மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த், குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை அழிப்பதற்கும் சட்டத்தை விட என்கவுண்டரே சரியான வழி, என்ற ரீதியில் பயணிக்கிறார். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அமிதாப் பச்சன், சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலை உருவாகும், என்ற மனநிலையோடு என்கவுண்டர்களுக்கு எதிராக இருக்கிறார்.

 

இந்த சமயத்தில், பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்படும் இளைஞர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்து விடுகிறார். அவரை என்கவுண்டர் செய்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரவைக்கப்படும் ரஜினிகாந்த், உண்மை அறியாமல் அந்த இளைஞரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த என்கவுண்டரில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டும் அமிதாப் பச்சன் தலைமையிலான விசாரணைக் குழு, அதன் பின்னணியை விசாரிக்கும் போது பல உண்மைகள் தெரிய வருவதோடு, என்கவுண்டர் மூலம் குற்றவாளிகளை தண்டிப்பது சரியான பாதை அல்ல, என்பதை உணர்ந்துக் கொள்ளும் ரஜினிகாந்த், அதன் பிறகு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வது தான் ‘வேட்டையன்’.

 

‘ஜெய்பீம்’ படம் மூலம், சட்டம் பணம் படைத்தவர்களுக்கும், அதிகாரத்திற்கும் எப்படி வளைந்து கொடுக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் டி.ஜே.ஞானவேல், இதில், காவல்துறையால் நடத்தப்படும் என்கவுண்டர்கள் சிலவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் ரகசியங்களையும், அதில் அப்பாவி மக்கள் எப்படி பலியாக்கப்படுகிறார்கள் என்பதையும் ரஜினிகாந்துக்கு ஏற்ப மாஸாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த கிளாஸாகவும் சொல்லியிருக்கிறார்.

 

அதியன் என்ற கதாபாத்திரத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த், முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து வேட்டையனாக அதிரடி காட்டுகிறார். இரண்டாம் பாதியில் போலீஸ் வேட்டையனாக இருப்பதை விட மக்களின் பாதுகாவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவர் மேற்கொள்ளும் புலன் விசாரணையும், அதில் அவர் வெளிப்படுத்தும் வேகமும் படத்தின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கிறது. வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அந்த கதாபாத்திரத்தை கையாண்டதோடு, “குறி வச்சா எற விழனும்” என்ற பஞ்ச் வசனம் மூலம் திரையரங்கையே அதிர வைக்கும் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுடன் திரை ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறார்.

 

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி தான் பேசும் வசனங்களுக்கும் உயிர் கொடுக்கும் விதத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

 

“மூளை இல்லனா போலீஸ் ஆகலாம், திருடனாக முடியாது” என்று போலீஸை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் நல்ல திருடனாக வலம் வரும் பகத் பாசில், “கல்வி தான் எதிர்காலம் என்று நினைக்கும் இந்தியா போல் உலகில் உள்ள பல நாடுகளில் என் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவேன்” என்று கூறிக்கொண்டு அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்க நினைக்கும் கல்வி வியாபாரியாக நடித்திருக்கும் ராணா டக்குபதி இருவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

 

ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், அரசு பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

கிஷோர், ஜி.எம்.சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், அபிராமி, ரோகிணி, ரக்‌ஷன் என்று படத்தில் பலர் இருந்தாலும் அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

அனிருத் இசையில் “மனசுலாயோ...” பாடல் மனதில் ஒட்டிக்கொள்ள, ”வேட்டையன் தீம்” பாடல் மற்றும் ”ஹண்டர் வந்தார்” பாடல் காட்சிகளுக்கு வீரியம் கொடுக்கும் விதமாக பயணிக்கிறது. பின்னணி இசை அனிருத்தின் வழக்கமான பாணியில் இருந்து வித்தியாசப்பட்டு பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் தனது கேமரா ஜாலங்கள் மூலம் ரஜினிகாந்தை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களமாக காண்பித்திருக்கிறார். 

 

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் திரைக்கதையை வேகமாக பயணிக்க வைத்தாலும், படத்தில் பேசப்படும் கருப்பொருள் சிதைந்துவிடாமல் கவனமுடன் காட்சிகளை தொகுத்து இயக்குநர் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

இயக்குநர் டி.ஜி.ஞானவேல் இதுவரை சொல்லப்படாத, சொல்ல வேண்டிய சமூக பிரச்சனையை ரஜினிகாந்த் என்ற மாஸ் நடிகருக்கு ஏற்ற வகையில் சொல்லியிருப்பதோடு, ஒரு முழுமையாக கிரைம் திரில்லர் சஸ்பென்ஸ் ஜானர் திரைப்பட அனுவத்தையும் கொடுத்திருக்கிறார். 

 

படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களை சரியாக கையாண்டதோடு, அவர்களின் கதாபாத்திரங்களை திரைக்கதையோடு ஒட்டி பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் டி.ஜே.ஞானவேல், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களின் கவனம் சிதறாமல் திரைக்கதையை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.

 

மிக சுவாரஸ்யமாக பயணிக்கும் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவத்தை கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் உண்மையான குற்றவாளி யார்? என்று தெரிந்த பிறகு திரைக்கதை சற்று தடுமாற்றத்துடன் பயணிப்பதை மறுக்க முடியாது. ஆனால், கல்வியை வியாபாரமாக்கும் திட்டம் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியிலான குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் போன்றவற்றை விளக்கும் காட்சிகள் திரைக்கதையில் இருக்கும் குறைகளை மறக்கடித்து, இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

 

"வேட்டையன்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : ஒருமுறை பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA