சற்று முன்

இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |   

croppedImg_1915130680.jpeg

’ஆலன்’ விமர்சனம்

Directed by : Siva.R

Casting : Vetri, Muthra, Anu Sithara, Vivek Prasanna, Aruvi Madhan, Tito Wilson, Sri Deva

Music :Manoj Kriahna

Produced by : 3S Pictures

PRO : Yuvaraj

Review :

"ஆலன்" சிவா.R இயக்கத்தில் மனோஜ் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை 3S பிக்சர்ஸ். இந்த படத்தில் வெற்றி, முத்ரா, அணு  சித்தாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்த நாயகன் வெற்றி, தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் மூழ்க  நினைக்கிறார். ஆனால், எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் அவரது மனது கடந்த 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை ஆட்கொள்ள மறுக்கிறது. இதனால், தான் நேசிக்கும் எழுத்துலகை நோக்கிய தனது பயணத்தை தொடங்குகிறார். அப்போது  அவருக்கு கிடைக்கும் ஒரு பெண்னின் நட்பு, அவரது பாலைவனம் போன்ற வாழ்க்கையை சோலைவனமாக மாற்றுகிறது. அதன் மூலம் துறவியாக சுற்றி திரிந்தவர் சக மனிதராக மாறி, தன் மனம் விரும்பும் எழுத்துலகில் இணைய முற்படும் போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை எதிர்கொள்கிறார். அதன் மூலம் மீண்டும் திசை மாறும் வெற்றியின் வாழ்க்கை என்னவானது?, அவர் விரும்பிய எழுத்துலகில் அவர் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

அமைதியான முகம், ஆரவாரம் இல்லாத திரை இருப்பு, அளவான நடிப்பு என துறவி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நடிகர் வெற்றி, தன் ஆன்மீக வேடத்தை களைத்துவிட்டு காதல் வயப்படும் போது, தனது முகத்திலும், உடல் அசைவிலும் வெட்கத்தை வெளிப்படுத்தும் விதம், நடிப்பில் அவரது முதிர்ச்சியை காட்டுகிறது. நான் கடவுள் ருத்ரா போல் மிரட்டவில்லை என்றாலும் பார்வையாளர்கள் மனதில் ஆலனாக ஒட்டிக்கொள்வதற்கான நேர்த்தியான நடிப்பை வெற்றி சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை நேசிக்கும் ஜெர்மனி நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் மதுரா, சிரித்த முகத்தோடு வசனம் பேசி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார். தான் சிறுவயதில் சந்தித்தவரை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தனது மன மகிழ்ச்சியை தன் அம்மாவிடம் கைப்பேசி மூலம் வெளிப்படுத்தும் போது ஜெர்மனி மொழியில் பேசினாலும், அம்மா என்ற வார்த்தையை நடு நடுவே உச்சரித்து தமிழுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறார்.

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாராவின் அழகு முகத்தை பார்த்தால் போதும் பசி கூட பறந்து போய்விடும், அந்த அளவுக்கு கவர்ச்சி நிறைந்த கண்களோடு கவனம் ஈர்க்கிறார். ஆனால், உடல் எடை தான் ”வெற்றிக்கு காதலியா..!” என்று அதிர்ச்சியடைய வைக்கும் விதத்தில் இருக்கிறது. 

 

விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் குறையில்லை.

 

ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின், தனது கேமரா மூலம் பார்வையாளர்களுக்கு ஆன்மீகத் தளங்களுக்கு பயணித்த அனுபவத்தை கொடுக்கிறார்.

 

மனோஜ்  கிரியானாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதன், இயக்குநர் சொல்ல நினைத்ததை, அவர் சொன்ன விதத்தில் தொகுத்திருக்கிறார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் சிவா.ஆர், ”நம் மனது எதை அதிகம் விரும்புகிறதோ அதுவே கடவுள்” என்ற கருத்தை காதல் பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார்.

 

எழுத்துலகம், காதல், ஆன்மீகம் ஆகிய மூன்றும் படத்தின் மிக முக்கிய அம்சங்களாக இருந்தாலும், ஒன்று கூட பார்வையாளர்களின் மனதை பாதிக்காமல் பயணித்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

 

தான் எடுத்துக் கொண்ட கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் சிவா.ஆர், அதற்கான திரைக்கதையை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி நகர்த்தி செல்வதோடு, அடுத்தது என்ன நடக்கப் போகிறது, என்பதை யூகிக்கும்படியான காட்சிகள் மூலம் சொல்வதும்,  பல வருடங்களாக ஆன்மீகத்தில் ஈடுபட்ட ஒருவர், சட்டென்று சக மனிதராக மாறி காதல் வயப்படுவது உள்ளிட்ட ஏகப்பட்ட விசயங்கள் லாஜிக் மீறல்களாக இருக்கிறது. இப்படி படம் முழுவதிலும் பல குறைகள் இருந்தாலும், படத்தின் லொக்கேஷன்கள் மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் படத்தை சற்று ரசிக்க வைக்கிறது.

 

"ஆலன்" படத்திற்கு மதிப்பீடு 2/5

 

Verdict : சுமாரான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA