சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

croppedImg_650078435.jpeg

’கேம் சேஞ்சர்’ விமர்சனம்

Directed by : Shankar

Casting : Ram Charan, Kiyara Advani, Anjali, Srikanth, Samuthirakani, Jayaram, SJ Surya, Sunil, Naveen Chandra, Achyuth Kumar, Vennila Kishor, Brammanandham

Music :Thaman S

Produced by : Sri Venkateswara Creations - Dil Raju

PRO : AIM

Review :

"கேம் சேஞ்சர்" ஷங்கர் இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் – தில் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தமன்.எஸ். இந்த படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, பிரம்மானந்தம், அச்யுத் குமார், சுனில், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

ஆந்திரபிரதேச முதல்வரான ஸ்ரீகாந்துக்கு இரண்டு மகன்கள். அப்பாவுக்கு பிறகு முதலமைச்சர் பதவி யாருக்கு? என்பதில் இருவருக்கும் இடையே போட்டி நிலவும் நிலையில், புதிதாக பதவி ஏற்கும் மாவட்ட கலெக்டர் ராம்சரண், தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மோசடி பேர்வழிகளை விழி பிதுங்க வைக்கிறார். அவரது நடவடிக்கைகளால் முதல்வரின் இளைய மகனான அமைச்சர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதற்கிடையே, உடல்நலக் குறைவால் முதல்வர் உயிரிழக்க, அடுத்த முதல்வராக அவரது இளைய மகன் எஸ்.ஜே.சூர்யா பதவி ஏற்க தயாராவதோடு, முதல்வராக பதவி ஏற்று முதல் வேலையாக தன்னை அவமானப்படுத்திய கலெக்டர் ராம்சரணை பழிவாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். 

 

இந்த நிலையில், முதல்வர் இறப்பதற்கு முன்பு தனது அரசியல் வாரிசாக ராம்சரணை அறிவிப்பதோடு, அவர் தான் தனக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்ற தனது கடைசி ஆசையோடு, அவர் தான் ஆந்திர பிரதேசத்தின் அடுத்த முதல்வர், என்றும் அறிவித்த வீடியோ வெளியாகிறது. இதனால், எஸ்.ஜே.சூர்யா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட, அதே சமயம் ராம்சரணையும் முதல்வராக விடாமல் தடுக்கும் முயற்சிகளில் எஸ்.ஜே.சூர்யா ஈடுபடுகிறார். இறுதியில், ராம்சரண் முதல்வர் ஆனாரா?, அவரை எதற்காக முதல்வர் அரசியல் வாரிசாக நியமித்தார்? ஆகிய கேள்விகளுக்கான விடையை இயக்குநர் ஷங்கர் தனது முந்தைய படங்களின் பாதிப்பாக சொல்வதே ‘கேம் சேஞ்சர்’.

 

மக்கள் பிரச்சனைக்காக போராடும் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளின் பலம் என்ன? என்பதை வெளிக்காட்டும் மாவட்ட கலெக்டர் என இரண்டு வேடங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார் ராம்சரண். அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர், சில காட்சிகளில் கல்லூரி மாணவராக வந்து நடனம் மற்றும் காதல் காட்சிகள் மூலம் இளசுகளை ஈர்க்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, வழக்கமான ஷங்கர் படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கூட இல்லாமல் சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலியின் கதாபாத்திரம் திரைக்கதையின் திருப்பங்களாக பயணித்திருப்பதோடு, அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

எப்படியாவது முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்ற ஆசையில் வலம் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு காட்சிகளை தொய்வில்லாமல் கடத்த பெரிதும் உதவியிருக்கிறது.

 

முதல்வரின் மூத்த மகனாக அமைச்சர் மாவீரன் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

 

ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் திரை இருப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் திரு காட்சிகளை கலர் புல்லாகவும்ம், பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். 

 

இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் பாடல்களில் பழைய பாடல்களின் சாயல் தெரிகிறது. பின்னணி இசையிலும் இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. ஆக மொத்தம் குறிப்பிட்டு சொல்வதற்கு இசையில் புதிதாக ஒன்றும் இல்லை.

 

படத்தொகுப்பாளர்கள் சமீர் மொஹமத் மற்றும் ரூபன் இருவரும் தயாரிப்பாளர் செலவு செய்தது திரையில் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றியிருக்கிறார்கள். 

 

சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக சொல்வதோடு, கலகலப்பாகவும் சொல்வதில் கிள்ளாடியான இயக்குநர் ஷங்கர், தனது வழக்கமான பாணியில் இந்த படத்தை கையாண்டிருந்தாலும் புதிதாக எதுவும் இல்லாத உணர்வை படம் கொடுப்பதோடு, அக்மார்க் தெலுங்குப் படத்தை பார்க்கும் உணர்வையும் கொடுக்கிறது.

 

இயக்குநர் ஷங்கரின் வழக்கமான ஃபார்மூலாவில், பாடல்கள், நகைச்சுவை, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள் என படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக பயணித்தாலும் இரண்டாம் பாதி அக்மார்க் தெலுங்குப் படங்களின் சாயலோடும், தேவையில்லாத காட்சிகளோடும் பயணித்து திரைக்கதையை தொய்வடைய செய்வதோடு, இறுதியில் பார்வையாளர்களிடம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சப்பென்று முடிகிறது.

 

தமிழக அரசியல் குடும்பத்தை சீண்டும் வகையில் காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் தைரியத்தை பாராட்டியாக வேண்டும். அதே சமயம், ஒரு தர்ப்பினரை மட்டுமே குறை சொல்லும் இயக்குநர் ஷங்கர் பொதுப்படையாக அரசியல்வாதிகளின் மக்கள் எதிர்ப்பு போக்கை விமர்சித்திருந்தால் நிச்சயம் அவரது முந்தைய படங்களை கொண்டாடியது போல் மக்கள் இந்த படத்தையும் கொண்டாடியிருப்பார்கள்.

 

"கேம் சேஞ்சர்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : சுமாரான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA