சற்று முன்

சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை - இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம் வீடியோவின் 'சுழல் - தி வோர்டெக்ஸ்' இரண்டாவது சீசன்!   |    பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை!   |    ரொமான்ஸ் ஜானரில் உருவான '2K லவ்ஸ்டோரி' திரைப்பட வெற்றியை கொண்டாடும் விழா!   |    சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் 'மதராஸி' பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது!   |    கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம திரில்லரான 'எமகாதகி' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு!   |    ஆஹா ஓடிடி யில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் 'மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்'   |    'டிராகன்' படத்தில் நான் தான் அவருக்கு வில்லன், ஆனால் நல்ல வில்லன் - இயக்குநர் மிஷ்கின்   |    மடோனா செபாஸ்டியன் நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் 'ஹார்ட்டின்'   |    காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ஆல்பம் 'பட்டி'   |    'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் பான் இந்திய படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்!   |    சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் 'வா வாத்தியார்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    “ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது   |    அதர்வா முரளி நடிப்பில் முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படம் 'இதயம் முரளி'   |    பாட்ஷா கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் 'மேக்ஸ்' ZEE5-ல்!   |    'VD12' படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது!   |    பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகும் 'சாரி’   |    நடிகர் ரிச்சர்ட் ரிஷி & பெல்ஜியன் மலினோயிஸ் நாய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சுப்ரமணி’!   |    'ஓ மை கடவுளே' புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் 'டிராகன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |   

croppedImg_186192607.jpeg

’மத கஜ ராஜா’ விமர்சனம்

Directed by : Sundar.C

Casting : Vishal, Anjali, Varalakshmi Sarathkumar, Sonu Sood, Santhanam, Manobala, Swaminathan, R.Sundarajan, Naan Kadavul Rajendiran

Music :Vijay Antony

Produced by : Gemini Film Circuit

PRO : Johnson

Review :

"மத கஜ ராஜா" சுந்தர்.சி இயக்கத்தில் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை விஜய் ஆண்டனி. இந்த படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சூனு சூட், சந்தானம், மனோபாலா, சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

திருமணம் ஒன்றில் தனது பள்ளி நண்பர்களை சந்திக்கும் விஷாலுக்கு, அவர்கள் அனைவரும் பிரச்சனையில் சிக்கி விரக்தியில் இருப்பதும், பணம், அரசியல், ஊடகம் ஆகிய மூன்றையும் தன்வசம் வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய தொழிலதிபர் தான், அதற்கு காரணம் என்பதும் தெரிய வருகிறது. அவரிடம் சமாதானமாக பேசி நண்பர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சியில் விஷால் ஈடுபடுகிறார். ஆனால், விஷாலை எறும்பாக நினைத்து தொழிலதிபர் உதாசினப்படுத்த, அந்த யானையை விஷால் எப்படி சாய்த்து, தனது நண்பர்களை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறார், என்பதை காமெடி, காமநெடி, மசாலாநெடி ஆகிய மூன்றையும் சேர்த்து சொல்வது தான் ‘மத கஜ ராஜா’.

 

12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதால் விஷால் இளமையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் அரசியல் மற்றும் பஞ்ச் வசனங்கள் பேசாமல் இருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது. வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் காமெடி, காதல், என அனைத்திலும் அமர்க்களப்படுத்தியிருக்கும் விஷால், தன்னை முன்னிலைப்படுத்தாமல் படம் முழுவதும் ஒரு நடிகையோ அல்லது ஒரு நடிகரோ உடன் இருப்பது போல் தன் திரை இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

நாயகிகளாக நடித்திருக்கும் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவருக்கும் இடுப்பு ஆட்டுவதிலும், தொப்புள் காட்டுவதிலும் நிச்சயம் போட்டி நிலவியிருக்கும். அதான், பாடல் காட்சிகளில் அம்மணிகள் போட்டி போட்டு காட்டியிருக்கிறார்கள். 

 

வில்லனாக நடித்திருக்கும் சூனு சூட், வழக்கமான பணக்கார வில்லன் வேடத்தில் கச்சிதமாக பொருந்தி, கச்சிதமாக நடித்திருக்கிறார்.

 

விஷாலின் நண்பராக நடித்திருக்கும் சந்தானம், வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. அதிலும், மனோபாலா, லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன் ஆகியோருடன் சந்தானம் கூட்டணி அமைக்கும் போது காமெடி காட்சிகள் சரவெடியாக வெடித்து மக்களை மத்தாப் பூவாக சிரிக்க வைக்கிறது.

 

கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் ஆர்யா, விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியலாகவும், மக்களை குஷிப்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளில் கேமராவை சுழலவிட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

 

படத்தை முதலில் இருந்து பார்த்தாலும் சரி, இடைவேளை நெருங்கும் இடத்தில் இருந்து பார்த்தாலும் சரி அல்லது இறுதிக் காட்சி நெருங்கும் இடத்தில் இருந்து பார்த்தாலும் சரி, பார்வையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி கதை புரியும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி.

 

காமெடி படம் என்றால் லாஜிக் பார்க்க கூடாது, சிரிப்பு என்ற மேஜிக்கை மட்டுமே பார்க்க வேண்டும், என்று சொல்வார்கள். அதற்காக, தன் மகள் பக்கத்தில் இருக்கும் போதே, மகள் வயதுடைய ஒரு பெண்ணை இளைஞர்களுடன் சேர்ந்து முதியவர் காமத்துடன் பார்ப்பதை எல்லாம் எப்படி காமெடி என்று எடுத்துக்கொள்வது?

 

இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான பாணியில் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஒரு எளிமையான கருவுக்கு, எளிமையான மற்றும் பழைய பாணியில் திரைக்கதை அமைத்தாலும் அதை அனைத்து தரப்பினரும் சிரிக்க கூடிய விதத்தில் இயக்கியிருக்கிறார். 

 

கிளைமாக்ஸ் நெருங்கும் போது, மனோபாலாவை வைத்து இயக்குநர் வடிவமைத்திருக்கும் பதினைந்து நிமிட நகைச்சுவை எப்பிசோட், திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர செய்யும். மனோபாலா மட்டும் உயிருடன் இருந்திருந்தால், நிச்சயம் சம்பளத்தை உயர்த்தியிருப்பார், அந்த அளவுக்கு அவரது நடிப்பு மிக சிறப்பாக உள்ளது.

 

"’மத கஜ ராஜா" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழக்கூடிய கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA