சற்று முன்

நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |    பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14 உலகமெங்கும் வெளியாகும் 'தருணம்'   |    ராக்கிங் ஸ்டார் யாஷின் 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு அசத்தலான விருந்து!   |    ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக்   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அசத்தலான 'டாக்ஸிக்' பட கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்   |    அஜித் சாரால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது! - 'மெட்ராஸ்காரன்' பட தயாரிப்பாளர் B.ஜெகதீஷ்   |    மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!   |    படப்பிடிப்பு முடிவடைந்த சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர்!   |    பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ள 'அகத்தியா' வெளியீடு அறிவிப்பு!   |    வெளிநாடுகளில் புகழ் பெற்ற OTT தளம் ஜனவரி 2025 முதல் இந்தியாவிலும்!   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்ட 'துணிந்தவன்'   |    அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன் - 'எல்லாம் நன்மைக்கே' பட இயக்குனர்   |   

croppedImg_258442955.jpeg

’தருணம்’ விமர்சனம்

Directed by : Arvindh Srinivasan

Casting : Kishen Das, Smruthi Venkat, Raj Ayyappa, Geetha Kailasam, Bala Saravanan

Music :Darbuka Siva and Ashwin Hemanth

Produced by : ZHEN Studios - Pugazh and Edan

PRO : AIM

Review :

"தருணம்" அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் சென் ஸ்டுடியோஸ் – புகழ் & ஈடன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தர்புகா சிவா & அஷ்வின் ஹேமந்த். இந்த படத்தில் கிஷன் தாஸ், ஷ்ம்ருதி வெங்கட், ராஜ் ஐயப்பா, கீதா கைலாசம், பாலசரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான நாயகன் கிஷன் தாஸும், நாயகி ஷ்ம்ருதி வெங்கட்டும் நட்பாக பழக ஆரம்பித்து காதலிக்க தொடங்குகிறார்கள். அவர்களது பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி, சில தினங்களில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கும் நிலையில், ஷ்ம்ருதி வெங்கட்டின் வீட்டுக்குள் நுழையும் ராஜ் ஐயப்பா திடீரென்று இறந்து விடுகிறார். அந்த பிரச்சனையில் இருந்து தனது வருங்கால மனைவியை காப்பாற்ற முயற்சிக்கும் கிஷன் தாஸ், யாருக்கும் தெரியாமல் உடலை அப்புறப்படுத்துவதோடு, ராஜ் ஐயப்பாவின் மரணம் தொடர்பாக தங்கள் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் ஏற்படாத ஒரு சூழலை உருவாக்க முடிவு செய்கிறார். 

 

கண்காணிப்பு கேமரா, காவலாளிகள், ஆள் நடமாட்டம் என பிஸியாகவே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ராஜ் ஐயப்பாவின் உடலை அப்புறப்படுத்தி, கொலை வழக்கில் இருந்து நாயகனும், நாயகியும் தப்பிக்கும் தருணங்களை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே ’தருணம்’.

 

எதிர்பாரத தருணத்தில் நடந்த ஒரு கொலை, அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் நாயகனின் புத்திசாலித்தனம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு மிக சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.

 

நாயகன் மற்றும் நாயகியின் அறிமுகம், அவர்களது சந்திப்பு,  அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் ஆகிய காட்சிகள் முதல் பாதியை வழக்கமான படமாக நகர்த்திச் சென்றாலும், இரண்டாம் பாதியில் கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக நாயகன் போடும் திட்டமும், அதை செயல்படுத்தும் விதமும் படத்தை வேகமாக பயணிக்க வைப்பதோடு, பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.

 

கொலையை மறைப்பதற்காக குற்றவாளிகள் வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் கையாண்டிருக்கும் புதிய யுக்தி படத்தை மற்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுத்தி காட்டுவதோடு, அந்த யுக்தியை எப்படி செயல்படுத்த முடியும்? என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் எழுப்பி, அதற்கான விடையை அறிந்துக்கொள்ளும் ஆவலையும் தூண்டிவிட்டு, கதைக்களத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.

 

குற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது? என்ற பதற்றத்தையும், பயத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி நடித்திருக்கும்  ஷ்ம்ருதி வெங்கட் மற்றும் தெளிவான திட்டங்கள் மூலம் கொலையை தற்கொலையாக மாற்ற முயற்சிக்கும் கிஷன் தாஸ், இருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

 

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா, அவரது அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன் ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், படம் முழுவதும் நிறைந்திருப்பது போல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பாடல்கள் தேவைப்படாத கதைக்களம் என்றாலும் தர்புகா சிவா இசையமைத்த பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. அஸ்வின் ஹேமந்தின் பின்னணி இசை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கான உருட்டல், மிரட்டல் சத்தம் இல்லாமல் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர்களுக்கு பயன்படுத்தப்படும் வழக்கமான வண்ணத்தை தவிர்த்துவிட்டு, காட்சிகளை இயல்பாக படமாக்கியிருக்கிறார். 

 

மிகவும் சவலான விசயத்தை நாயகன் சாமத்தியமாக செய்வதை பார்வையாளர்களுக்கு புரியும்படியும், அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியும் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் அருள் இ.சித்தார்த்தின் பணி சிறப்பு.

 

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு என்று இருக்கும் வரைமுறையை தவிர்த்துவிட்டு, வித்தியாசமான பாதையில் பயணித்திருக்கும் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன், முதல் பாதியில் சில இடங்களில் பட்ஜெட் காரணமாக தடுமாறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் தனது பலமான திரைக்கதை மற்றும் யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார். 

 

ஒரே மாதிரியான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை பார்த்து சோர்வான ரசிகர்களுக்கு, அமைதியான கதைக்கள பின்னணியில், ஆச்சரியமான திரில்லர் அனுபவத்தை இந்த ’தருணம்’ நிச்சயம் தரும்.

 

"தருணம்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : நல்ல த்ரில்லர் அனுபவம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA