சற்று முன்

விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |   

croppedImg_1301974993.jpeg

’பூர்வீகம்’ விமர்சனம்

Directed by : G.Krishnan,DF Tech.

Casting : Kathir, Miya Sri, Bose Venkat, Ilavarasu, Sangili Murugan, Sriranjani, Susan, YSD Sekar, Pasanga Sivakumar

Music :Sanakya

Produced by : Brain Touch Film Factory - Dr.R.Muruganandam

PRO : Guna, Selvaragu

Review :

"பூர்வீகம்" ஜி.கிருஷ்ணன், Df Tech எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தை  பிரைன் டச் பிலிம் ஃபேக்டரி - Dr.R.முருகானந்தம் தயாரித்திருக்கிறார்கள்.  இந்த படத்திற்கு இசை சாணக்யா. இந்த படத்தில் வெங்கட், கதிர், மியா ஸ்ரீ, ஸ்ரீ ரஞ்சனி, சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரியக்க ஆசைப்படுவதோடு, கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகனை ஈடுபடுத்த விரும்புகிறார். அவரது ஆசைப்படி, அவரது மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். 

 

தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்துவிட்டாலும், ஒரு தந்தையாக போஸ் வெங்கட்டினால் மகனின் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போவதோடு, அவரிடம் உரிமையாக உறவாட முடியாத சூழலும் உருவாகிறது. நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகனையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படும் போஸ் வெங்கட்டின் நிலை மாறியதா?, பூர்வீகத்தை விட்டுவிட்டு படிப்புக்காகவும், பணிக்காகவும் நகர வாழ்க்கையில் ஈடுபட்டு, தனது பெற்றோரையே மறந்துபோகும் மனநிலைக்கு ஆளான கதிர், மனம் மாறினாரா? இல்லையா? என்பதை இளைய சமுதாயத்தினருக்கான வாழ்வியல் பாடமாக சொல்வதே ‘பூர்வீகம்’.

 

தந்தை சொல்படி வாழும் கிராமத்து இளைஞர் மற்றும் பெற்றோரை கவனிக்க முடியாமல் தவிக்கும் நகரத்து குடும்பத் தலைவர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நாயகன் கதிர், இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பில் வேறுபாட்டை காட்டியிருப்பதோடு, தனது உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ குடும்ப பாங்கான முகத்தோடும், எளிமையான அழகோடும் கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது வெகுளித்தனமான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

 

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், நகர வாழ்க்கை மோகத்தால் மகனை படிக்க வைத்தாலும், அவர் தன்னிடம் இருந்து விலகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார். போஸ் வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனியும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

 

சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் சாணக்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமத்து மண் மணத்தோடு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை மாலை நேரத்து காற்றாக சுகம் தரும்படி பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் விஜய் மோகன், கிராமத்து அழகையும், மக்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், காட்சிகளில் இருக்கும் வண்ணங்களை சரியான முறையில் கையாள தவறியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஜி.கிருஷ்ணன், Df Tech மக்களுக்கு தேவையான ஒரு விசயத்தை, பிரச்சாரமாக அல்லாமல் கமர்ஷியலாகவும், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியும் கொடுத்திருக்கிறார். 

 

படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் பூர்வீகத்தை விட்டுவிட்டு நகரத்திற்கு வரும் இளைஞர்கள், தங்களது கலாச்சாரங்களையும், உறவுகளின் மேன்மைகளையும் மறந்து போகும் போது, வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜி.கிருஷ்ணன், விவசாயத்தின் முக்கியத்துவத்தை உரத்த குரலில் சொல்லி மக்களை யோசிக்க வைத்திருக்கிறார்.

 

கலாச்சாரம், காதல், திருமணம், உறவுகளின் முக்கியத்துவம் என்று பார்வையாளர்களுக்கு கிராமத்தில் பயணித்த உணர்வை கொடுக்கும் வகையில் காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் ஜி.கிருஷ்ணா, சில இடங்களில் காட்சிகளை நகைச்சுவையாக சித்தரித்து முழு படத்தையும் சிரிக்க வைத்து ரசிக்க வைக்கிறார்.

 

சில இடங்களில் சில குறைகள் தெரிந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து, அதை கையாண்ட விதம் ஆகியவை குறைகளை மறந்து படத்தை பாராட்ட வைத்துவிடுகிறது.

 

"பூர்வீகம்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : நகரத்தில் பதவி வகிக்கும் மகன்களை பெற்ற விவசாயிகளின் ஏக்கத்தின் பிரதிபலிப்பு

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA