சற்று முன்

EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |    யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் அசத்தலான போஸ்டர் வெளியானது!   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ்!   |    'ஸ்வீட் ஹார்ட்' படத்தை பார்த்து ரியோ ராஜை கண்கலங்க பாராட்டிய ரசிகை!   |    சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் கௌரவம்! - நடிகர் எஸ். ஜே. சூர்யா   |    ZEE5 இல் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' புதிய சாதனை!   |    இணையம் முழுக்க வைரலாகி வரும் 'எம்புரான்' பட டிரெய்லர் - வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!   |    சோசியல் மீடியா ஒரு கூர்மையான கத்தி - தலைவர் கவிஞர் விவேகா பேச்சு   |    மும்பையில் 'எம்புரான்' பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!   |    'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படம் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   |    இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கி நடிக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்'   |    யுவன் சங்கர் ராஜா வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படக்குழுவினருக்கு வாழ்த்து!   |    மார்ச் 27ல் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'லூசிபர்' பட இரண்டாம் பாகமான 'எம்புரான்'!   |    'டெஸ்ட்' படத்தில் குமுதாவாக அறிமுகமாகும் நடிகை நயன்தாரா!   |    நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம்!   |    அசத்தலான காமெடி சீரிஸாக 'செருப்புகள் ஜாக்கிரதை' மார்ச் 28 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது   |    சினிமா எடுப்பதும், சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம் - நடிகர் ராதாரவி   |   

croppedImg_1076439492.jpeg

’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ விமர்சனம்

Directed by : N.Shankar Dayal

Casting : Yogi Babu, Senthil, Saravanan, Mayil Samy, Lissy Antony, Subbu Panchu, Imaya Varman, Advaith Jai Masthan, Vaigha Rose, Ashmitha Singh, Chitra Lakshmanan, Harika Pedada

Music :'Sathaga Paravaigal' Shankar

Produced by : Meenakshi Amman Movies - Arunkumar Sammantham and N.Sangkar Dayal

PRO : AIM

Review :

 

 

"குழந்தைகள் முன்னேற்றக் கழகம்" என்.சங்கர் தயாள் இயக்கத்தில் மீனாக்‌ஷி அம்மன் மூவிஸ் – அருண்குமர் சம்மந்தம், என்.சங்கர் தயாள் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை சாதகப் பறவைகள் சங்கர். இந்த படத்தில் யோகி பாபு, செந்தில், சுப்பு பஞ்சு, இளைய வர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, வைகா ரோஸ், மயில்சாமி, சித்ரா லட்சுமணன், அஸ்மிதா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

அரசியல்வாதியான யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்கிறார். இதனால் அவருக்கும் ஒரு குழந்தை  பிறக்கிறது. அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். அவரது மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்கிறார்கள். இவர்கள் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, இல்லையா? என்பதை தமிழக அரசியலையும், குடும்ப அரசியலையும் மையமாக வைத்துக் கொண்டு நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.

 

யோகி பாபு கதையின் நாயகனாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், படத்தின் சில இடங்களில் திடீர் திடீரென்று தலைக்காட்டி மறைகிறார். இதனால், பல இடங்களில் அவரை ஒட்ட வைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து சில இடங்களில் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் கடியாக மாறி வலியை கொடுக்கிறது.

 

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கான சில காட்சிகள் அவர்களது வயதை மீறியதாக இருந்தாலும், அதில் எந்தவித தடுமாற்றமும் இன்றி மிக தெளிவாக  நடித்திருக்கிறார்கள்.

 

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நினைவு கூர்வது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறுமி ஹரிகா பெடடாவின் திரை இருப்பும், நடிப்பும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம் காட்டியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அவரது காட்சிகளில் காமெடி இல்லை என்றாலும், ”எத்தனை பேர் வந்து உடைத்தாலும் இறுதியில் காணாமல் போவது அவர்கள் தான், என் கட்சி இல்லை” என்ற அவரது வசனத்தை சாதாரணமாக பேசி கைதட்டல் பெற்றுவிடுகிறார்.

 

சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவிலும் குறையில்லை. படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, முடிந்த அளவுக்கு வெட்டி, ஒட்டி முழு படமாக கொடுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள், தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். 

 

இயக்குநரின் அரசியல் நையாண்டிகள் காட்சிகள் மூலம்  புரிந்தாலும், அதில் இருந்த நகைச்சுவை தான் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாக யோகி பாபுவை படம் முழுவதும் வருவது போல் காட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

 

சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதி, ஏமாற்றம், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.

 

"குழந்தைகள் முன்னேற்றக் கழகம்" படத்திற்கு மதிப்பீடு 2.7/5

 

Verdict : நகைச்சுவை கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA