சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

croppedImg_203901734.jpeg

'ராஜபீமா' விமர்சனம்

Directed by : Naresh Sampath

Casting : Arav, Ashima Narwal, Nassar, K.S. RaviKumar, Yashika Anand, Yogi Babu, Oviya, Babhubali Prabhakar, Sayaji, Raghavan,

Music :Simon K King

Produced by : Surabi Films - Mohan

PRO : DOne

Review :

"ராஜபீமா" நரேஷ் சம்பத்,அஷிமா நர்வால்,  இயக்கத்தில் சுரபி பிலிம்ஸ் - மோகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சைமன் கே கிங் . இந்த படத்தில் ஆரவ், ஓவியா, கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு, யாஷிகா ஆனந்த், நாசர், அருவி மதன், சயாஜி ஷின்டே, ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

அம்மாவை இழந்து மனவேதனையில் இருக்கும் சிறுவன் ராஜா ஊருக்குள்  வரும் ஒரு யானையை வளர்க்க ஆசைப்படுகிறான். ராஜாவுடைய அப்பா அதற்கான முறையான அனுமதியும் பெற்று யானைக்கு பீமா என பெயர் வைத்து வளர்க்கிறார்கள். ராஜா பெரியவனாகிறான். யானைகளைக் கொன்று தந்தம் கடத்தும் தயாளனை காட்டிலாக்கா அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் பீமா கடத்தப்படுகிறான். பீமா காணாமல் போனதற்கு யார் காரணம்? ராஜா பீமாவை கைப்பற்றினான்? இல்லையா? என்பதுதான் "ராஜபீமா" படத்தின் கதை.

 

ராஜாவாக ஆரவ், உடலாலும் பலத்தாலும் விலங்குகளில் பிக்பாஸாக இருக்கிற யானையோடு இணைந்து நடித்துள்ள படம். மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களோடும் இருக்கிற அவர் யானை மீது பாசம் காட்டும்போது நெகிழ வைத்து, வில்லன்களுடன் மோதுகிற ஆக்சன் காட்சிகளில் உடல்பலம் காட்டி, காதல் காட்சிகளில் பொருத்தமாக நடித்து கவனம் பெறுகிறார்.

 

இளமையின் செழுமையை பந்தி வைப்பதற்காக மட்டுமல்லாது கதையின் முக்கியமான தருணங்களிலும் பங்களித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

 

கே எஸ் ரவிக்குமார் அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு முதலமைச்சர் பதவிக்கு ஸ்கெட்ச் போடுபவராக தன் பாத்திரத்துக்கு தேவையான வில்லத்தனத்தை கனகச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

ஆஷிகா நெர்வாலுக்கு சினிமா வழக்கப்படி ஹீரோவை காதலிக்கிற பழகிப்போன வேலைதான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாக செய்திருப்பதை பார்க்க முடிகிறது.

 

ஓவியா, ஆரவுக்கு ஜோடியாக வருவார் என்று பார்த்தால் கதையோடு பின்னிப்பிணைந்த ஒரு பாடலுக்கு கலர்ஃபுல் உடைகளில் கவர்ச்சி ததும்ப  ரசிக்கும்படி ஆடிவிட்டுப் போகிறார்.

 

அமைச்சரின் வளர்ப்பு மகனாக வருகிற யோகிபாபு ‘பொள்ளாச்சியின் பிரதமர்’ என அல்லக்கைகளால் கொண்டாடப்படுகிற அளவுக்கு காட்டுகிற பந்தா கலகலப்புக்கு உதவுகிறது.

 

நாயகனின் தந்தையாக நாசர், மாமாவாக  அருவி மதன், அரசியல்வாதியாக சயாஜி ஷின்டே ஆகியோருடன் ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ் என இன்னபிற நடிகர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

 

பீமாவாக வருகிற யானையின் ஒவ்வொரு அசைவும் கண்களை உற்சாகமாக்கி மனதில் இடம்பிடிக்கிறது.

 

யானையைப் போற்றுகிற ‘தந்தத்துக் கொம்பனே கந்தனின் அண்ணனே’ பாடல் பிரபல நாட்டுப்புறப் பாடலின் நகலாக அமைந்து உற்சாகமூட்ட, ‘மஞ்சனத்தி வாசத்துல’ பாடலை இதமூட்டும் மெட்டில் தவழ விட்டிருக்கிறார் சைமன் கே கிங். பின்னணி இசையிலிருக்கும் உழைப்பு கதையோட்டத்திற்கு பரபரப்பு கூட்டுகிறது.

 

"ராஜபீமா" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்திய கதைக்களம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA