சற்று முன்

EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |    யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் அசத்தலான போஸ்டர் வெளியானது!   |    ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ்!   |    'ஸ்வீட் ஹார்ட்' படத்தை பார்த்து ரியோ ராஜை கண்கலங்க பாராட்டிய ரசிகை!   |    சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் கௌரவம்! - நடிகர் எஸ். ஜே. சூர்யா   |    ZEE5 இல் 360 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' புதிய சாதனை!   |    இணையம் முழுக்க வைரலாகி வரும் 'எம்புரான்' பட டிரெய்லர் - வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார்!   |    சோசியல் மீடியா ஒரு கூர்மையான கத்தி - தலைவர் கவிஞர் விவேகா பேச்சு   |    மும்பையில் 'எம்புரான்' பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!   |    'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷை புதிய படம் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ ஜி!   |    விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் ( ACE ) 'படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு   |    இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கி நடிக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்'   |    யுவன் சங்கர் ராஜா வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், 'ஸ்வீட் ஹார்ட் படக்குழுவினருக்கு வாழ்த்து!   |    மார்ச் 27ல் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'லூசிபர்' பட இரண்டாம் பாகமான 'எம்புரான்'!   |    'டெஸ்ட்' படத்தில் குமுதாவாக அறிமுகமாகும் நடிகை நயன்தாரா!   |    நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம்!   |    அசத்தலான காமெடி சீரிஸாக 'செருப்புகள் ஜாக்கிரதை' மார்ச் 28 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது   |    சினிமா எடுப்பதும், சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம் - நடிகர் ராதாரவி   |   

croppedImg_954019645.jpeg

’2K லவ் ஸ்டோரி’ விமர்சனம்

Directed by : Suseenthiran

Casting : Jagaveer, Meenakshi Govindraj, Lathika Balamurugan, Bala Saravanan, Singampuli, Jayaprakash, Antony Baghyaraj, GP Muthu, Vinodhini

Music :D.Imman

Produced by : City Light Pictures - Vignesh Subramanian

PRO : AIM

Review :

"2K லவ் ஸ்டோரி" சுசீந்திரன் இயக்கத்தில் சிட்டி லைட் பிக்சரஸ் – விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை டி.இமான். இந்த படத்தில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், லத்திகா பாலமுருகன், பாலசரவணன், சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி.பி.முத்து, வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

ஆண் - பெண் நட்பாக பழகினாலே நாளடைவில் அது காதலாக மாறிவிடும் சூழலில், ஒரு ஆணும், பெண்ணும்  நண்பர்களாக மட்டுமே இருக்க முடியும், என்பதற்கான எடுத்துக்காட்டாக நாயகன் ஜெகவீர் - நாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வெளிக்காட்டும் அன்பு, அக்கறை வெறும் நட்பால் மட்டும் வராது, அது காதல் தான், அந்த காதல் அவர்களுக்கு இடையில் யாராவது வந்தால் நிச்சயம் வெளிவரும், என்று அவர்களது நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல், ஜெகவீர் - மீனாட்சியின் நட்புக்கு பல சோதனைகள் வருகிறது, அவற்றை கடந்து நண்பர்களாகவே பயணித்தார்களா? அல்லது மற்றவர்கள் எதிர்பார்த்தது போல் காதலர்கள் ஆனார்களா ? என்பதை நட்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் சொல்வதே ’2K லவ் ஸ்டோரி’.

 

அறிமுக நடிகர் ஜெகவீர், குழந்தைத்தனமான முகத்தோடும், குறையில்லாத நடிப்போடும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கதையின் நாயகனாக இருந்தாலும், தனக்கு எது வரும், அதை எப்படி செய்தால் எடுபடும், என்பதை சரியாக கணித்து நடித்து படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜனின் முகம் மட்டும் அல்ல நடிப்பும் படம் முழுவதும் பளிச்சிடுகிறது. குழப்பமான மனநிலையில் இருப்பவர்களை தெளிவுப்படுத்துபவர், தான் குழம்பிய நிலையில் இருக்கும் போது நண்பனின் பேச்சைக் கேட்டு நம்பிக்கையோடு பயணிக்கும் இடங்களில் அழுத்தமான நடிப்பு மூலம் பார்வையாளர்களை கவர்ந்துவிடுகிறார்.

 

புதுவரவு லத்திகா பாலமுருகனின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு மூலம் பார்வையாளர்கள் மனதில் நல்வரவாக பதிந்துவிடுகிறார். 

 

பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், சிங்கம் புலி, வினோதினி, ஜெயப்பிரகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. பின்னணி இசையும் அதிகமான சத்தமின்றி அளவாக பயணித்து கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் வி.எஸ்.அனந்த கிருஷ்ணாவின் கேமரா, பிரமண்டமான ஆல்பம் பார்ப்பது போன்ற உணர்வை படம் முழுவதும் கொடுத்திருக்கிறது. பாடல்கள் மற்றும் வசனக் காட்சிகள் என அனைத்திலும் நட்சத்திரங்களை அழகாக காட்டியிருப்பதோடு, படம் முழுவதையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் தியாகு.டி, காதலை காட்டிலும் கதையில் முக்கியத்துவம் பெறும் நட்பை கவிதையாக பார்வையாளர்கள் மனதில் பதியும் அளவுக்கு நேர்த்தியாக காட்சிகளை கோர்த்திருக்கிறார்.

 

’புது வசந்தம்’ மூலம் ஆண், பெண் உறவில் புரட்ச்சியை ஏற்படுத்தி நட்புக்கு மரியாதை அளித்த தமிழ் சினிமாவில், மீண்டும் ஒரு நட்பு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். 

 

ஆண், பெண் இடையிலான நட்பை கொண்டாடுவது தமிழ் சினிமாவில் புதிதல்ல என்றாலும், அவர்களது நட்பு எவ்வளவு ஆழமானது என்பதை எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கும் இயக்குநர் சுசீந்திரன், அதை வசனங்கள் மூலம் விவரித்து போராடிக்காமல், காட்சிகள் மூலம் விவரித்து பார்வையாளர்களை கொண்டாட வைக்கிறார். 

 

திரைக்கதை மெதுவாக நகர்வது போல் சில இடங்களில் தோன்றினாலும், அந்த இடங்களில் நகைச்சுவையை தெளித்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதோடு, பெண்கள் பற்றிய புரிதல் மற்றும் அதைச் சார்ந்த வசனங்கள், காதல் மற்றும் நட்பை வேறுபடுத்தி காட்டுவது ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதம், என படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. 

 

தலைப்பு முழுவதையும் காதல் ஆட்கொண்டு இருந்தாலும், திரைக்கதையில் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன், குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு அழகான காதல் கதையாக மட்டும் இன்றி தற்போதைய காலக்கட்டத்து இளைஞர்களின் நட்புக்கு மரியாதை கொடுக்கும் படைப்பாகவும் கொடுத்திருக்கிறார். 

 

"2K லவ் ஸ்டோரி" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : அனைவரும் பார்க்கலாம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA