சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

croppedImg_732094122.jpeg

’ஜென்டில்வுமன்’ விமர்சனம்

Directed by : Joshua Sethuraman

Casting : Lijomol Jose, Hari Krishnan, Losliya Mariyanesan, Rajiv Gandhi, Dharani, Vairabalan Sudesh - Prabhu Doss

Music :Govind Vasantha

Produced by : Komala Hari Pictures & One Drop Ocean Pictures - Komala Hari, Hari Bhaskaran, PN Narenthra Kumar & Leo Logane Nethaji

PRO : AIM

Review :

"ஜென்டில்வுமன்" ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் கோமளா ஹரி  பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசன் பிக்சர்ஸ் - கோமளா ஹரி, ஹரி  பாஸ்கரன், PN நரேந்த்ரா குமார் மற்றும் லியோ லோகனே நேதாஜி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கோவிந்த் வசந்தா. இந்த படத்தில் ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ், தாரணி, ராஜிவ் காந்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், வைரபாலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் ஹரி கிருஷ்ணனுடன் வசிக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் மீது கணவர் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என்று  நினைக்கும் போது, கணவரின் செல்போன் மூலம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். இதனால் கடும் கோபமடையும் லிஜோமோல் ஜோஸ், கணவரை கொலை செய்து விடுகிறார். இரத்த வெள்ளத்தில் கணவர் இறந்ததை பார்த்து சற்றும் கலங்காதவர், கணவர் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு, சாதாரணமாக தனது வேலையை பார்க்க தொடங்குகிறார். இதற்கிடையே, ஹரி கிருஷ்ணன் காணவில்லை என்று அவரது காதலி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீசார், ஹரி கிருஷ்ணனுக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டுபிடித்தார்களா?, கணவரை கொலை செய்துவிட்டு சகஜமாக உலா வரும் லிஜோமோல் ஜோஸ் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாரா? இல்லையா ? என்பதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் சொல்வதே ‘ஜென்டில்வுமன்’.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் கணவர் செய்த தவறை அறிந்து சாதாரண பெண் போல் கலங்கினாலும், அடுத்த கணமே சற்றும் எதிர்ப்பார்க்காத ஒரு விசயத்தை செய்து பார்வையாளர்களை பதற வைத்துவிடுகிறார். கணவரை கொலை செய்துவிட்டு எந்தவிதமான பதட்டத்தையும் வெளிக்காட்டாமல் ஒவ்வொரு நாட்களையும் கடந்து செல்வது படம் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதை தனது நடிப்பு மூலம் மிக சாதாரணமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.

 

நாயகனாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன், கடவுள் பக்தி, நெற்றியில் பட்டை என்று நல்ல பிள்ளையாக இருந்தாலும், பெண்கள் விசயத்தில், ”அடப்பாவி...” என்று சொல்லும் அளவுக்கு சேட்டை மன்னனாக வலம் வந்திருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும் திரைக்கதையோட்டத்தில் நிறைவாக பயணித்திருக்கிறார்.  

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, பாதுகாப்புக்காக ஆண்களை சார்ந்திருக்கும் பெண்களை பிரதிபலிக்கும் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். 

 

லிஜோமோல் ஜோஸின் தங்கையாக நடித்திருக்கும் தாரணி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, போலீஸ் இணை ஆணையராக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் வைரபாலன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, தனது சொந்த ஊர் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது.

 

போலீஸ் உதவி ஆணையராக நடித்திருக்கும் சுதேஷ், காவல்துறையின் உயர் அதிகாரி வேடத்திற்கு அளவு எடுத்து தைத்தது போல் கச்சிதமாக பொருந்துவதோடு, காவல்துறையில் நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மிரட்டியிருக்கிறார். ஸ்டண்ட் இயக்கத்திற்கு விடுமுறை அளித்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினால் வில்லன் மற்றும் குணச்சித்திர வாய்ப்புகள் குவியும் என்பது உறுதி.

 

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் உள்ளது. பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.

 

ஒளிப்பதிவாளர் சா.காத்தவராயன், அடுக்குமாடி குடியிருப்புக்குள் வைத்தே பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருந்தாலும், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களை பார்வையாளர்கள் மனதில் நேர்த்தியாக கடத்தியிருக்கிரார்.

 

வசனக் காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்ப்பார்ப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் வகையில் நேர்த்தியாக காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் இளையராஜா சேகர்.

 

உண்மை குற்ற சம்பவம் ஒன்றை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன், குற்றம் புரிந்தவர் நாயகி என்பதால் அவர் செய்ததை நியாயப்படுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

பெண்கள் எந்த நிலைக்கு சென்றாலும், அவர்களை ஆண்கள் தங்களுக்கு கீழே தான் வைத்திருக்கிறார்கள், உள்ளிட்ட வசனங்கள் மூலம் பெண்ணியம் பேசினாலும், அதை கிரைம் சஸ்பென்ஸ் ஜானரோடு சேர்த்து கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன், தான் சொல்ல வந்ததை ஜனரஞ்சகமாக சொல்லி ரசிக்க வைத்தாலும், அவரது பெண் கதாபாத்திரங்கள் போடும் திட்டம், சினிமாத்தனமாகவும், நம்பும்படியாகவும் இல்லாதது படத்தின் பலத்தை சற்று பலவீனப்படுத்தும் வகையில் இருக்கிறது.

 

"ஜென்டில்வுமன்’" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : கிரைம் சஸ்பென்ஸ் ஜானர்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA