சற்று முன்

‘டென் ஹவர்ஸ்’ விமர்சனம்
Directed by : Ilayaraja Kaliyaperumal
Casting : Sibi Sathyaraj, Gajaraj, Jeeva Ravi, Raj Iyappa, Murugadass, Dilipaan, Udhaya, Thangadurai, Saravana Subbaiah, Sharumisha, Niranjana
Music :KS Sundramoorthy
Produced by : Duvin Studios
PRO : Nikil Murugan
Review :
"டென் ஹவர்ஸ்" இளையராஜா கலியப்பெருமால் இயக்கத்தில் டுவின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கே.எஸ்.சுந்தரமூர்த்தி. இந்த படத்திசிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் ஐயப்பா, முருகதாஸ், திலீபன், தங்கதுரை, உதயா, சரவண சுப்பையா, சாருமிஷா, நிரஞ்சனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளிக்கின்றனர். அந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு, அப்பெண்ணை மீட்பதற்கான முயற்சியில் இறங்குகிறார். அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாகவும், அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகே சென்றுக் கொண்டிருப்பதாகவும் போலீஸுக்கு தகவல் வருகிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்யும் போது, புகார் அளித்த இளைஞர் அதே பேருந்தில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
பெண் கடத்தல் மற்றும் பேருந்தில் இளைஞர் கொலை, என இரண்டு வழக்குகளையும் பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டும், என்ற கட்டாயத்தில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், இரண்டு குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘டென் ஹவர்ஸ்’.
காஸ்ட்ரோ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிபி சத்யராஜ், காக்கி உடையில் மிடுக்காகவும், துடிப்பாகவும் நடித்திருக்கிறார். உடலுக்கு வேலை கொடுக்கும் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், மூளைக்கு வேலை கொடுக்கும் துப்பறியும் காட்சிகள் மூலம் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கு 200 சதவீதம் நியாயம் சேர்த்திருக்கும் சிபி சத்யராஜ், அளவான நடிப்பு மூலம் திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பையும், வேகத்தையும் ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், மருத்துவராக நடித்திருக்கும் ஜீவா ரவி, பேருந்தில் கொலை செய்யப்படும் இளைஞராக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன், முருகதாஸ், திலீபன் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
கதை முழுவதும் இரவில் நடந்தாலும், இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக், பேருந்து பயணம், தேசிய நெடுஞ்சாலை என அனைத்து காட்சிகளையும் குறைவான வெளிச்சத்தில் மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை ஆரம்பத்திலேயே திரைக்கதையோடு பார்வையாளர்களை ஒன்றிவிட செய்துவிடுகிறது. கதைக்களத்தின் தீமாக ஒலிக்கும் பீஜியமும் கவனம் ஈர்க்கிறது.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், காட்சிகளை தொகுத்த விதம் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்கிறது.
படம் தொடங்கியது முதல் முடியும் வரை, எந்த இடத்திலும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகர்வதோடு, யார் குற்றவாளி?, இரண்டு குற்றங்களுக்கு இடையே எதாவது தொடர்பு இருக்குமா? என்ற கேள்விகளுக்கான பதிலை யூகிக்க முடியாதபடி இயக்குநர் இளையராஜா கலியப்பெருமாள் திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றால் இப்படி இருக்க வேண்டும், என்று சொல்லும் அளவுக்கு காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு படம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது.
"டென் ஹவர்ஸ்" படத்திற்கு மதிப்பீடு 4/5
Verdict : கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA