சற்று முன்

அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |    இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்   |    இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்   |    சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!   |   

croppedImg_66362160.jpeg

’ரெட்ரோ’ விமர்சனம்

Directed by : Karthik Subbaraj

Casting : Suriya, Pooja Hegde, Jayaram, Joju George, Nassar, Prakash Raj, Vidhu, Karunakaran

Music :Santhosh Narayanan

Produced by : 2D Entertainment & Stone Bench - Jyotika - Suriya

PRO : Yuvaraj

Review :

"ரெட்ரோ" கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் & ஸ்டோன் பெஞ்ச் – சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், விது மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

சட்டவிரோத செயல்களை செய்யும் ஜோஜு ஜார்ஜால் வளர்க்கப்படும் தாய், தந்தை இல்லாத சூர்யா, தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறார். ஆனால், அதே காதலிக்காக தனது வளர்ப்பு அப்பாவின் கையை துண்டாக வெட்டுபவர், அவரது ஆட்களையும் கொலை செய்கிறார். இதனால், அவரிடம் இருந்து பூஜா ஹெக்டே விலகிச்செல்ல, சூர்யா சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்.

 

 

பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அவரை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, என்பதை மாஸாகவும், கிளாஸாகவும் சொல்வதே ‘ரெட்ரோ’.

 

வளர்ப்பு அப்பா என்றாலும், அவருக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் அரக்கனாகி, பிறகு ஒரு இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளி, என ஒரே கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பு மூலம் பல முகங்கள் கொடுத்திருக்கிறார் சூர்யா. முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கும் சூர்யா, சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று பார்வையாளர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் கருப்பொருளாக இருந்தாலும், திரைக்கதையில் தனித்துவம் இல்லாமல் வழக்கமான நாயகியைப் போல் பயணித்திருக்கிறார். இருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். 

 

வில்லனாக நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பு மூலம் மிரட்டியிருக்கிறார். கிங் மைக்கலாக நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். 

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருந்தாலும், காட்சிகளுடன் பார்க்கும் போது கூடுதல் ஸ்பெஷலாக இருக்கிறது. பின்னணி இசை மற்றும் பீஜியம்கள் பார்வையாளர்களையும் ரெட்ரோ காலக்கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் கேமரா, சூர்ய, பூஜா ஹெக்டே உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளையும் ரெட்ரோ காலத்து மனிதர்களாக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை மிக ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறது.

 

இரண்டு கதைகள், அதனுடன் வரும் மற்றொரு குட்டி கதையோடு படம் பயணித்தாலும், பார்வையாளர்கள் எந்தவித குழப்பமும் இன்றி படத்தை புரிந்துக் கொள்ளும்படி காட்சிகளை நேர்த்தியாக கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷாஃபிக் முகமது அலி.

 

ரெட்ரோ காலக்கட்ட உலகை நம் கண் முன் நிறுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அக்காலத்து மாஸ் ஆக்‌ஷன் படத்தை தற்போதைய காலக்கட்ட மேக்கிங் மூலம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார். 

 

அம்மா செண்டிமெண்ட், கல்ட் சண்டைக்காட்சிகள், வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகள்  ஆகியவை ஒரு பக்கம் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்கிறது. மறுபக்கம் இவை அனைத்தையும் மிக சிறப்பாக கையாண்டிருக்கும் சூர்யா, படம் முழுவதும் ரெட்ரோ ஸ்டைலில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார். 

 

"Retro" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : நல்ல பொழுதுபோக்கு படம்

மேலும் திரைப்பட விமர்சனம்