சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

croppedImg_1828737018.jpeg

’ஹவுஸ் மேட்ஸ்’ விமர்சனம்

Directed by : T.Rajavel

Casting : Darshan, Kaali Venkat, Vinodhini, Arsha Shanthini Baiju, Abdul Lee, Dheena, Hendrik

Music :Rajesh Murugesan

Produced by : Sivakarthikeyan Productions, Play Smith Studios, South Studios - Sivakarthikeyan, S.Vijaya Prakash

PRO : Thirumurugan

Review :

"ஹவுஸ் மேட்ஸ்" டி.ராஜவேல் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், பிளேய் ஸ்மித் ஸ்டுடியோ, சவுத் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ராஜேஷ் முருகேசன். இந்த படத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இளம் தம்பதியான தர்ஷன் - அர்ஷா சாந்தினி பைஜூ அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், காளி வெங்கட் அவரது மனைவி வினோதினி மற்றும் அவர்களது பிள்ளை வாழ்ந்து வருகிறார்கள்.  ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை அறிவியல், என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். அதே சமயம், இரு குடும்பமும் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்ளும் விசயங்கள், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல அதிர்ச்சியான மற்றும் ஆச்சரியமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவை என்ன ?, இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கான காரணம் என்ன ?,  அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? உள்ளிட்ட கேள்விகளுக்கு அறிவியல் அடிப்படையில், எளிமையாக  பதில் அளிக்க முயற்சித்திருப்பது தான் ‘ஹவுஸ் மேட்ஸ்’.

 

பிரபஞ்சம் எப்படி தோன்றியது, அதன் எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளுக்கு அறிவியல் இன்னும் முழுமையான பதில் அளிக்கவில்லை. இவை தத்துவார்த்த மற்றும் அறிவியல் தேடல்களின் மூலம் ஆராயப்படுகின்றன. அந்த வகையில், அறிவியலில் நம்ப முடியாத பல விசயங்களுக்கு விடை தேடப்பட்டு வருகிறது. அப்படி ஒரு தேடல் தான் இந்த படத்தின் கதைக்கரு.

 

படத்தின் கதையை எளிதில் யூகித்துவிடும்படி டிரைலரை வெளியிட்ட இயக்குநர் டி.ராஜவேல், படத்திற்குள் மிகப்பெரிய அறிவியல் ஆச்சரியத்தை வைத்திருப்பதோடு, அதை சுற்றி நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி பார்வையாளர்களுக்கு புரியவும் வைத்திருக்கிறார். ஆனால், அவர் சொன்ன விளக்கம் புரிந்தாலும், ஏற்றுக்கொள்வதற்கான சரியான தீர்வை சொல்லவில்லை என்பது படத்திற்கு சற்று பலவீனமே.

 

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நம்ப முடியாத விஷயங்களையும், அதனுடன் பயணிக்கும் கதையின் மாந்தர்களின் உணர்வுகளையும் தனது பின்னணி இசை மூலம் பார்வையாளர்கள் மனதில் கடத்தி அவர்களையும் அந்த வீட்டினுள் பயணிக்க வைத்திருக்கிறார்.

 

ஒரே வீடு, இரண்டு வெவ்வேறு கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே வீட்டில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், அவர் தனது கேமரா மூலம் வெவ்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார். 

 

மிகவும் சவால் நிறைந்த பணியை படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் ஷரேஃப் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். கலை இயக்குநர் என்.கே.ராகுலின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல், நம்ப முடியாத விசயத்தை கதைக்கருவாக எடுத்துக் கொண்டாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை அறிவியல் அடிப்படையில் அமைத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார். 

 

கிளைமாக்ஸில் சொல்லப்படும் விசயங்களும், அதற்கான தீர்வும் சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், வசனங்கள் மூலம் அவற்றுக்கும் தீர்வு கொடுத்திருக்கும் இயக்குநர் ராஜவேல், அதை காட்சிகள் மூலம் விவரித்திருந்தால், பார்வையாளர்கள் முழுமையாக திருப்தியடைந்திருப்பார்கள். 

 

பல ஆச்சரியங்கள், சில குழப்பங்கள் இருந்தாலும், தனது முதல் படத்தை புதிய முயற்சியாகவும், சவால் மிகுந்ததாகவும் இயக்கியிருக்கும் இயக்குநர் டி.ராஜவேலை தாராளமாக பாராட்டி வரவேற்கலாம்.

 

"ஹவுஸ் மேட்ஸ்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : புதிய முயற்சி

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA