சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |   

croppedImg_156925724.jpeg

’வெள்ளகுதிர’ விமர்சனம்

Directed by : Harish Ori

Casting : Harish Ori, Abirami Bose

Music :Saranraj Senthilkumar

Produced by : Harish Ori

PRO : Savithri

Review :

"வெள்ளகுதிர" சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் நிஜம் சினிமா – ஹரிஷ் ஓரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பரத் ஆசிகவன். இந்த படத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

 

நாயகன் ஹரிஷ் ஓரி தனது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, சாலை வசதியே இல்லாத தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்துக் கொண்டிருப்பவர், விஷேசங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படும், அங்கு மட்டுமே கிடைக்கும் ஒருவித போதை பொருளை வியாபாரமாக்கி பணம்  சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

 

இதற்கிடையே, அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரித்து, அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஊர் தலைவரின் திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் ஓரியின் மனைவி அபிராமி போஸ்.

 

கணவன் - மனைவி இருவரது முயற்சியால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்பட்டது, இதனால் அந்த மலை கிராம மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது, நாயகனின் தலைமறைவு வாழ்க்கையின் பின்னணி என்ன ? என்பதை கமர்ஷியல் பாணியில் சொல்லியிருப்பது தான் ‘வெள்ளகுதிர’.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கதிர் கதாபாத்திரத்தில் தனது உள்ளத்தில் மறைந்திருக்கும் தீய சிந்தனைகளை அவ்வபோது வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு, தனது குடும்பத்தையும் பிரச்சனைகளில் சிக்க வைக்கும் நபராக நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

 

ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாகவும், அளவான நடிப்பாலும் கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

முன்னாள் ஊர் தலைவர், மலை கிராம மக்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் சிலர் பரிட்சயம்  உள்ள முகமாகவும், பலர் பரிட்சயம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அனைவரும் அந்த மலை கிராம மக்களாக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கும் விதத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பாடல்கள் இல்லை என்றாலும் தனது எளிமையான பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார். 

 

ஒளிப்பதிவாளர் ராம் தேவ், எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருந்தாலும், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.

 

குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள், ஒரே ஒரு லொக்கேஷன் என படம் நகர்ந்தாலும், கதாபாத்திரங்கள் மனநிலை, அவர்களது நடிப்பு ஆகியவற்றின் மூலமாக படத்தை ரசிக்க கூடிய விதத்தில் படத்தொகுப்பாளர்கள் பிரதீப் மற்றும் சரண்ராஜ் செந்தில்குமார் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசாமல், அந்த நிலப்பரப்பில் தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு, ஒரு சஸ்பென்ஸ் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

 

மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வடிவங்களில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் வகையில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார், ஒரு சாதாரண கதையை திறம்பட சொல்லி பார்வையாளர்களின் கவ்னாம் ஈர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

"வெள்ளகுதிர" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : பார்வையாளர்களை கவரும்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA