சற்று முன்
'தி ராஜா சாப்' விமர்சனம்
Directed by : Maruthi
Casting : Prabhas, Nidhhi Agerwal, Sanjay Dutt, Brahmanandam, Riddhi Kumar, Malavika Mohanan, Bhairavi, Yogi Babu
Music :S. Thaman
Produced by : People Media Factory, T.G. Vishwa Prasad
PRO : AIM
Review :
"தி ராஜா சாப்" மாருதி இயக்கத்தில் பீப்பிள்ஸ் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தமன். இந்த படத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரபாஸ் யாரும் இல்லாத அனாதையாக இருந்தாலும், ஒரு பாட்டியின் பாதுகாப்பிலும் அன்பிலும் வளர்ந்து வருகிறார். அந்த பாட்டி எப்போதும் தன் தொலைந்து போன கணவரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர். மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கணவர் பற்றிய நினைவுகள் மட்டும் அவரிடம் அழியாமல் இருக்கின்றன. அவரை கண்டிப்பாக ஒருமுறை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல் கொண்டிருக்கிறார். இதனால் தன்னை வளர்த்த பாட்டிக்காக அந்த கணவரைத் தேடி பிரபாஸ் பயணம் தொடங்குகிறார். அந்தப் பயணத்தில் நிதி அகர்வால், மாளவிகாவுடன் என இருக்கிறார். அதே நேரத்தில் அந்த தாத்தாவான சஞ்சய் தத் ஒரு மாந்திரிகவாதி, பணத்தைத் திருடுபவர் என்பதும் தெரிய வருகிறது. மறுபக்கம், சமுத்திரகனியும் சஞ்சய் தத்தைத் தேடி வருகிறார். இறுதியில் சஞ்சய் தத் உண்மையில் யார், பிரபாஸ் அவரை கண்டுபிடித்தாரா, சமுத்திரகனி யார், அவர் என்ன செய்தார் என்பதே "தி ராஜா சாப்" படத்தின் மீதி கதை.
ராஜா கதாபாத்திரத்தில் பிரபாஸ் மிரட்டலாக நடித்துள்ளார். புதிய லுக்கில் கவர்ந்துள்ளார். ஜாலியான தோற்றத்தில் வந்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். பிரபாஸ் தனது நடிப்பாலும், டைமிங் காமெடியாலும் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.
இதில் நடித்துள்ள மூன்று கதாநாயகிகள் மாளவிகா, நிதி, ரித்தி ஆகியோர் தங்களுக்கான வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். கிளாமர் விஷயத்தில் மூவரும்பொட்டி போட்டு நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாதியில் காமெடி பெரிதாக எடுபடவில்லை, இருப்பினும், இரண்டாம் பாதியில் அந்த குறை ஓரளவு சரிசெய்யப்பட்டு, ஜாலியாக ஆட்டம் பாட்டம் என செம கலக்கு கலக்கியுள்ளார் பிரபாஸ். அதிலும் தன் தாத்தா சஞ்சய் தத்-டன் சவால் விட்டு, பிறகு அவர் ஓடும் காட்சி கிளைமேக்ஸில் காமெடியில் கலக்கியுள்ளார்.
சைக்கலாஜிக்கல் அம்சங்களை கையாளும் விதம் பாராட்டத்தக்கதாகவும், புதுமையுடனும் மனதை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. பார்வையாளரின் சிந்தனைக்கு வேலை கொடுக்கும் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளனர்.
இந்தப் படத்தில் இசை ஒரு முக்கியமான பாலமாக திகழ்கிறது. பாடல்கள் ஓரளவு பரவாயில்லை என்றாலும், அவை மனதில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை மிக மிரட்டலாக இருந்து, படத்தின் முதுகெலும்பாக செயல்படுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் ஒலிக்கும் பின்னணி இசை “வாவ்” என சொல்ல வைக்கும் அளவிற்கு அருமையாக அமைந்துள்ளது.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்து, விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு கூடுதல் வலுவை சேர்க்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை கண்களை கவரும் வகையில் படத்தை முன்னெடுக்கிறது.
எடிட்டிங் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் பல இடங்களில் தளர்வாக தெரிகிறது இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் படம் அதிக வேகமாக இருந்திருக்கும்.
கலை இயக்கம் படத்தின் முக்கிய ஹைலைட்டாக விளங்குகிறது. இயக்குநர் மாருதி தேர்ந்தெடுத்த கதை நல்லதாக இருந்தாலும், புதிய விஷயத்தை சொல்ல முயன்றதை முழுமையாக ஈர்க்கும் வகையில் திரையில் கொண்டு வருவதில் அவர் ஓரளவுக்கே வெற்றி பெற்றுள்ளார்.
முதல் பாதியில் சற்றே பொறுமை இழந்து பார்த்த ரசிகர்களுக்கு இடைவேளைக்கு முன் பிரபாஸ் தனது தாத்தாவின் பேய் பங்களாவை நடுக்காட்டின் மத்தியில் கண்டுபிடித்து அதற்குள் நுழையும் தருணத்திலிருந்தே கதை வேகமெடுக்கிறது. பிரபாஸ் பயத்தில் நடுங்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
பிச்சைக்காரராக இருக்கும் சஞ்சய் தத் திடீரென சமஸ்தானத்தையே கைப்பற்றும் மந்திரவாதியாக மாறுவதும், அங்கேயே இருந்து சொத்துக்களை அனுபவித்து வாழாமல் அவற்றை திருடிச் செல்வதும், அதன் பின்னர் அம்மு அபிராமியை மெஸ்மரைஸ் செய்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஏன் என்பதெல்லாம் பெரிய கேள்வியாக எழுகிறது. தாத்தாவே பேயாக இருப்பதால் அவர் எப்படிப் பயமுறுத்தினாலும், பிரபாஸ் சிறிதும் பயப்படாமல் பஞ்ச் வசனம் பேசும் காட்சிகள் ஓவர் டோஸ் என தோன்றுகின்றன. ஆனால் இறுதியில் மைண்ட் கேம் வைத்து விளையாடும் இடங்களில் அவரது நடிப்பும், குறிப்பாக மருத்துவமனை காட்சிகளில் காட்டும் பர்ஃபார்மன்ஸும், படத்தை தூக்கி நிறுத்தும் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.
காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருந்தாலும், திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அதை மேலும் தெளிவாக எழுதியிருக்கலாம், படம் இன்னும் பெரிய ஹிட்டாக மாறியிருக்கும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, படம் முதல் பாதியில் சற்று மெதுவாக நகர்வதாக தோன்றினாலும், இரண்டாம் பாதியில் அந்த குறையை ஓரளவு ஈடு செய்துள்ளனர். அதே நேரத்தில் பல இடங்களில் காமெடி காட்சிகள் வேலை செய்யாமல் போவதும், லாஜிக் இல்லாத காட்சிகள் அதிகமாக இருப்பதும் குறையாக தெரிகிறது.
"தி ராஜா சாப்" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















