சற்று முன்

பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |   

croppedImg_662858563.jpeg

'கருப்பு பல்சர்' விமர்சனம்

Directed by : Murali Krish

Casting : Attakathi Dinesh, Mansoor Ali Khan, Reshma Venkatesh

Music :Inba

Produced by : Yasho Entertainment

PRO : Mani Madhan

Review :

"கருப்பு பல்சர்" முரளி கிரிஷ் இயக்கத்தில் யாஷோஎன்டேர்டைமன்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை இன்பா. இந்த படத்தில் அட்ட கத்தி தினேஷ்,ரேஷ்மா வெங்கடேஷ், மன்சூர் அலிகான்,சரவணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

மதுரையைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்யும் ஆர்ஜை, ஒரு பயங்கர கனவால் அடிக்கடி கலங்குகிறார். கருப்பு நிற பல்சர் பைக் விபத்தில் சிக்கி, ஜல்லிக்கட்டு காளை மோதுவது போல அந்த கனவு அவரை தொடர்ந்து துரத்துகிறது. இதன் காரணமாக, அவர் வைத்திருக்கும் கருப்பு பல்சர் பைக்கை, தன்னிடம் கடன் பெற்ற தண்ணீர் கேன் வியாபாரி மன்சூர் அலி கானிடம் ஒப்படைக்கச் சொல்கிறார்.

 

அந்த கருப்பு பல்சர் யார் கைக்கு சென்றாலும், அதில் காதல் ஜோடியாக பயணம் செய்தால் விபத்து நடக்கும் என்ற ஒரு அச்ச உணர்வு கதையில் உருவாக்கப்படுகிறது. இதற்கிடையில், வாட்டர் ஃபில்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் தினேஷை, தனது வியாபாரத்திற்கு எதிரியாக நினைக்கும் மன்சூர், அவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறார்.

 

அதே சமயம், தினேஷின் காதலி ரேஷ்மா, அந்த கருப்பு பல்சரில் தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்கிறார். இதனால் தினேஷ், மன்சூரிடம் இருந்து அந்த பைக்கை வாங்கிக் கொள்கிறார். அந்த பைக்கில் சென்றால் தினேஷ் உயிரோடு இருக்க மாட்டார் என்று நம்பும் மன்சூர், மகிழ்ச்சியுடன் பைக்கை அவரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் தினேஷ் உயிர் தப்பினாரா? ஆர்ஜையை துரத்தும் கனவுக்கும், அந்த கருப்பு பல்சர் பைக்கும், ஜல்லிக்கட்டு காளைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதே 'கருப்புபல்சர்' படத்தின் கதை.

 

இந்த படத்தில் தினேஷுக்கு வயதுக்கு ஏற்ற, சுறுசுறுப்பான வேடம். அவர் வழக்கமான இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜல்லிக்கட்டு வீரராக அவர் தோன்றுவது கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. நாயகிகளாக ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் மதுனிகா நடித்திருந்தாலும், பாத்திர அமைப்பில் மதுனிகா சற்றே முன்னிலையில் நிற்கிறார்.

 

மன்சூர் அலி கான் தோன்றும் காட்சிகளில், அவர் அடிக்கடி அசைவ உணவை வெட்டிக் கொண்டிருப்பது கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளமாக அமைக்கப்பட்டுள்ளது. கதையின் முடிச்சை அவிழ்க்க சரவண சுப்பையாவின் பங்கு உதவியாக உள்ளது. பிராங்க் ஸ்டார் ராகுல் சில இடங்களில் சிரிப்பையும் ரசனையையும் கூட்டுகிறார்.

 

பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு, குறைந்த செலவில் படத்தை அழகாக காட்டுகிறது. இசையமைப்பாளர் இன்பா, பாடல்களையும் தானே எழுதி தனது வருகையை கவனிக்க வைக்கிறார்.

 

கதை, வசனம், இயக்கம் என மூன்றையும் கவனித்திருக்கும் முரளி கிரிஷ். எஸ், ஒரு வணிக ரீதியான கதைக்குள் பயம், சஸ்பென்ஸ் மற்றும் சமூக கருத்துகளை கலந்து சொல்ல முயன்றிருப்பது பாராட்டத்தக்கது.

 

"கருப்பு பல்சர்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : ஹாரர், சஸ்பென்ஸ், சமூக கருத்துகள் கலந்து உருவான கமர்ஷியல் படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA