சற்று முன்

‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |    சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்   |    'அரிசி என்பது உணவு மட்டுமல்ல, உரிமையும் கூட' – உதயநிதி ஸ்டாலின் உணர்வுபூர்வப் பேச்சு   |    டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |   

croppedImg_1766397214.jpeg

'லவ் ஷேர் சப்ஸ்க்ரைப்' (L.S.S) விமர்சனம்

Directed by : R. Mahalakshmi Murugan

Casting : Aadhav Krishna, Simran, Badava Gopi, Vinodhini, Jawa Sundaresan, Rohit, Dhananjeyan, Muthu Buvan

Music :Ashwamithra

Produced by : P. Raghu

PRO : AIM

Review :

 

 

"லவ் ஷேர் சப்ஸ்க்ரைப்" (L.S.S) R. மகாலட்சுமி முருகன் இயக்கத்தில்  P. ரகு தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அஷ்வமித்ரா. இந்த படத்தில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, சாம்ஸ், படவா கோபி, விநோதினி வைத்தியநாதன், ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

தாயை பிரிந்து தந்தையுடன் வாழும் சிம்ரன், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும், காதல் பற்றி சிந்திக்காத ஆதவ் கிருஷ்ணா மீது காதலில் விழுகிறார். ஆரம்பத்தில் சீரியஸாக இல்லாத ஆதவ் கிருஷ்ணா, சிம்ரனின் உண்மையான அன்பை புரிந்துகொண்டு அவரை ஏற்கிறார்.

 

சிம்ரன் தன்னுடைய காதலை ஆதவ் கிருஷ்ணாவின் குடும்பத்திடம் வெளிப்படையாகச் சொல்லி சம்மதம் பெறுகிறார். அதேபோல் தன் தாயிடமும் இதை பகிர விரும்பி, ஆதவ் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு பெரம்பூரிலிருந்து காசிக்கு ரயிலில் செல்கிறார். ஆனால் காசியில் எதிர்பாராத பிரச்சினை ஒன்று உருவாகிறது. அந்த சிக்கல் காதலர்களின் உறவையும் மனவலிமையையும் சோதிக்கிறது. அந்த பிரச்சினையிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள், சிம்ரன் தாயாரை சந்தித்தார்களா? என்பதே "லவ் ஷேர் சப்ஸ்க்ரைப்" படத்தின் கதை.

 

ஆதவ் கிருஷ்ணா அறிமுக நாயகனாக இருந்தாலும், மிகவும் இயல்பும் நம்பிக்கையும் நிறைந்த நடிப்பை வழங்குகிறார். குறிப்பாக காதல் மலரும் தருணங்களிலும், கிளைமாக்ஸ் காட்சிகளிலும் அவரது உணர்ச்சி வெளிப்பாடு கதையின் தாக்கத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

 

சிம்ரன் தாயை பிரிந்து ஏங்கும் மகளாகவும், காதலில் உறுதியுடன் நிற்கும் இளம்பெண்ணாகவும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவரது கண்களில் வெளிப்படும் ஏக்கம் சில காட்சிகளில் நேரடியாக மனதை தொடும் வகையில் அமைந்துள்ளது.

 

பெரம்பூர் ரயில்வே நிலையத்துக்குச் செல்ல லிஃப்ட் கேட்ட ஒருவருக்கு உதவும் சாம்ஸ், அதனால் எதிர்பாராத விதமாக பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அந்த சிக்கலை சமாளிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ச்சியான கலகலப்பை உருவாக்குகின்றன.

 

ஆதவ் கிருஷ்ணாவின் தந்தையாக படவா கோபியும், அவரது மனைவியாக விநோதினி வைத்தியநாதனும் நடித்துள்ளனர். அனுபவம் மிக்க இந்த இரு நடிகர்களுக்கும் கதையில் முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களின் கதாபாத்திரங்களை இன்னும் வலுவாக வடிவமைத்திருந்தால் படத்திற்கு கூடுதல் தாக்கம் ஏற்பட்டிருக்கும்.

 

இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பின்னணி இசை மற்றும் பாடல்களில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருந்தால் கதையின் உணர்வுகளின் ஆழம் அதிகரித்திருக்கும். சில இடங்களில் இசை காட்சிகளின் தாக்கத்தை உயர்த்த வேண்டிய நிலையில், அது முழுமையாகப் பயன்படாதது குறையாகத் தெரிகிறது.

 

ஒளிப்பதிவாளர் N.S. சதீஷ் குமார் தனது ஒளிப்பதிவின் மூலம் காசி நகரின் பின்னணியை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவந்துள்ளார். காசியின் படித்துறைகள் மற்றும் கங்கை நதியின் ஓடங்கள் போன்ற இயற்கை மற்றும் பாரம்பரிய காட்சிகளை அவர் அழகாகப் பதிவு செய்து, படத்திற்கு தனித்துவமான காட்சியமைப்பைச் சேர்த்துள்ளார்.

 

நாயகியின் தந்தையான வில்லன், ‘நான் மனசு மாறினாலும் மாறிடுவேன்’ என்று சொல்லிக்கொண்டே மிரட்ட முயல்வது அவரது வில்லத்தனத்தை பலவீனப்படுத்துகிறது. அதனால் அந்தக் காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாமல் வலுவற்றதாகவே கடந்துவிடுகின்றன. மேலும், மகளைக் கொல்ல முயன்றவர்கள்மீது கூட வில்லனுக்கு எந்தக் கோபமும் வெளிப்படாதது கதையின் நம்பகத்தன்மையை குறைக்கிறது. அதே நேரத்தில், பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காதவர்களிடம் நாயகன் உதவி கேட்டு அழுது கெஞ்சும் வகையில் இயக்குநர் மகாலட்சுமி முருகன் சித்தரித்திருப்பது கதாபாத்திரங்களின் வலிமையை சிதைக்கிறது.

 

இயக்குநர் மகாலட்சுமி முருகன், இன்றைய இளைஞர்களின் மனநிலையை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு திரைக்கதையை வடிவமைத்துள்ளார். சமூக வலைதளங்களை வெறும் பின்னணிக் கருவியாக அல்லாமல், கதையின் முக்கிய அங்கமாக இணைத்திருக்கும் அவரது அணுகுமுறை தனித்துவமாகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ளது.

 

கதையின் இரண்டாம் பாதியை போல் முதல் பாதி கதை வேகமாக சென்றிருந்தால், படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். படத்தின் முக்கியமான காதல் உணர்வு தெளிவாக வெளிப்பட்டு, அது பார்வையாளர்களின் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

 

மொத்தத்தில், குறைகளுடன் இருந்தாலும் காதலை மையமாகக் கொண்ட இந்த படம் ஒருமுறை பார்க்கக்கூடிய மென்மையான காதல் பயணம்.

 

"லவ் ஷேர் சப்ஸ்க்ரைப்" (L.S.S) படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : குறைகளுடன் இருந்தாலும் மனதை தொட்டுச் செல்லும் மென்மையான காதல் கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA