சற்று முன்

‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |   

croppedImg_1006377767.jpeg

’தடயம்’ இணையத் தொடர் விமர்சனம்

Directed by : Navinkumar Palanivel

Casting : Samuthirakani, Shivada, Raj Tirandas, Munnar Ramesh, Sundharpandyan, Prem, Kotravai, Vishakan, Pulipandi, Abhishek Joseph George, Ravichandran, Karthi, Suparna, Dayalan

Music :Vibin Baskar

Produced by : Ajey Krishna

PRO : AIM

Review :

 

 

"தடயம்" இணையத் தொடர் நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை விபின் பாஸ்கர். இந்த படத்தில் சமுத்திரக்கனி , ஷிவதா , ராஜ் திரன் தாஸ், பிரேம், மூணாறு ரமேஷ், சுந்தர் பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி, விநாயகன், புலிப்பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

ஆந்திர எல்லையை ஒட்டிய தமிழக கிராமத்தில் தொடங்கும் கொடூர இரட்டை கொலைகள், அதே மாதிரியான முறை, எந்தத் திருட்டும் இல்லை, ஆனால் ஆணின் அருணாக்கயிறும் பெண்ணின் தாலிச் சங்கிலியும் மட்டும் பறிப்பு. இந்த வினோதத் தடயமே தொடரின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

 

சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரகனி ஆரம்ப விசாரணையில் சில முக்கிய தகவல்களை சேகரித்திருந்தாலும், அவரை தனிப்படையில் சேர்க்க வேண்டாம் என்று மேலதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் இன்ஸ்பெக்டர் ஷிவதா, அவரது திறனை நம்பி விசாரணைக் குழுவில் இணைக்கிறார். அதன்பின் வெளிவரும் உண்மை அதிர்ச்சியூட்டுகிறது — இது நான்கு பேரின் கொலை அல்ல, 60-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட தொடர் கொலை என்று. முகம் தெரியாத கொலையாளிகளை பிடிக்க களமிறங்கும் காவல்துறை குழுவினரிடம் அவர்கள் எவ்வாறு சிக்கினார்கள்? அந்த தொடர் கொலைகளின் பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான காரணம் என்ன? என்பதே "தடயம்" இணையத் தொடரின் மீதி கதை.

 

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, வழக்கமான உரத்த வசனங்களையும் ஆவேசமான வெளிப்பாடுகளையும் தவிர்த்து, அமைதியாகவும் உள்ளார்ந்த தீவிரத்துடனும் செயல்படும் முதிர்ச்சியான எஸ்.ஐ. அதியமான் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கூர்மையான புலனாய்வு திறன் மற்றும் அறிவார்ந்த அணுகுமுறை கொண்ட அதிகாரியாக அவர் காட்டிய கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பு கவனம் ஈர்க்கிறது. விரக்தியில் சோர்ந்திருக்கும் ஒருவராக தொடங்கி, மீண்டும் தனது திறமையை நிரூபிக்கும் அதிகாரியாக உயர்வது மிகவும் நம்பகமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

காவல் ஆய்வாளர் லட்சுமி வேடத்தில் நடித்துள்ள ஷிவதா, அளவான மற்றும் நம்பகமான நடிப்பை வழங்கியுள்ளார். காவல்துறை அதிகாரி என்றாலே கடுமையான முகபாவனை அவசியம் என்ற வழக்கமான காட்சியமைப்பை மாற்றி, மிடுக்கான தோற்றத்துடனும் அதிகாரத் தன்மையுடனும் ஒரு பெண் அதிகாரியை சித்தரிக்க இயக்குநர் முயன்றுள்ளார்; அதற்கு ஷிவதா மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

 

மேலும், கொலையாளிகளாக வரும் ராஜ் திரன் தாஸ் மற்றும் பிரேம் இருவரும் தங்களது பாத்திரங்களில் முழுமையாக ஒட்டியுள்ளனர். குறிப்பாக அவர்களின் உடல் மொழி, பார்வை மற்றும் அமைதியான அச்சுறுத்தல் ஆகியவை அந்த கதாபாத்திரங்களுக்கு கூடுதல் வலிமை சேர்க்கின்றன.

 

விபின் பாஸ்கர் அமைத்த பின்னணி இசை காட்சிகளின் தீவிரத்தை கணிசமாக உயர்த்துகிறது. குறிப்பாக இரவு நேரக் காட்சிகளில், சத்தமற்ற அமைதியே ஒரு தனித்துவமான இசையாக மாறி பயமூட்டும் மனநிலையை உருவாக்குகிறது.

 

ஒளிப்பதிவாளர் கே.கே தனது கேமரா மொழியின் மூலம் 1990-களின் கிராமப்புறச் சூழலை மிகத் துல்லியமாக உயிர்ப்பித்துள்ளார். இரவு நேரக் காட்சிகளின் இருண்மையும், எல்லைப் பகுதிகளின் வறட்சியையும் யதார்த்த உணர்வுடன் பதிவு செய்திருப்பது சிறப்பு.

 

படத்தொகுப்பாளர் தினேஷ் குமார் தேவையற்ற காட்சிகளை நீக்கி, கதைக்கு ஏற்ற சீரான வேகத்தை எடிட்டிங்கின் மூலம் வழங்கியுள்ளார்.

 

இயக்குநர் நவின்குமார் பழனிவேல், ஒரு உண்மைச் சம்பவத்தை சினிமாவிற்காக மாற்றியமைக்கும் போது நேர்மையையும் நம்பகத்தன்மையையும் காக்கிறார். தேவையற்ற கமர்ஷியல் சமரசங்கள் இன்றி, திரில்லர் பாணியில் கதையை நகர்த்தியுள்ளார். கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கும் புலனாய்வுத் தளத்திற்கும் சமமான முக்கியத்துவம் வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது.

 

தடயம் தொடரின் மிகப்பெரிய பலம் அதன் மனிதநேயத் தளத்திலேயே இருக்கிறது. கதாபாத்திரங்களின் உளவியல் பரிமாணங்கள் நுட்பமாகவும் நம்பகமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் அவர்களுடன் உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. ஒரு சாதாரண குற்றத் த்ரில்லராக இல்லாமல், மனித மனத்தின் சிக்கல்களையும் வலிகளையும் ஆராயும் முயற்சியாக இது திகழ்கிறது.

 

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர், வெறும் குற்ற விசாரணை கதையாக மட்டும் இல்லாமல் மனித மனத்தின் இருண்ட பரிமாணங்களை ஆராயும் மனஉளவியல் திரில்லராக திகழ்கிறது. விறுவிறுப்பான கதை நகர்வு, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் முதிர்ச்சியான நடிப்புகள், 1990-களின் கிராமப்புறச் சூழலை நம்பகமாக மீட்டெடுக்கும் தொழில்நுட்ப தரம் ஆகியவை தொடரின் முக்கிய பலங்கள்.

 

"தடயம்" இணையத் தொடருக்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : மனஉளவியல் திரில்லர்களை விரும்புவோருக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA