சற்று முன்
’ஓ பட்டர்ஃப்ளை’ விமர்சனம்
Directed by : Vijay Ranganathan
Casting : Nivedhithaa Sathish, Ciby Chandran, Attulm Nassar, Lakshmi Priyaa Chandramouli, Geetha Kailasam
Music :Vaisagh Somanath
Produced by : Anthill Cinema & Palampur Talkies - Venkky, Anand S Shah, Vijay Ranganathan, Nisha Patial
PRO : Riaz K Ahamed
Review :
‘‘ஓ பட்டர்ஃப்ளை" விஜய் ரங்கநாதன் எழுத்து இயக்கத்தில் அதில் சினிமா & பலம்பூர் டாக்கீஸ் - வெங்கி, ஆனந்த் S ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பட்டேல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை வைசாக் சோமநாத். இந்த படத்தில் நிவேதிதா சதிஷ், லட்சுமி பிரியா சந்திரமெளலி, சிபி சந்திரன், அதுல், நாசர், கீதா கைலாசம், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
“இதற்குக் காரணம் நான் தான்”, “நான் சொன்னது போலவே நடக்கிறது” என்று பலர் வாழ்க்கையில் சில நேரங்களில் நம்புவார்கள். ஆனால் உண்மையில் பல விஷயங்கள் தற்செயலாகவே நடக்கின்றன; அதற்கு மனிதர்கள் நேரடியாக காரணம் அல்ல என்பதையே இந்த படம் சொல்ல முயல்கிறது.
திருமணமாகி சில மாதங்களிலேயே கணவரை இழந்த நிவேதிதா சதிஷ் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார். தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தானே காரணம் என்று நினைத்து வருந்துகிறார். இறுதியில், தான் இறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்துடன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார்.
அப்போது அவருக்கு ஆறுதல் கூறி உண்மையை புரிய வைக்க அவரது சகோதரி லட்சுமி பிரியா முயற்சி செய்கிறார். அந்த சமயத்தில் நிவேதிதா தனது திருமண வாழ்க்கையும் முதல் காதலும் பற்றி பேசுகிறார். அதில், தனது கணவரை தானே கொலை செய்ததாக கூறி அதிர்ச்சி அளிக்கிறார். அவர் ஏன் அப்படி சொல்கிறார்? அவரது கணவரின் மரணத்தின் உண்மை என்ன? என்பதே "ஓ பட்டர்ஃப்ளை" படத்தின் கதை.
நாயகியாக நடித்துள்ள நிவேதிதா சதிஷ், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு பல இடங்களில் சாதாரணமாகவே தெரிகிறது. கதையின் முக்கியமான உணர்ச்சி காட்சிகளில் கூட அவர் அதிக பதற்றம் அல்லது பயத்தை வெளிப்படுத்தாமல் நடித்திருப்பது அந்த காட்சிகளின் தாக்கத்தை குறைக்கிறது.
நிவேதிதாவின் முன்னாள் காதலராக நடித்துள்ள சிபி சந்திரன் மற்றும் கணவராக நடித்துள்ள அதுல் இருவரும் தங்களது வேடங்களை நன்றாக செய்துள்ளனர். குறிப்பாக அதுல் அமைதியாகவும் அளவாகவும் நடித்திருப்பது சிறப்பாக உள்ளது.
சிறிய வேடத்தில் வந்தாலும் நாசர் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். துறவறம் எடுத்த சகோதரியாக நடித்துள்ள லட்சுமி பிரியா சந்திரமெளலி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கீதா கைலாசம் நடித்த கதாபாத்திரமும் நினைவில் நிற்கிறது.
வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் பெரிதாக நினைவில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி உள்ளது.
ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், சிறிய சம்பவங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் இருப்பதை தனது கேமரா வேலை மூலம் காட்டியுள்ளார்.
படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன், ஆரம்பத்தில் சற்று குழப்பமாக இருக்கும் கதையை இறுதியில் தெளிவாக புரியும்படி அமைத்துள்ளார்.
இயக்குநர் விஜய் ரங்கநாதன், வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்கள் தற்செயலாக நடப்பவை தான் என்பதை ஒரு தத்துவமாக காட்சிகள் மூலம் சொல்ல முயற்சி செய்துள்ளார்.
ஆனால் இந்த கருத்தை அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் சொல்லாமல், மிகவும் மெதுவாக கதையை நகர்த்தியிருப்பது படத்தின் குறையாகிறது.
ஒரு பெண்ணின் மன உளைச்சல் மற்றும் குழப்பமான மனநிலையை படம் நன்றாக காட்டினாலும், கதையின் மெதுவான நடை பார்வையாளர்களை சற்றே சலிப்படைய செய்கிறது.
"ஓ பட்டர்ஃப்ளை" படத்திற்கு மதிப்பீடு 2.75/5
Verdict : பொறுமையாக பார்த்தால் ரசிக்கக்கூடிய, சிந்திக்க வைக்கும் ஒரு மெதுவான டிராமா படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















