சற்று முன்
’வடம்’ விமர்சனம்
Directed by : Kenthiran.V
Casting : Vimal, Natraj, Sanashka Sri, Munishkanth, Naren, Indhumathi, Balasaravanan, Madhusoothan Rao, Deepa Shankar
Music :D Imman
Produced by : Masani Pictures - Rajasekar.R
PRO : Sathishkumar
Review :
‘‘வடம்" கேந்திரன்.வி இயக்கத்தில் மாசாணி பிக்சர்ஸ் - ராஜசேகர் .R தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை D இம்மான். இந்த படத்தில் நட்ராஜ் , விமல் சனஷ்கா ஸ்ரீ, முனீஷ்காந்த், நரேன், இந்துமதி, பாலசரவணன், மதுசூதன் ராவ், தீபா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஊரில் பெரிய மனிதராக இருக்கும் நரேன், அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளை காப்பாற்றி தனது கோசாலையில் வளர்க்கிறார். அவரது மகன் விமல் கூட மாடுகள் மீது அதிக பாசம் கொண்டவர்.
ஒரு நாள் உடல் குறைபாடு உள்ள ஒரு கன்றுக்குட்டியை விமல் வீட்டில் வைத்து வளர்க்கிறார். அதை சிறப்பாக பயிற்சி கொடுத்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக உருவாக்குகிறார். பல வருடங்களாக யாராலும் அடக்க முடியாத காளை என்ற பெயருடன் அது பிரபலமாகிறது.
இதற்கிடையில், அந்த காளை காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறது. அதே சமயம் விமல் ஒரு கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வருகிறார். நீதிமன்றத்தில் கூட அவரை கொலை செய்ய சிலர் முயற்சி செய்கிறார்கள். மேலும், அவரது வீட்டில் வேலை பார்த்த ஒருவரும் அவருக்கு எதிராக திட்டம் போடுகிறார்.
இவ்வளவு பிரச்சனைகளால் விமல் வாழ்க்கையில் சோகமாக இருக்கிறார். அந்த நேரத்தில் நாயகி சனஷ்கா ஸ்ரீயின் காதல் அவருக்கு மீண்டும் மகிழ்ச்சியை தருகிறது.
காதல் மூலம் மன உற்சாகம் பெற்ற விமல், தனது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொள்ள தயாராகும் நிலையில், நாயகி ஒரு பெரிய அதிர்ச்சி தருகிறார். அந்த அதிர்ச்சி என்ன? விமல் தனது எதிரிகளை சமாளித்தாரா? அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்றதா? என்பதே வடம் படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய பல படங்கள் வந்துள்ளன. ஆனால் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை மையமாக வைத்து வந்திருப்பது இந்த படத்தின் தனிச்சிறப்பு.
விமல், மாடுகளை நேசிக்கும் மனிதராக தனது வழக்கமான எளிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுவாக ஹீரோக்கள் காளையை அடக்கும் வீரராக நடிப்பார்கள். ஆனால் இதில் காளையின் உரிமையாளராகவே அவர் கெத்து காட்டுகிறார்.
சனஷ்கா ஸ்ரீ, அழகாக தோன்றுகிறார். ஆனால் அவருக்கு அதிக காட்சிகள் இல்லாதது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.
நட்டி நட்ராஜ், வெற்றியை மட்டுமே நினைக்கும் மனிதராக வலுவான நடிப்பை கொடுத்துள்ளார்.
முனீஷ்காந்த், இந்த படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். அவரது இயல்பான நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
நரேன், விமலின் தந்தையாக தனது அனுபவத்தை காட்டுகிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்.
டி.இமான் இசையில் பாடல்கள் அதிகம் நினைவில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை சராசரியாக உள்ளது.
இயக்குநர் கேந்திரன்.வி, மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு ஒரு கமர்ஷியல் கதையை சொல்ல முயற்சி செய்துள்ளார். கதை புதிதாக இல்லாவிட்டாலும், பகைமை, காதல், கிராம வாழ்க்கை ஆகியவற்றை சேர்த்து ஒரு பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார்.
"வடம்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : சராசரி கமர்ஷியல் படம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















