சற்று முன்

நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா!   |    உப்பள தொழிலாளர்களின் வாழ்வியலை மையமாக கொண்டுள்ள படம் 'உயிர் மூச்சு'!   |    4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!   |    எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி   |    சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் திறந்து வைத்த 'DCutz By Dev' சலூன்   |    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை பேசும் ’சாரி’   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்!   |    வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்   |    மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படம்!   |    டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!   |    விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |   

சினிமா செய்திகள்

தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்”
Updated on : 17 February 2015

தமிழ் திரையுலகின் இன்று உடனடி தேவையை புரிந்து கொண்ட திரு ஆதித்யராம் அவர்கள், “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” என்னும் படப்பிடிப்பு தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவி நடத்தி வருகிறார்.
தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் இடமாக தற்போது இவரின் “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” திகழ்ந்துவருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு புகாத படப்பிடிப்புதளமாக இருப்பது ஆதித்யாராம் ஸ்டுடியோஸீற்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.
இருபத்தைந்து ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கிறது. இரண்டு பகுதிகளாக மொத்தம் இருபத்தைந்து ஏக்கரை உள்ளடக்கியது ஆதித்யாராம் ஸ்டூடியோஸ்.
இங்குதான் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட படங்களான உலகநாயகன் கமல் ஹாசனின் “தசவதாரம்” மற்றும் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்”  படங்களுக்கான அரங்குகள் அமைக்கபெற்று படப்பிடிப்புகள் மேற்கொள்ள பட்டன.
தற்போது இளையதளபதி விஜய், ஹன்சிகா மொத்வானி, ஸ்ருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில், பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் “புலி” படத்தின் பிரத்யேகமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. படப்பிடிப்பு வளாகத்தின் முதல் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் புலி படத்தின் பாடலுக்கான அரங்குகள் அமைக்கபட்டு படபிடிப்பு நடைப்பெற்று வந்தன.
ஆதித்யாராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஆதித்யாராம் அவர்கள் ஒரு வெற்றி படத்தயாரிப்பாளர். இவர் தயாரித்த “ஏக் நிரஞ்சன்”, “குஷி குஷிகா”, “ஸ்வக்தம்”, “சண்டதே சண்டதே” படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா