FLASH NEWS

தளபதி விஜய்யுடன் நடித்தால் தான் நடிகையா? நான் நிர்வாணமாக நடிக்க தயார்   |    மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ – சினிமா விமரிசனம்   |    வேதனையை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா!   |    ஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்   |    ஓலா பயணத்தில் என்ன நடந்தது - பார்வதி நாயர் விளக்கம்   |    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாமீது ஒழுங்கு நடவடிக்கை நிச்சயம்   |    விஜய்க்கு ஜோடியானால் மட்டும் தான் அது நடக்குமா? நானும் நல்ல நடிகைதான்   |    என்னது நடிகை அஞ்சலியா இது- என்ன இப்படி மாறிவிட்டார்?   |    சமூக வலைதள பிரபலம் பிரியா வாரியருக்கு அடித்த அதிர்ஷ்டம்   |    சாய் பல்லவி அதிரடி: ஹீரோக்கள் கலக்கம்   |    அரசியலுக்கு வருவேன் : வரலட்சுமி சரத்குமார்   |    கேளிக்கை வரியை எதிர்த்து திரையரங்குகள் 16-ந்தேதி முதல் மூடப்படும்   |    உதயநிதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர் - இந்துஜா   |    கேரள அரசு சினிமா விருது - சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு   |    பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சிம்பு   |    இன்று திருமண பந்தத்தில் இணையும் நடிகர் பார்த்திபன்   |    தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 தனுஷ் தான்   |    ஒரேபடத்தில் 14 காமெடி நடிகர்கள்!   |    நிகழ்ச்சியில் பங்கேற்க இரு சக்கர வாகனத்தில் வந்த சாய்பல்லவி!   |    ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு   |   

Movie News

ஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்
Updated on : 13 March 2018

தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்குகளால் தத்தளிக்கிறது. 2 வருடங்களாக திரைப்பட சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சினிமா தொழில் அடியோடு பாதித்து உள்ளது. சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி பெரிய சவாலாக வந்தது. எதிர்ப்புகளால் ரூ.100-க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்று அதை குறைத்தனர்.30 சதவீத கேளிக்கை வரியும் திரையுலகை அழுத்தியது. இதற்காக தியேட்டர்களை 4 நாட்கள் மூடினர். பிறகு அந்த வரியை 8 சதவீதமாக குறைத்தனர். பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் 13 நாட்கள் படப்பிடிப்புகள் பாதித்தன. தற்போது தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் குதிப்பதால் பட உலகம் முற்றிலுமாக முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பட அதிபர்கள் கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்று அறிவித்து உள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவா இயக்கத்தில் அஜித்குமார்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் விசுவாசம் படப்பிடிப்பு வருகிற 23-ந் தேதி தொடங்க இருந்தது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம், விஷால் நடிக்கும் சண்டகோழி-2, தனுஷ் நடிக்கும் வடசென்னை, மாரி-2, சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.இந்த படப்பிடிப்புகள் 16-ந் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன. படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர். பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் வருத்தத்தில் உள்ளனர்.விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதால் தீபாவளிக்கு அவற்றை கொண்டு வர முடியுமா? என்று படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர். தியேட்டர் அதிபர்கள் கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-ந் தேதி முதல் திரையரங்குகளை மூடுகிறார்கள். ஸ்டிரைக்கால் திரையுலகம் முடங்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.

 

Latest News

  • SPORTS  
  • |
  • CINEMA