சற்று முன்

4 ஆம் தேதி வெளியாகிறது இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’!   |    எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை! - நடிகர் கார்த்தி   |    சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் திறந்து வைத்த 'DCutz By Dev' சலூன்   |    ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிளாக்மெயில்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை பேசும் ’சாரி’   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம், ஆயிரக்கணக்கில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள்!   |    வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட்   |    மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படம்!   |    டேனியல் பாலாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர் பி எம் (RPM) படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    ZEE5 தளம் வழங்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை' காமெடி சீரிஸ்!   |    விரைவில் வெளிவரவிருக்கும் “கொஞ்சநாள் பொறு தலைவா” பட டிரெல்யர் வெளியீட்டு விழா!   |    பான் இந்திய திரைப்படமான ' பெடி ( PEDDI) ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    மதுரை - திருச்சியில் 'சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' ப்ரமோஷன்!   |    பாரதிராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதி காலமானார்!   |    'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்   |    விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் பிட்னஸ்' ஜிம்   |    பெங்களூரூவில் நடைபெற்ற 'வீரதீர சூரன் பார்ட் 2 ' பட ப்ரமோஷன்!   |    கோலாகலமாக நடைபெற்ற 'எம்புரான்' பட தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு விழா!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 'யோலோ' படத்தின் முதல் சிங்கிள்!   |    EMI வாழ்க்கை போராடியே சாக வைத்து விடுகிறது! - இயக்குநர் பேரரசு   |   

மத்திய அமைச்சரவையில் மாற்றம்; பட்டியல் இணைப்பு
Updated on : Wednesday July-06 2016

மத்திய அமைச்சரவையில் 17 புதுமுகங்கள் உட்பட, 19 பேர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதன்போது, மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்த ஸ்மிருதி இரானி, ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டார்.

 

பிரகாஷ் ஜவடேகருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து, அவர்  மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சரானார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் கவனித்து வந்த நகர்ப்புற வளர்ச்சித் துறையையும் வெங்கய்ய நாயுடுவே கவனிக்கிறார்.

 

தொலைத்தொடர்பு துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் கூடுதல் பொறுப்பாக சட்டத் துறையையும் ஏற்றுள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை பொறுப்பில் விஜய் கோயல்  நியமிக்கப்பட்டார். நிதித் துறையில் இருந்த இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, விமானப் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

புதிய மத்திய அமைச்சரவை பட்டியல்:

 

நரேந்திர மோடி - பிரதமர், தனிநபர் நலன், பொதுமக்கள் குறைதீர், பென்ஷன், அணுசக்தி, விண்வெளித்துறை

 

கேபினட் அமைச்சர்கள்

 

1. ராஜ்நாத்சிங் - உள்துறை

2. சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத்துறை

3. அருண்ஜெட்லி - நிதித்துறை

4. வெங்கையா நாயுடு - நகர அபிவிருத்தி, வீட்டுவசதி, நகர்புற வறுமை ஒழிப்புத்துறை மற்றும் தகவல் தொடர்பு, ஒளிபரப்பு துறை.

5. நிதின்கட்கரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கப்பல் போக்குவரத்துறை

6. மனோகர் பாரிக்கர் - பாதுகாப்புதுறை

7. சுரேஷ்பிரபு - ரயில்வே

8. சதானந்த கவுடா - புள்ளியில் துறை

9. உமாபாரதி - நீர்வளம், நதி அபிவிருத்தி, கங்கை சீரமைப்பு

10. நஜ்மா ஹெப்துல்லா - சிறுபான்மை நலத்துறை

11. ராம்விலாஸ் பஸ்வான் - நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகம்

12. கல்ராஜ் மிஸ்ரா - சிறு, குறு, நடுத்தர தொழில்துறை

13. மேனகா காந்தி - பெண்கள், குழந்தைகள் நலன்

14. அனந்த குமார் - ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை

15. ரவிசங்கர்பிரசாத் - சட்டம் மற்றும் நீதித்துறை, தகவல் தொழில்நுட்பம்

16. ஜெகத்பிரகாஷ் நட்டா - குடும்பநலம், சுகாதாரத்துறை

17. அசோக் கஜபதி ராஜு பசுபதி - விமான போக்குவரத்து துறை

18. ஆனந்த் கீதே - கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள்

19. ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்துதல்

20. நரேந்திர சிங் தோமர் - கிராம மேம்பாடு

21. சவுத்ரி பிரேந்தர் சிங் - இரும்பு துறை

22. ஜுயல் ஓரம் - பழங்குடியினர் நலத்துறை

23. ராதா மோகன் சிங் - விவசாயம், விவசாயிகள் நலத்துறை

24. தவார் சந்த் ஹெலாட் - சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை

25. ஸ்மிருதி இரானி - ஜவுளித்துறை

26. ஹர்ஷ்வர்தன் - அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல்

27. பிரகாஷ் ஜவ்டேகர் - மனித வள மேம்பாட்டு துறை

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. ராவ் இந்திரஜித்சிங் - திட்ட அமலாக்கம், நகர்ப்புற மேம்பாட்டு துறை

2. பண்டாரு தத்தாத்ரேயா - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு

3. ராஜிவ் பிரதாப் ரூடி - திறன் அபிவிருத்தி தொழில் முனைவு

4. விஜய் கோயல் - இளைஞர் நலன், விளையாட்டு, நீர் வளம், நதி அபிவிருத்தி, கங்கை மேம்பாடு

5. ஸ்ரீபத் யசோ நாயக் - ஆயுஷ்

6. தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

7. பியூஷ் கோயல் - மின்துறை, நிலக்கரி, சுரங்கம்

8. ஜிதேந்திராசிங் - வடகிழக்கு பிராந்திய மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பணியாளர் நலத்துறை, விண்வெளித்துறை

9. நிர்மலா சீத்தாராமன் - வர்த்தகம், தொழில்துறை

10. மகேஷ்சர்மா - சுற்றுலா மற்றும் கலாச்சாரம்

11. மனோஜ் சின்கா - ரயில்வே, தகவல் தொடர்பு

12. அனில் மாதவ் தேவ் - சுற்றுச்சுழல், வனத்துறை, பருவநிலை மாற்றம்

இணை அமைச்சர்கள்

1. வி.கே.சிங் - வெளியுறவுத் துறை

2. சந்தோஷ் குமார் கங்க்வார் - நிதி

3. பக்கான் சிங் குலாஸ்தே - சுகாதாரம், குடும்ப நலத்துறை

4. முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மை, நாடாளுமன்ற விவகாரம்

5. அலுவாலியா - வேளாண், விவசாயிகள் நலத்துறை, நாடாளுமன்ற விவகாரம்.

6. ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி, அதிகாரமளித்தல்

7. ராம்கிரிபால்யாதவ் - கிராம மேம்பாடு

8. ஹரிபாய் பார்திபாய் சவுத்ரி - சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

9. கிரிராஜ்சிங் - சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

10. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர் - உள்துறை

11. சித்தேஸ்வரா - கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள்

12. ரமேஷ் சந்தப்பா ஜிஜிநாகி - குடிநீர், துப்புரவு

13. ராஜன் கோகெய்ன் - ரயில்வே

14. பர்சோத்தம் ரூபாலா - வேளாண், விவசாயிகள் நலத்துறை, பஞ்சாயத்து ராஜ்

15. எம்.ஜே. அக்பர் - வெளியுறவுத் துறை

16. உபேந்திரா குஷ்வாகா - மனித வள மேம்பாட்டுத்துறை

17. பொன்ராதாகிருஷ்ணன் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து

18. கிரண் ரிஜ்ஜு - உள்விகராத்துறை

19. கிருஷன் பால் - சமூக நீதி, அதிகாரமளித்தல்

20. ஜஸ்வந்த்சிங் பாபோர் - பழங்குடியினர் நலன்

21. சஞ்சிவ்குமார் பல்யான் - நீர் வளம், நதி அபிவிருத்தி, கங்கை சீரமைப்பு

22. விஷ்ணுதேவ் சாய் - இரும்பு துறை

23. சுதர்ஷன் பகத் - வேளாண், விவசாயிகள் நலன்

24. ஒய்.எஸ் சவுத்ரி - அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல்

25. ஜெயந்த் சின்கா - விமான போக்குவரத்து

26. ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் - தகவல், ஒளிபரப்பு

27. பாபுல்சுப்ரியா - நகர்ப்புற மேம்பாடு

28. நிரஞ்சன் ஜோதி - உணவு பதப்படுத்துதல்

29. விஜய் சாம்லா - சமூக நீதி

30. அர்ஜூன் ராம் மேக்வால் - நிதி, கார்பரேட் விவகாரம்

31. மகேந்திர நாத் பாண்டே - மனித வள மேம்பாடு

32. அஜய் தம்தா - ஜவுளித்துறை

33. கிருஷ்ண ராஜ் - பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

34. அனுப்பிரியா - சுகாதாரம், குடும்ப நலன்

35. மன்டாவியா - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல், ரசாயனம், உரம்

36. சி.ஆர். சவுத்ரி - நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம்

37. பிபி சவுத்ரி - சட்டம், நீதி, தகவல் தொழில்நுட்பம்

38. சுபாஷ் ராம்ராவ் பாம்ரே - பாதுகாப்பு.

 

சமீபத்திய செய்திகள்

  • SPORTS NEWS
  • |
  • CINEMA