சற்று முன்
விளையாட்டு செய்திகள்
இன்று வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி
Updated on : 05 July 2016
இந்திய கிரிக்கெட் அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் செல்கிறது. அங்கு இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ரகானே (துணை கேப்டன்), தவான், முரளி விஜய், புஜாரா, விருத்திமான் சகா, ஸ்டுவர்ட் பின்னி, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ராகுல், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ஆம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் , இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு செல்கிறது.
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா