சற்று முன்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
Updated on : Thursday July-07 2016
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லைதாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், காங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களோடு சேர்த்து, அவர்கள் பயன்படுத்திய படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த 17 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
- SPORTS NEWS
- |
- CINEMA