சற்று முன்
ஈக்வேடர் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்!
Updated on : Monday July-11 2016
ஈக்வேடர் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
ஈக்வேடர் நாட்டில் உள்ள எஸ்மெரால்டஸ் நகரின் அருகே பூமியின் அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் போது பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு பாதுகாப்பன பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், உயிரிழப்பு - சேதங்கள் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
சமீபத்திய செய்திகள்
- SPORTS NEWS
- |
- CINEMA