சற்று முன்
காஷ்மீர் பிரச்சனை: இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீப் கண்டனம்
Updated on : Tuesday July-12 2016
காஷ்மீர் மக்களின் போராட்டங்களை அடக்குமுறையால் தடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 8-ஆம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் புர்ஹான் முஷாபர் வானி காஷ்மீர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை எதிர்த்து கடந்த 9-ஆம் தேதி காஷ்மீரில் பெரும் கலவரம் உருவானது. இதில் 26 பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவிக்கையில், "காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் அப்பாவி பொதுமக்கள் மீது கட்டற்ற சட்டவிரோத அதிகாரத்தை பயன்படுத்துகிறது" என இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாகிஸ்தான் தூண்டுதலாலேயே காஷ்மீரில் வன்முறை கட்டுக்கடங்காமல் இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
- SPORTS NEWS
- |
- CINEMA