சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

தன் அறிவுத்திறனால் உலக அறிஞர்களையே அதிர வைக்கும் தமிழ் சிறுமி விசாலினி!
Updated on : Tuesday July-12 2016

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட சிறுமியாக திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி அடையாளப்படுத்தப்படுகிறார். 11 வயதில் தனக்குரிய இணையதளத்தைத் தானே 24 மணிநேரத்தில்  வடிவமைத்தவர் இவர்.  தன் 11 வயதில் 25-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு இறுதி ஆண்டு  மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் , முதல்வர்களுக்கு செமினார் வகுப்புகளை நடத்தி வருகிறார்.

 

உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional -களுக்கு 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள். HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11. TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.

 

Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணிநேர Documentry -யை  ஒளிபரப்பியது.

 

ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு வயது 13 தான்.

பிரதமர் மோடி விசாலினியை சந்திக்க வேண்டும் என்று தானாகவே முன் வந்து சந்தித்து பேசிய போது கூறியது: "இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான்" என்று நெகிழ்ந்து பாராட்டினார்.

 

உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.

 

கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, ஓர் இந்தியர். அதுவும் தமிழர் என்பது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

சமீபத்திய செய்திகள்

  • SPORTS NEWS
  • |
  • CINEMA