சற்று முன்
பிரிட்டனின் 2-வது பெண் பிரதமராக பதவியேற்கிறார் தெரசா மே
Updated on : Wednesday July-13 2016
பிரிட்டனின் இப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதையடுத்து, தெரசா மே வரும் புதன் கிழமை அன்று பதவியேற்கிறார்.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 52 சதவீத மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இதனை அடுத்து பிரிட்டனின் இப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், பிரிட்டனின் உள்துறை அமைச்சராக உள்ள தெரசா மே, வரும் புதன் கிழமை அன்று அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கிறார். இவர் பிரிட்டனின் 2-வது பெண் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
- SPORTS NEWS
- |
- CINEMA