சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’
Updated on : 02 June 2015


ஐ வில் பி பேக்”, என்ற தனது பிரபலமான வசனத்துக்குரியவாறே மீண்டும் ரசிகர்களை டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ திரைப்படத்தின் மூலம் கொண்டாட்டத்தில் ஆழ்த்த வருகிறார் அர்னால்ட் ஷ்வாஸ்நேகர்.டெர்மினேட்டர் ஜெனிசிஸ் தமிழில் டெர்மினேட்டர்   ஒரு தொடக்கம் என்ற பெயரில் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது. 


 


ஆக்ஷன்அதிரடி பொங்கும் கதையம்சம் கொண்ட  டெர்மினேட்டர் பட வரிசையில் அடுத்த பகுதியானடெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (‘Terminator Genisys’). எதிர்காலத்தில் நடக்கும் கதையாக தொடங்கி சாரா கானர்,ஜான் கானர்கையில் ரீஸ் மற்றும் டெர்மினேட்டர்கள் இடையே வெவ்வேறு கால அமைப்புகள் நடக்கும் ஒரு போட்டியாக அமைந்துள்ளது.     


 


தனது டெர்மினேட்டர் கதாப்பாத்திர பிரவேசத்தை பற்றி அர்னால்டு கூறுகையில், “எனது நினைவுக்கு தெரிந்த வரை 30 வருடங்களுக்கு மேல் ஒரு தொடரில் ஒரே நடிகர் நடிப்பது இது தான். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கோனான் தி பார்பேரியன் போன்று நான் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களையும் மீண்டும் நடிக்க அழைக்கிறார்கள். இது வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு இருக்கும் மரியாதையும் எதிர்பார்ப்பும் எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது” என்கிறார்.


 


பிரம்மாண்ட படமான தோர்: தி டார்க் வேர்ல்ட் அண்ட் கேம் ஆஃப் த்ரான்ஸ்’ படத்தின் இயக்குனர் ஆலன் டெய்லர் தான் டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை இயக்கியதைப் பற்றி கூறும்பொழுது “ தோர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் ஈடுபடுவது சற்று அயர்ச்சியாகவே இருந்தது எனினும், ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தின் வெற்றியை கணித்து இருந்ததால் விட இயலவில்லை. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய முதல் இரண்டு பாகங்கள் ஆக்ஷன் பின்னணியாய் இருந்தாலும் மானிடராய் இருப்பதன் உன்னதத்தை உணர்த்துவதாய் அமைந்திருந்தது என்னை பெரிதும் ஈர்த்தது.” என்றார்          


 


Skydance Productions மற்றும் Paramount Pictures நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பாக வரும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ திரைப்படத்தை Viacom 18 Motion Pictures நிறுவனத்தார் இந்தியாவில் வெளியிடுகிறார்கள். ஆங்கிலம்,ஹிந்திதமிழ் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் Imax 3D, 3டிஜிட்டல் மற்றும் 2என அனைத்து திரையிடல் தொழிநுட்பத்திலும் தயாராகும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் ஜூலை 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.        




 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா