சற்று முன்

உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'   |    சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'   |    கறுமை அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையைக் காட்சிப்படுத்தும் ‘ஈவா’ பாடல்!   |    சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது - தேஜா சஜ்ஜா   |    சிவராஜ்குமார் நடிபில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!   |    இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வரும் துல்கர் சல்மானின் 'லோகா'   |    சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம்... - இயக்குநர் கார்த்திகேயன் மணி   |    முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள்! - இயக்குநர் ஆர். கே. செல்வமணி   |    1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கிய பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு!   |    விஜய் சேதுபதி வெளியிட்ட அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான 'ரைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!   |    ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு   |    நான் இயக்குனரானால் யோகி வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் ரவி மோகன்   |    இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...   |    எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!   |    மகளிர் நலனுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சி பாடல்!   |    தமிழக முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!   |    ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!   |    25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!   |    45 நாள் ஆக்ஷன் மராத்தான் - இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார் 'ஜான் விக்’ புகழ் JJ Perry!   |    50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’   |   

சினிமா செய்திகள்

பெப்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு மறுப்பு - மன்சூர் அலிகான் குமுறல்
Updated on : 05 June 2015

நடிகர் மன்சூர் அலிகான் நடித்தால் நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என பெப்சி நிர்வாகிகள் சிலர் அறிவித்துள்ளதாக செய்திகள்  வெளியாகின, இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில் :


 


ஒருத்தன் வயித்துல ஒருத்தன் அடிக்கலாமா, எவ்வளு பெரிய டாப்சி அமைப்பை நசுக்குவதற்காக என்னோட வெற்றியை தடுத்து நிறுத்துவதற்கு நேரடியா மோத முடியாமல் இந்த மாதிரி நான் படத்துல நடிச்சா நாங்க ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று சொல்கிறார்கள். அப்பா நீ ஒத்துழைப்பு கொடுக்காட்டி டாப்சி ஒத்துழைப்பு கொடுக்கும் நீ விலகிக்கோ, நான் தாரேன் 100 பேர் வேணுமா.. 200 பேர் வேணுமா.. டாப்சியில் மொத்தம் 400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் டான்சர்ஸ் இருக்காங்க, சண்டை கலைஞர்கள் இருக்காங்க, மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் சேர்ந்துக்கிட்டே இருக்காங்க.மன்சூர் அலிகான் நடிக்க கூடாதுன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு. அது தயாரிப்பாளர், டைரக்டர் செய்ய வேண்டிய வேலை. 


 


எத்தனையோ பிரச்சனையை நான் சமாளித்துக்கொண்டு வருகிறேன் ஆனால் இவர்கள் டாப்சியை நசுக்க நினைத்து இப்படி செய்திருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்துல பெப்சி தொழிலாளர்கள் உலகத்திலேயே தலை சிறந்த தொழில் நுட்ப  வல்லுனர்கள். ஹாலிவுட்டுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப கலை அறிந்தவர்கள். இந்த தொழிலாளிகளுடன் எனக்கு எந்த வித மோதலும் கிடையாது. ஆனால் சிலர் வழி நடத்தறவங்க செய்யிற தவறினாலும், உட்கார்ந்துக்கிட்டு சோறு சாப்பிட நினைக்கிறவர்கள், நிர்வாகத்துல உள்ள சில பேர் கமிசன் அடிக்கிறது, கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்கள். அந்த ஒரு சில புள்ளுரிவிகளால் தான் இப்ப அவப்பெயர் ஆகுது.நானே பெப்சி உறுப்பினர் தானே.... குரூப் டான்ஸ்ல ஆடியிருக்கேன், டான்ஸ் மாஸ்டரா இருந்திருக்கிறேன், இசை கலைஞராக இருந்திருக்கிறேன். நடிகர சங்க உறுப்பினர், டப்பிங் ஆர்டிஸ்ட், லைப் டைம் நடிகர் சங்க உறுப்பினர் பின்பு நான் ஏன் இந்த நிலைக்கு தள்ள பட்டேன். என்னை அவமானப்படுத்தினாங்க. நிச்சயமா அவங்க அழைப்பு வரும். நான் போய் கலந்துக்குவேன். எந்த தயாரிப்பாளருக்கும் நான் பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை.ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுகிறதே அதிசயம். ஆனா இவங்க சூட்டிங்க கேன்சல் பண்றாங்க. இவங்களுக்கு சூட்டிங்க கேன்சல் பண்ண என்ன உரிமை இருக்கு இதுக்குதான்  இப்போ நான் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கிறேன்.நாட்டில எவ்வளோ பிரச்சனை இருக்கு. தேர்தல்ல நிக்கனுமா வேணாமா, ஆந்திரா சிறையில் தமிழன் வாடுகிறான், இலங்கை சிறையில் தமிழன் வாடுகிறான். அந்த பிரச்சனையில இது ஒரு பிரச்சனையா ஈடுபடுவது எனக்கே வெட்கமா இருக்கு.தொழிலாளிகளுடன் எனக்கு எந்த வித மாறுபட்ட பேதம் கிடையாது. டாப்சி வந்து ஏழைகளுக்கான, தயாரிப்பாளர்களுக்கான ஒரு இயக்கம்.எனக்கு தெரிஞ்ச கலையை கற்று கொடுத்து நான் உருவாக்கி வெறும் 2000 ரூபாய்ல ஒரு நடிகர், நடிகைகள், சண்டை மற்றும் நடன கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறேன்.


 ஐந்து லட்சம் தர இயலாத திரை கலைஞர்கள் டாப்சியில் இணைந்து கொள்கிறார்கள் இதில் என்ன தவறு, மேலும் தொழில் தெரிந்த நான் அவர்களுக்கு பயிற்சி அளித்து உறுப்பினர்களாக இணைந்து கொள்வதில் என்ன தவறு. ஒருவருக்கு வேலை தருவது எந்த விதத்தில் தவறாக முடியும், நீங்க வேலை செய்யவில்லை என்றால் பரவாயில்லை நான் இந்த தொழிலாளர்களுக்கு வேலை தருகிறேன்.


 என்னை நடிக்க கூடாதுன்னு சொல்ல இவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, அவங்க கடிதம் அளிக்கட்டும் மன்சூர் அலிகான் நடித்தால் நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று தில் இருந்தா தைரியம் இருந்தா ஆம்பளையா இருந்த ஒரு கடிதம் மட்டும் எனக்கு தரட்டும் நான் எத்தனை கோடி நஷ்டஈடு வாங்கனமோ அதை நீதிமன்றத்திற்கு சென்று பெற்றுக்கொள்கிறேன். நீதிமன்ற உத்தரவின்படி நான் கதாநாயகனாக நடிக்கும் ராஜ் கென்னடி பிலிம்ஸ் வழங்கும் அதிரடி படத்திலும் அல்லது ராஜ் கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கும் வேறு எந்த திரைப்படத்திலும் பெப்சி அல்லது அதன் உறுப்பினர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தலையிட கூடாது. 


ஆனால் நான் நடிக்கும் படத்திற்கு ஆதரவு அளிக்க முடியாதுச் சொல்ல அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, குடை பிடிக்க சொன்னா குடை பிடிக்கணும் கூட்ட சொன்னா கூட்டனும், டீ கொடுக்க சொன்னா டீ கொடுக்கணும் , அவங்க வேலையை பண்ணிட்டு போகணும். இது வந்து தொழிலாளியை அவமானப் படுத்துகின்ற செயல் அல்ல, என்னை யாராவது  


அவமானப் படுத்தினால் அவங்களை நிக்க வைத்து தோல் உரிப்பேன் அதான் மன்சூர் அலிகான்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா