சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்க முடிவு
Updated on : 22 October 2016

நாளை (23.10.2016) நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு  தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது.



 



இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில்:



 



"தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் அனைத்து உறுப்பினர்கள் குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக புது துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்குகிறது.



 



வெளியூர் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், உதயா, ஹேமசந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோர்கள் மேற்பார்வையில் இன்று பரிசுகள் அனுப்பி வைக்கப் பட்டது. சென்னையில் தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) அன்று பகல் 11 மணிக்கு நடக்கிறது.



 



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் தி.நகரிலுள்ள நடிகர் சங்கம் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் மூத்த நடிகர், நடிகைகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்."



 



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா