சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

'காஷ்மோரா' - 'கொடி' - தீபாவளி ரேஸில் வெல்லப்போவது எது?
Updated on : 28 October 2016

இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு தனுஷின் 'கொடி' மற்றும் கார்த்தியின்  'காஷ்மோரா' ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளன. மொத்தம் நான்கு படங்கள் வெளியாகியிருந்தாலும் இந்த இரண்டு படங்கள் முதன்மையான ரேஸில் உள்ளன.



 



பண்டிகை தினத்தில் புத்தாடை, பட்டாசு, குடும்பம் மற்றும் நண்பர்களோடு கொண்டாட்டம் என்பதை போல, திரையரங்கில் ரசிகர்களின் பட்டாளத்தோடு பெரிய ஹீரோக்களின் படமும் இப்போது வழமையாக மாறிவிட்டது.



 



அந்த வகையில் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு தீனி போடும் வகையில் இரண்டு மாறுபட்ட படங்கள் தீபாவளிக்கு வந்திருக்கின்றது.



 



கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'காஷ்மோரா'. தற்கால கதையோடு வராலாற்று பயணமாகவும் உருவாகியுள்ள இந்த படம், பிரம்மாண்டத்துக்கு குறைவில்லாமல் ரசிகர்களை மகிழ்விக்கிறது.



 



மறுபுறம் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், கருணாஸ், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கொடி'. தனுஷ் படம் என்றாலே ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு பஞ்சம் இருக்காது. போதாததற்கு முதன் முறை இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளதால் இரட்டை தீபாவளியாக இது மாறியுள்ளது. மேலும், மக்களின் வாழ்வாதார - சூழலியலை பேசும் அரசியல் படமாகவும், தனுஷ் அரசியல்வாதியாக நடித்துள்ளதும் இந்த படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.



 



இந்த இரண்டு படங்களோடு மாகாபா ஆனந்த், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள "கடலை" மற்றும் பெண்கள் மட்டுமே நடித்துள்ள 'திரைக்கு வராத கதை' ஆகிய படங்களும் வெளியாகியுள்ளது.



 



தீபாவளிக்கு வெளியாகியுள்ள படங்களில் ரசிகர்களின் பேராதரவு எந்த படத்துக்கு என்பதை அடுத்த மூன்று நாட்களில் தான் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இப்போதைக்கு அனைத்து படங்களுக்கும் தமிழ்சகாவின் வாழ்த்துகள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா