சற்று முன்

அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வரும் ராதாரவி!   |    அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார் #நிவின்பாலி !   |    2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வரலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்!   |    நடிகர் பிரபாஸ் எழுத்தாளர்களுக்காக துவக்கி வைத்த ‘தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்’ இணையதளம்!   |    'கேம் சேஞ்சர்' பட கூட்டணியின் மாஸ் அப்டேட்!   |    நவம்பர் 8 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மெகாஹிட் 'ஏ.ஆர்.எம்' திரைப்படம்!   |    கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |    நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்ற தத்ரூபமாக காட்சிகளுடன் வெளிவரவிருக்கும் 'தென் சென்னை'   |    ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் 'ஹேப்பி எண்டிங்' டைட்டில் டீசர் வெளியீடு!   |    ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!   |    ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா தயாரித்து, இயக்கும் 'சீதா பயணம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!   |    'முரா' படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    'கேம் சேஞ்சர்' படத்தின் வட இந்திய விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!   |    என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் - நடிகர் சூர்யா   |    'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!   |   

சினிமா செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது - சிம்பு ஆவேசம்
Updated on : 30 December 2016

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது. இது நம் மொழி, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.



 



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் செய்கின்றனர்.



 



அரசும், நீதித்துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் முக்கியக் கடமை என்று மல்லுகட்டுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.



 



ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.



 



இந்திய நாட்டின் குடிமகனாக ஒவ்வொரு தமிழனும் நீதித்துறையை மதிக்கத்தான் செய்கிறான். ஆனால், அது தமிழ் கலாச்சாரத்தை மீறிய மதிப்பாக இருக்காது, இருக்கவும் முடியாது. நமது கலாச்சாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்த சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.



 



தனி ஒரு எஸ்டிஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக் கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.



 



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.



 



நாம் வணங்கும் தமிழ்க் கடவுளின் அருளால் வருகின்ற தைப் பொங்கல் திருநாளில் நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டு, நமது கலாச்சார அங்கீகாரம் மீண்டும் வெளிப்படுத்தப்படும் நம்புகிறேன்.



 



ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது. இது நம் மொழி, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா