சற்று முன்

விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |   

சினிமா செய்திகள்

இப்ராகிம் ராவுத்தர் மரணம்
Updated on : 22 July 2015

இப்ராகிம் ராவுத்தர் சிறுவயது முதல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு மதுரையிலிருந்து சென்னைக்கு தன் உயிர் நண்பர் நடிகர் கேப்டன் விஜயகாந்துடன் சென்னை வந்தவர் தான் டைரக்டர் இப்ராகிம் ராவுத்தர்.





இப்ராகிம் ராவுத்தர் டைரக்டர் ஆனவுடன் தன் நண்பர் விஜயகாந்தை ஹீரோவாக நடிக்கவைத்து அழகு பார்த்தவர் இவர். இப்ராகிம் ராவுத்தர் படம் என்றாலே ஹீரோ விஜயகந்தான் என்று கூறும் அளவுக்கு இவர் விஜயகாந்தை வைத்து நிறைய படங்களை எடுத்தார். 





ராவுத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா படங்களை பிரமாண்டமாக முதன் முதலில் எடுத்தவரும் இவரே, பிலிம் இன்ஸ்டிடியுட் மூலம் பயின்றுவரும் மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளித்தவரும் இவரே.  நிறைய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.





இப்ராகிம் ராவுத்தர் முதன்முதலில் சினிமா பிரொடியூசர் கவுன்சில் தலைவராக  இருந்தவர். இவர் தலைவராக இருந்தபோது பல நல்ல காரியங்களை செய்தவர். இவர் தலைவராக இருந்த அந்த காலகட்டத்தில் சினிமா பிரொடியூசர் கவுன்சிலை மிகவும் நல்ல முறையில் நடத்தினர்.





இப்படி பல நற்காரியங்களை செய்த இப்ராகிம் ராவுத்தர் கடந்த வாரம் உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 





நண்பர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்த விஜயகாந்த அவரை மிகுந்த வேதனையுடன் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். சுயநினைவின்றி இருக்கும் நண்பரை பார்த்த விஜயகாந்த கண்கலங்கி சென்றார்.





இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராவுத்தர் இன்று காலை காலமானார்.  சொந்த ஊரான மதுரைக்கு செல்ல இருந்த அவரது உடல் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் கொண்டு செல்ல இயலவில்லை எனவே அவரது உடல் சென்னை அரும்பாக்கத்திலுள்ள அவரது அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது நாளை அவருடைய இறுதி நிகழ்வுகள் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.



 



அவர் இறந்த செய்தி கேட்டு பிரொடியூசர் தேனப்பன், விஜயகாந்த, விக்ரம், RK செல்வமணி ஆகியோர் சென்று அவரது உடலை பார்த்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா