சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

உயிரிழந்த விவசாயிகளுக்காக பொங்கல் கொண்டாடாமல் தவிர்க்கலாம்: தங்கர் பச்சான்
Updated on : 12 January 2017

உயிரிழந்த விவசாயிகளுக்காகவும் சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றவும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்க்கலாம் என இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.



 



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:



 



"நமக்கெல்லாம் உணவளித்து உயிரையும் உடலையும் காப்பாற் றும் விவசாயிகளும் நம்மைப் போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் அடுக்கடுக்காக உயிரிழக்கும் விவசாயிகள் பற்றிய செய்திகளை நாம் கண்டுகொள்ளாமல் போகிறோம். விவசாயிகள் வீட்டில் எழும் அழுகுரல் மட்டும் நமக்கோ, கேட்க வேண்டியவர்களுக்கோ கேட்கவே இல்லை.



 



நஷ்டம் வரும் என்று தெரிந்தே விவசாயிகள் விவசா யம் செய் கிறார்கள். கடன் வாங்கியவர் களுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறோம், எதிர்காலத்தில் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்து மானத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டும் அதிர்ச்சியிலும் விவசாயிகள் உயிரிழக்கிறார்கள்.



 



ஜெயலலிதாவின் மரணத்தால் அதிர்ச்சியால் இறந்தவர்களுக்கு அதிமுக ரூ.10 லட்சம் இழப்பீடு நிதி தருகிறது. ஆனால். உயிரிழந்த விவசாயிகளுக்கு தரப்படும் நிதி ரூ.3 லட்சம். இதுதான் அரசாங்கம் விவசாயிகளின் உயிருக்கு தரும் விலை. விவசாயிகளின் உயிரும் போய் அவர்களின் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் கிடைக்காத நிலையில், அந்த குடும்பங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.



 



நம்முடைய குழந்தைகளை டாக்டர்களாகவும், இஞ்ஜினீயர் களாகவும் ஆக்குவதற்கு மட்டுமே தயார்படுத்துகிறோம். எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக மாற வேண்டும் என்று விரும்புவதில்லை. விவசாயிக்கு மரியாதை கிடையாது.



 



நமக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் வகைவகையான உணவுகள் வேண்டும். புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து தொலைக்காட்சி பார்த்து, புதுப்புது சினிமா பார்த்து, விதவிதமாக படம் பிடித்துக்கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண் டும். காளையை அடக்க வேண்டிய வர்கள் மடிந்து கொண்டிருக் கிறார்கள். ஜல்லிக்கட்டில்தான் தமிழர்களின் மானம் காப்பாற்றப் படுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமே லாவது விவசாயின் அழுகுரல் உலகத்துக்கு கேட்கட்டும்.



 



உயிரிழந்த விவசாயிகளுக்காகவும் சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றவும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்க்கலாம்".

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா