சற்று முன்
சினிமா செய்திகள்
பீட்டா ஆதரவு - த்ரிஷாவுக்கு எதிராக போராட்டம்
Updated on : 13 January 2017

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க காரணமான 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் த்ரிஷாவை கண்டித்து, அவர் நடிக்கும் 'கர்ஜனை' படப்பிடிப்பை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனொரு பகுதியாக காரைக்குடியில் நடைபெற்று வரும் த்ரிஷாவின் படப்பிடிப்பை முற்றுகையிட்டு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டை தடை செய்துள்ள பீட்டாவுக்கு ஆதரவாக, த்ரிஷா கருத்து தெரிவித்து வருவதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பில் த்ரிஷா மன்னிப்பு கேட்கும் வரையில் போராட்டம் தொடருமெனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் 'டீசல்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் முன்பதிவு அதிகரித்திருக்கும் நிலையில், நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸில் படம் ஹிட் ஆகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி தெரிவிக்கிறது.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன் பகிர்ந்து கொண்டதாவது, "கதையின் தனித்தன்மை, அது எந்தளவுக்கு பார்வையாளர்களை கட்டிப் போடுகிறது, அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்ற இந்த இரண்டு விஷயங்களைத்தான் ஒரு தயாரிப்பு நிறுவனம் கவனிக்கும்.
இயக்குநர் சண்முகம் முத்துசாமி 'டீசல்' கதையை சொன்னபோது இந்த இரண்டு விஷயங்களும் பொருந்திப் போனது. கச்சா எண்ணெய் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத பல அதிர்ச்சிகரமான விஷயங்களை 'டீசல்' பார்வையாளர்களுக்கு தெரியப்படுதும்.
கதை இறுதியானதும் இதில் நடிக்க நட்சத்திர அந்தஸ்துடன் அதே சமயத்தில் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாகத் தேடினோம். ஹரிஷ் கல்யாண் 'டீசல்' கதைக்கு சரியாக பொருந்திப் போனார். படத்தின் ஃபைனல் வெர்ஷன் பார்த்தபோது பவர் பேக்ட்டான சிறப்பான நடிப்பைக் கொடித்திருக்கிறார் ஹரிஷ். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பின்னியிருக்கிறார். இந்த தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்" என்றார்.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மென்ட் சார்பில் தேவராஜுலு மார்கண்டேயன் தயாரித்திருக்க, எஸ்பி சினிமாஸ் புரொடக்ஷனில் உருவாகியுள்ள 'டீசல்' படத்தை சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!
இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'டியூட்' உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கீர்த்தீஸ்வரன் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் அணுகியுள்ளார்.
மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் 'டியூட்' திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு இயக்குநர் படத்தை உருவாக்குவது மட்டுமல்லாது அந்தப் படத்தை சுற்றிலும் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம் என்பதிலும் படத்தின் வெற்றி அடங்கும். அந்த வகையில், படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான 'ஊரும் பிளட்டும்...' முதல் டிரெய்லர் வரை படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மிகச்சரியாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கீர்த்தீஸ்வரன்.
இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, " என் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. சினிமாத்துறையில் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான மைத்ரி கோலிவுட்டில் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'குட் பேட் அக்லி' மூலம் அடியெடுத்து வைத்தது. அப்படி இருக்கையில் அவர்கள் தமிழில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அனுபவம் வாய்ந்த பெரிய இயக்குநர்களை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை மிகப்பெரியது. இதற்கு நன்றி!" என்றார்.
மேலும் பேசியதாவது, "'டியூட்' திரைப்படத்தில் நாங்கள் பணிபுரிய தொடங்கியபோது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் படம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் மிகப்பிடித்த ஹீரோவாக வளர்ந்து வருகிறார் பிரதீப். படத்தில் அவரது கதாபாத்திரம் முலம் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். பிரதீப்பும் அதை சரியாக புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்".
படம் பற்றி கேட்டபோது, "ரசிகர்களுக்கு தீபாவளிக்கு சிறந்த பரிசாக எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜாக 'டியூட்' இருக்கும். மமிதா பைஜூ, சரத்குமார் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்து நிச்சயம் 'டியூட்' திரைப்படம் முழுமையான எண்டர்டெயினராக இருக்கும்" என்றார்.
நகைச்சுவை, ஹீரோயிசம் மற்றும் எமோஷன் என உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!
வித்தியாசமான மற்றும் நடிப்புக்குத் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'டீசல்' படம் மூலம் ஆக்ஷன் ஜானரிலும் அடியெடுத்து வைக்கிறார் ஹரிஷ் கல்யாண். அவரது கரியரில் மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'டீசல்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் நிலையில் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பகிர்ந்து கொண்டதாவது, "தங்கத்தை விடவும் பெட்ரோல் -டீசல் மக்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது. குறிப்பாக, பிளாக் கோல்ட் எனப்படும் கச்சா எண்ணெய் அதிகம் உபயோகப்படுத்தப்படும் வளம். நாம் அடிக்கடி பெட்ரோல் பங்க் செல்வோம். ஆனால், அதற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை பற்றி அரிதாகவே யோசிப்போம். இந்த படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இந்த படத்தை அர்த்தத்தோடும் நோக்கத்தோடும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறோம்.
பிசியாக உள்ள இடங்களில் ஷூட்டிங் நடத்துவது சவாலானதாகவும் அதேசமயம் மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது. இயக்குநர் சண்முகம் முத்துசாமி இந்த கதைக்கு பின்னால் செய்திருக்கக் கூடிய ஆராய்ச்சியும் தகவல்களும் என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது. அவருடைய திரைக்கதை ஆழம் எப்படி என்னை வியப்புக்குள்ளாக்கியதோ அது போலவே ரசிகர்களும் விரும்புவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "இந்த படம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு சவாலானதாக இருந்தது. வசனம் பேசுவதில் இருந்து பாடல்கள், தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் என எல்லாவற்றிற்கும் கடுமையான உழைப்பு கொடுத்து இருக்கிறேன். இந்த படத்தின் மெசேஜும் ரொம்பவே திருப்தியாக வந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்கள் என் நடிப்பை விரும்பினார்கள் என்றால் இன்னும் இது போன்று பல ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்".
"தீபாவளி பண்டிகை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். பல பெரிய படங்களை இந்த பண்டிகைக்கு பார்த்து கொண்டாடியிருக்கிறேன். ஆனால், இந்த முறை என்னுடைய படமே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியாகிறது என்பது புது அனுபவமாக உள்ளது. இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. எங்களுடைய உழைப்பை ரசிகர்கள் நிச்சயம் மதிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மென்ட் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் 'டீசல்' படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை எஸ்பி சினிமாஸ் வழங்குகிறது. சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், ஜாகீர் ஹூசைன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியில் திலக் வர்மாவின் தீவிரமான ஆட்டமும், மிக அழுத்தமான நேரத்தில் காட்டிய நிதானமும் முக்கிய பங்காக இருந்தது.
இயல்பிலேயே மிகச்சிறந்த பாராட்டும் மனம்கொண்டவராக கொண்டாடப்படும் சிரஞ்சீவி, திலக் வர்மாவை அன்புடன் வரவேற்று, கௌரவிக்கும் விதமாக அவரின் தோளில் சால்வை போர்த்தி, அவரது மாட்ச்-வின்னிங் தருணத்தை பதிவு செய்த, சிறப்பான புகைப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும் சிரஞ்சீவி, திலக் வர்மாவின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, அஞ்சாத மனநிலை ஆகியவற்றை பாராட்டி, “இவை வாழ்க்கையிலும் வெற்றிக்கான அடித்தளங்கள்” எனக் கூறி உற்சாகமூட்டினார்.
இந்த நிகழ்வு, சிரஞ்சீவியின் புதிய தலைமுறை திறமைகளை மதிக்கும் மனப்பான்மையையும், எல்லா துறைகளிலும் சிறந்தவர்களை கௌரவிக்கும் அவரது பாராட்டும் குணத்தையும் இயல்பையும் வெளிப்படுத்தியது.
இந்த சிறப்பு தருணத்தில், நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி, தயாரிப்பாளர்கள் சாஹு கரப்பாட்டி மற்றும் சுஷ்மிதா கோனிடேலா ஆகியோரும் பங்கேற்று, திலக் வர்மாவின் சாதனையைப் பெருமையுடன் பாராட்டினர்.
தனது சாதனைக்கு மெகாஸ்டாரிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரம், திலக் வர்மாவுக்கு மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. ரசிகர்களுக்கு இது, சிரஞ்சீவியின் மனிதநேயமும், தாழ்மையும், ஊக்கமூட்டும் தன்மையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திய சிறப்பு நிகழ்வாக இருந்தது.
இந்த மனமகிழ்ச்சியான செயல் மூலம், சினிமாவின் வழியிலோ அல்லது வேறெந்த வழியிலுமோ “உண்மையான மகத்துவம் என்பது பிறரைப் பாராட்டி உயர்த்துவதில் தான் இருக்கிறது” என்பதை சிரஞ்சீவி மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்
தனது காதலனுடன் கொரியாவுக்குச் செல்லும் ஷென்பாவின் கனவு துரோகத்தில் சிதையும்போது, அவள் சியோலில் தனிமையை உணர்கிறாள். அந்தத் தனிமையுடனும் புதிய இடத்தில் உள்ள கலாச்சார சவால்களுடன் போராடுகிறாள். வாழ்வின் சவால்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் ஷென்பா மெல்ல தன்னை மீட்டெட்டுக்கும்போது, புதிய நண்பர்களுடன் வாழ்க்கைக்கான பிணைப்பை உருவாக்குகிறாள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் கதையாக உருவாகி இருக்கிறது 'மேட் இன் கொரியா'. பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தக் கதையை கார்த்திக் இயக்கியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஆர். ஏ. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, "கொரிய கலாச்சாரம் கடந்த பத்தாண்டுகளில் இந்திய கலாச்சாரத்தை கணிசமாக பாதித்துள்ளது. 'மேட் இன் கொரியா' கதையில் பணிபுரியத் தொடங்கும் வரை நான் கே-டிராமாவை பார்த்ததும் இல்லை, கே-பாப் இசையை கேட்டதும் இல்லை. இந்தக் கதைக்காக சில விஷயங்கள் ரிசர்ச் செய்தபோது, கொரியா மற்றும் தமிழ் பாரம்பரியத்திற்கு இடையிலான ஆழமான கலாச்சார தொடர்புகள் மற்றும் வரலாற்று ஒற்றுமைகளைக் கண்டறிய ஆர்வமாக இருந்தேன். என்னுடைய இந்த ஆர்வம் ஆழமான ஒரு கதையைச் சொல்ல தூண்டியது. 'மேட் இன் கொரியா' கதை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் தனித்துவமான கலாச்சார பின்னணியை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான். கதை கேட்டவுடனே பிடித்துவிட்டது. கே-டிராமாஸை எப்போதும் விரும்பி பார்ப்பேன். அப்படி இருக்கையில், இந்திய-கொரிய கூட்டு முயற்சியான இந்தக் கதையின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது. நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்துடன் எனக்கு ஆழமான தனிப்பட்ட தொடர்பு இருந்தது. கார்த்திக் சார் கதை சொன்னபோதே எனக்கு உடனே பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸின் இந்தப் பயணத்தில் நான் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது" என்றார்.
ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், "'கட்டா குஸ்தி' படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல நாட்கள் ஆகிவிட்டது. என்னுடைய முதல் படமான 'அங்காடித்தெரு', 'மதகஜராஜா' எல்லாம் படப்பிடிப்பு முடிந்தும் பல வருடங்கள் காத்திருந்து வெளியாகி ஹிட்டான படங்கள். அதனால், நான் வேலை பார்த்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனாலும் அது ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி".
எடிட்டர் சான் லோகேஷ், " இந்த தீபாவளிக்கு நல்லதொரு முக்கியமான படமாகவும் 'டீசல்' அமையும். ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை இந்த படம் தெளிவாக பேசும். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி! படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்றார்.
கலை இயக்குநர் ரன்வன், "இந்த படத்தின் களமே எங்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது. டீசல் பின்னணியில் சரியான செட் அமைப்பதும் சவாலாக இருந்தது. அதை எல்லோரும் சரியாக செய்திருக்கிறோம் என நம்புகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்".
நடிகர் தங்கதுரை, "'டீசல்' படம் என் கரியரில் மிகவும் முக்கியமானது. நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தினமும் ஷூட்டிங் போகிறோமா அல்லது நடிகர் சங்க மீட்டிங் போகிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு நிறைய நடிகர்கள் இருப்பார்கள். திருவிழா போல படம் எடுத்தார்கள். படமே ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சண்முகம் பல நாட்கள் தூங்காமல் வேலை பார்த்திருக்கிறார். 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' படங்களை அடுத்து 'டீசல்' படமும் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரும் வெற்றியாக அமையும். அதுல்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களைப் போலவே படமும் ஹிட்டாக வாழ்த்துகள்".
நடிகர் பிரேம்குமார், " எல்லாவிதமான அம்சங்களும் 'டீசல்' படத்தில் இருக்கும். டீசலுக்கு பின்னால் நடக்கும் மாஃபியா என்ன என்பதை மிகத் துல்லியமாக இந்த படத்தில் இயக்குநர் சண்முகம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ஹரிஷ் கல்யாணுக்கு இப்போது திரைத்துறையில் சரியாக நேரம் கூடி வந்திருக்கிறது. அதுல்யா, வினய் என அனைவரும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். 'டீசல்' தீபாவளியாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்".
நடிகர் ஜார்ஜ், "இந்த நல்ல படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது. மக்களாகிய நீங்கள் தீபாவளிக்கு படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்".
நடிகர் மேத்யூ, " படக்குழுவினர் அனைவரும் ஜாலியாக வேலை செய்தோம். எவ்வளவு காலதாமதம் ஆனாலும் சரி, பட்ஜெட் கூடினாலும் சரி, தான் நினைத்தபடி படம் வர வேண்டும் என்பதில் இயக்குநர் சண்முகம் உறுதியாக இருந்தார். படம் பார்க்கும்போது அது உங்களுக்கே புரியும். அனைவருக்கும் 'டீசல்' தீபாவளி வாழ்த்துக்கள்".
நடிகர் ரமேஷ், "தயாரிப்பாளர் தேவா சாரை பார்த்தபோது முதலில் உதவி இயக்குநர் என்றுதான் நினைத்தேன். அந்தளவுக்கு மிகவும் எளிமையான மனிதர். இயக்குநர் சண்முகம், ஹரிஷ் கல்யாண் என எல்லோருமே கடின உழைப்பை இந்தப் படத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். படம் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்".
நடிகர் ரிஷி ரித்விக், " இந்த படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சண்முகம் அண்ணனுக்கு நன்றி. சினிமாவில் சண்முகம் அண்ணன் மிகப்பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள், ஹரிஷ் கல்யாண், வினய் சார், அதுல்யா மேம் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
நடிகர் தீனா, "நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்ற போட்டி 'டீசல்' படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே இருந்ததை பார்க்க முடிந்தது. சண்முகம் சாரின் கனவு படத்தில் நாங்கள் நடித்திருப்பது மகிழ்ச்சி. சின்னத்திரை நடிகர் ஆன எனக்கு இந்த படத்தில் தேவையான சுதந்திரம் கொடுத்தார்கள். எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினரின் பணியும் பெரிய திரையில் பார்க்கும் பொழுது சிறப்பாக வந்திருக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
நடிகர் விவேக் பிரசன்னா, "தயாரிப்பாளர்கள் தரப்பு, இயக்குநர் சண்முகம், ஹீரோ ஹரிஷ் கல்யாண் என இவர்கள் எல்லோருக்கும் இந்த படம் எவ்வளவு முக்கியமானது மனப்போராட்டத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது என்பது எனக்கு தெரியும். சரியான தருணத்திற்காக இந்த படம் காத்திருந்தது. பல தலைமுறைகளிடமிருந்து அரசியல் சூழல் பெரும் சொத்தை சுரண்டி அவர்களுக்கே தெரியாமல் எப்படி அவர்களை பலியாக்கினார்கள் என்பதை இந்த படம் சரியாக காட்டி இருக்கிறது. எரிசக்தி தொடர்பான அரசியல் பேசும் படமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் இது இருக்கும். கரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஹீரோவாக மட்டுமல்லாது சரியான கதையில், தான் பொருந்திப் போகிறோமா என்பதில் ஹரிஷ் கல்யாண் கவனம் செலுத்தியதால்தான் தற்போது அவருடைய படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. 11 கோடி ரூபாய் எந்த ஹீரோ மீது முதலீடு செய்யலாம் என யோசிக்கும் பட்டியலில் 'டீசல்' படத்திற்கு பிறகு நிச்சயம் ஹரிஷ் கல்யாண் இணைவார். அதுல்யா, வினய், ரிச்சர்ட் சார், உடன் நடித்த அனைவருக்கும் நன்றி".
நடிகர் வினய், "வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தேவா, இயக்குநர் சண்முகம் இருவருக்கும் நன்றி. என் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். படம் நன்றாக வந்திருக்கிறது. சினிமாவை வந்த புதிதில் ஈஸியாக நினைத்தேன். ஆனால், அது தவறு என்பதை என் குரு ஜீவா புரிய வைத்தார். அந்த கடின உழைப்பை ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார். திபு அழகான இசை கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் ஒளிப்பதிவு கதைக்கு மிகப்பெரும் பலம். எல்லோருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். தீபாவளிக்கு 'டீசல்' மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்".
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், "'டீசல்' எனக்கு நல்ல அனுபவம். 'கனா' படத்தில் இருந்தே இயக்குநர் சண்முகம் எனக்கு தெரியும் என்பதால் அவருடன் பணிபுரிய எளிமையாக இருந்தது. 'பச்ச குத்திக்கிட்டு...' என்னுடைய முதல் கானா பாடல். இந்தப் படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். காமன் மேன் கனெக்ட் உள்ள படம் இது. ஹரிஷ் கல்யாண், அதுல்யா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் 'டீசல்' தீபாவளி வாழ்த்துக்கள்".
நடிகை அதுல்யா, "'டீசல்' படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் உட்பட எல்லோருமே இந்த படத்துடன் எமோஷனலாக கனெக்ட் ஆகி இருந்தோம். தயாரிப்பாளர் தேவா சாருக்கு நிச்சயம் இந்தப் படம் வெற்றி தேடி தரும். நாங்கள் எல்லோரும் ஒரு ஃபேமிலியாக வேலை பார்த்திருக்கிறோம். வாய்ப்பு கொடுத்த சண்முகம் சாருக்கு நன்றி. என் கரியரில் என்றும் நினைத்து பார்க்கும்படியான மிகப்பெரிய ஹிட் சாங் கொடுத்த இசையமைப்பாளர் திபு அவருக்கும் நன்றி. ஹரிஷை எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வம்பிழுப்பேன். வினய், பிரேம் அண்ணா, தங்கதுரை என எல்லோருடனும் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இவ்வளவு பெரிய நடிகர்கள் குழுவுடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. உங்கள் தீபாவளியை 'டீசல்' படத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள்".
இயக்குநர் சண்முகம் முத்துசாமி, "'டீசல்' படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடு வரை எந்த சோர்வும் இல்லாமல் இன்முகத்தோடு உழைத்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், பிரேம்குமார், தங்கதுரை மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஓப்பனிங் பாடல் பாடி கொடுத்த நடிகர் சிலம்பரசனுக்கு ஸ்பெஷல் நன்றி. இந்த காலத்தில் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்ட தயாரிப்பாளர் தேவராஜுலு மார்கண்டேய சாருக்கு நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் நின்ற டேங்கர் லாரியிலிருந்து பக்கெட் பக்கெட் ஆக பெட்ரோல், டீசலை சிறுவர்கள் திருடி கொண்டிருந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்ற போது தான் இந்த அதிர்ச்சிகரமான உலகம் பற்றி தெரிய வந்தது. இதையே படமாக்கலாம் என்று உருவானதுதான் 'டீசல்'. இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்து கொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது. இந்த மாஃபியாவால் ஒரு சாதாரண மனிதன் எந்த அளவிற்கு நேரடியாக பாதிக்கப்படுகிறான் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம். இந்த 'டீசல்' படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கொட்டுவது போல தயாரிப்பாளர் தேவராஜூலு சார் இந்தப் படத்திற்காக பணம் கொட்டியிருக்கிறார். 'பாகுபலி', 'கத்தி' போன்று அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூல் செய்யும் பெரிய படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும். தீபாவளிக்கு 'டீசல்' படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
நடிகர் ஹரிஷ் கல்யாண், " என்னை நம்பி இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சண்முகம் சாருக்கு நன்றி. ஆக்ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சரியான கதை வரும் வரை காத்திருந்தேன். அப்படியான கதையாக எனக்கு 'டீசல்' அமைந்தது. தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக பார்க்கப்படும் எரிபொருள் உலகத்திற்கு பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்த கதை சொல்லி இருக்கிறது. மக்கள் இந்த படத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். படத்தின் டிரைலர் வெளியான போது பெரிதாக யாரும் திட்டவில்லை. அதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. ஆக்ஷன் படத்திற்கான சரியான மீட்டரை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறேன் என்று டிரைலர் பார்த்த பலரும் பாராட்டினார்கள். பெட்ரோல், டீசல் என எளிய மக்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் இந்த பொருளுக்கு பின்னால் இப்படியான மாஃபியா நடக்கிறதா என்பதை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கான படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சினிமாவை உண்மையாக நேசிக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்காகவே இந்த படம் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்திற்காக 30 நாட்களும் மேலாக கடலில் ஷூட் செய்து இருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உதவிய அத்தனை மீனவர்களுக்கும் நன்றி. அதுல்யாவும் சூழலை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்தார். படத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். தீபாவளிக்கு என் படம் வருவது பெரும் மகிழ்ச்சி. எங்களுடைய முயற்சிக்கு உங்களுடைய ஆதரவும் அன்பும் தேவை" என்றார்.
ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'
வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவர், தனது வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க ஒரு வாரிசை நியமிக்கப் போராடுகிறார். அவர் குடும்பத்தையும், தனது சாம்ராஜ்யத்தையும், மிக முக்கியமாக தனது பாரம்பரியத்தையும் காப்பாற்ற போராடுகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸாக குடும்ப கேங்ஸ்டர் மற்றும் வாரிசுரிமையை மையமாகக் கொண்டு நகரும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'. ஆர். மாதவன், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கி இருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் சாருகேஷ் சேகர் பகிர்ந்து கொண்டதாவது, "'லெகஸி' எனக்கு மிகவும் பர்சனல். நான் நினைத்ததை கொண்டு வர படைப்பு சுதந்திரம் கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு நன்றி. மனித உறவுகளின் சிக்கல் மற்றும் உணர்ச்சிகள் குறித்தான கதை எப்போதும் எனக்கு ஆர்வமூட்டும். அதன் அடிப்படையில், கேங்ஸ்டர் உலகின் பின்னணியில் இதை எழுதுவது அதை இன்னும் சுலபமாக இருந்தது. இதற்கு எனது திறமையான குழுவும் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. இந்தக் கதையை பார்வையாளர்கள் பார்த்த பின்பு அவர்களின் கருத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.
நடிகர் மாதவன் பகிர்ந்து கொண்டதாவது, "ஒரு கதை கேட்கும்போது உங்களுக்குள் இருக்கும் நடிகரை அந்தக் கதை சந்தோஷப்படுத்தும்போது நிச்சயம் அதில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். அப்படித்தான், நான் 'லெகஸி' சீரிஸிலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்திய ஓடிடி தளத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு சிறப்பான கதை மற்றும் திருப்பத்துடன் இது உருவாகி இருக்கிறது. இயக்குநர் சாருகேஷ் சேகர், ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் நெட்ஃபிலிக்ஸில் இந்தத் தொடர் பார்த்து ரசிக்க ஆர்வமாக இருக்கிறோம்" என்றார்.
நடிகை நிமிஷா சஜயன், "நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்னுடைய முதல் சீரிஸ் 'லெகஸி' என்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். எமோஷன், த்ரில் ஆகியவை கொண்ட இந்தக் கதையில் அற்புதமான குழுவினர் பணியாற்றியுள்ளனர். இரண்டாவது முறையாக ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் பணியாற்றி இருக்கிறேன். எங்கள் இயக்குநர் சாருகேஷ் மற்றும் அவரது திறமையான குழுவினர் பார்வையாளர்கள் விரும்பும்படியான அற்புதமான கதையை கொடுத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை".
இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!
திறமையான இளம் ஸ்டார்ட்டப் நிறுவனரான தாராவின் பயணம் மென்மையான அதேசமயம் துணிச்சலான முதலீட்டாளரான மேத்யூவுடன் இணையும்போது இன்னும் வலுவடைகிறது. நம்பிக்கை அடிப்படையிலான டேட்டிங் செயலியை தாரா ஆதரிக்கும் அதே வேளையில், கெமிஸ்ட்ரி அடிப்படையிலான ஒரு டேட்டிங் செயலியை மேத்யூ ஆதரிக்கிறார். இந்த விவாதத்தை தீர்த்து வைக்க அவர்கள் ஒருவருக்கொருவர் சவால் விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸாக பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கிறது #Love.
இதுகுறித்து இயக்குநர் பாலாஜி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "எதிரெதிர் துருவம் ஈர்க்கும் என்பது காலங்காலமாக காதலின் எழுதப்படாத விதி. ஆனால், இந்தக் காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் டேட்டிங் செயலிகளில் அது எப்படி மாறியிருக்கிறது என்பதை புதிய திருப்பத்துடன் சொல்லி இருக்கிறோம். இன்றைய டேட்டிங் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தக் கதை, காதல் பற்றிய காலத்தால் அழியாத கேள்விகளை ஆராய்கிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் மே6 என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியது இன்றைய பார்வையாளர்களுக்கு இந்த அழகான கதையை கொண்டு சேர்ப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுத்தது. கணிக்க முடியாத காதலை ஆழமான மனித உணர்வுகளுடன் பார்வையாளர்களுடன் சேர்ந்து கொண்டாட காத்திருக்கிறோம்" என்றார்.
நடிகர் அர்ஜூன் தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது. ஒரு டேட்டிங் செயலியைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஐடி ஸ்டார்ட்டப்பின் துடிப்பான பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, டிஜிட்டல் யுகத்தில் உண்மையான இணைப்பைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்களை பேசுகிறது. என் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தக் கதையையும் என் கதாபாத்திரத்தையும் நிச்சயம் பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நெட்ஃபிலிக்ஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த், பாலாஜி மோகன் மற்றும் முழு குழுவுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, "ஸ்வைப்ஸ், மேட்ச் மற்றும் உடனடி செய்திகளின் யுகத்தில், #Love இரண்டு எதிரெதிர்கள் துருவத்தை சேர்ந்தவர்களை சந்திக்க வைக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் எவ்வாறு தடுமாறுகின்றனர் என்பதையும், வேகமான உலகில் எதிர்பாராத பிணைப்புகள் எவ்வாறு உருவாகலாம் என்பதையும் ஆராய்கிறது. இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது இயக்குநர் குழு, ஒளிப்பதிவாளர் ஹரிஷ், சக நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அர்ஜுன் சிதம்பரம், ஹரிணி, கிரண், ஸ்டைலிஸ்ட் பல்லவி ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர்" என்றார்.
இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!
தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தொடர் கொலையாளியை ஒரு மனநல மருத்துவர் மதிப்பிடுகிறார். இதன் மூலம் அதிர்ச்சி, வஞ்சகம் மற்றும் உளவியலை கையாளுதல் ஆகியவற்றின் வலையை அவிழ்க்கிறார். கொலையாளி உண்மையிலேயே குற்றவாளியா அல்லது இருண்ட விளையாட்டில் பாதிக்கப்பட்ட மற்றொருவரா என்ற கேள்வி எழுகிறது. அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள இந்த 'ஸ்டீபன்' படம் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது.
இதுகுறித்து இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்துகொண்டதாவது, "'ஸ்டீபன்' கதை ஒரு அமைதியான, கால்குலேட்டட் தொடர் கொலையாளியைப் பற்றியது. அவர் அமைதியற்ற தனிப்பட்ட ரகசியங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து கோமதி சங்கர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநராக இந்தப் படம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. முடிந்தளவு உண்மைக்கு நெருக்கமாகவும் அக்கறையுடனும் இந்தக் கதையை எடுத்துள்ளோம். இதுபோன்ற ஜானரில் கதை சொல்ல அனுமதித்த நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு நன்றி. எங்களுடைய படத்தை உலகம் முழுவதும் உள்ள 190 நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் பார்ப்பார்கள் என்பதை நினைக்கும்போதே மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
எழுத்தாளர் மற்றும் நடிகர் கோமதி ஷங்கர் பகிர்ந்து கொண்டதாவது, "குற்றத்திற்கு அப்பால் அதன் பின்னால் இருக்கும் மனிதனைப் பார்க்கும் ஒரு படமாக 'ஸ்டீபன்' உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரம் அன்பானவராக அதே சமயம் பாதிப்படைந்த ஒருவராகவும் இருக்கும். அதே நேரத்தில், அவரது இருள் எப்போதும் அப்படியே இருக்கும். ஒரு சீரியல் கில்லரின் நிழலை உண்மைத்தன்மையுடன் கொண்டு வருவது சவாலானதாக இருந்தது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இந்தக் கதை வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில் இன்று நடைபெற்றது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, "மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது. இந்த படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாழ்த்துக்கள். இதைப்போல பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ என ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். திறமையாளர்கள் மற்றும் நல்ல கதைகளை ஏஜிஎஸ் நிறுவனம் எப்போதும் ஆதரிக்கும். அந்த வகையில், இந்தப் படத்தின் சிறு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.
பின்னணி பாடகர்கள் திப்பு & ஹரிணி, "இந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விஷயம் எங்களுக்கே நடப்பது போல பெருமையாக உள்ளது. சாயின் கடின உழைப்பிற்கு இன்னும் பெரிய உயரம் செல்ல வேண்டும். இந்த வயதில் ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேலை செய்கிறான்" என்றார்.
நடிகர் ஜிபி முத்து, "பிரதீப் ரங்கநாதனின் படங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அவரின் 'டியூட்' படமும் பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்று வாழ்த்தினார்.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, "நானும் இயக்குநர் கீர்த்தீஸ்வரனும் 'சூரரைப் போற்று' படத்தில் ஒன்றாகப் பணிபுரிந்தோம். அந்தப் படத்தில் அவர் உதவி இயக்குநராக இருந்தபோதே அவருடைய ஆர்வம் எனக்கு தெரிந்தது. அந்தப் படம் முடிந்ததும் மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் கீர்த்தியை அறிமுகம் செய்தேன். அவர்களுக்கும் கீர்த்தி சொன்ன 'டியூட்' கதை உடனே பிடித்து விட்டது. 'டிராகன்' படத்திற்கு பிறகு பிரதீப்புடன் இணையும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் மெச்சூர்டான பிரதீப்பை நீங்கள் பார்ப்பீர்கள். மமிதாவும் பிரதீப்பும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். சரத் சார் சீனியர் நடிகர் என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் நிரூபித்துள்ளார். இந்தப் படத்திற்கு முன்பிருந்தே சாய் அபயங்களின் மெலோடி பாடல்களுக்கு நான் ரசிகன். படத்தின் தொழில் நுட்பக் குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் எனது அணியினர் அனைவருக்கும் நன்றி".
நடிகர் சரத்குமார், " அறிமுக இயக்குநராக கீர்த்திஸ்வரனுக்கு தயாரிப்பு நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிகப் பெரும் ஆதரவு கொடுத்துள்ளது. எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற துடிப்பு கொண்ட இயக்குநர்- நடிகர் பிரதீப் ரங்கநாதன். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. முதலில் 'டியூட்' படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால், கீர்த்தி கதை முழுவதும் டெடிகேட்டடாக என்னிடம் சொன்ன பின்பு புதிய சரத்குமாரை இந்த படத்தில் காண்பதற்கான முயற்சி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. படத்தில் மமிதா, சாய் என அனைவருமே சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை".
நடிகை மமிதா பைஜூ, " இந்த பட வாய்ப்பு கொடுத்த என்னுடைய இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பிரதீப் ரங்கநாதனிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படத்தில் சில காட்சிகள் நடிக்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கும். அப்போது சரத் சார் என்னை கூல் செய்வார். எல்லோரும் தீபாவளிக்கு 'டியூட்' படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் Y ரவி ஷங்கர், "இப்படி ஒரு நல்ல படத்தை கொடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரனுக்கு நன்றி. மமிதா மற்றும் சாய் அபயங்கர் எங்கள் பேனரில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. தமிழில் இது எங்களுடைய இரண்டாவது படம். 8 வயது முதல் 80 வயது வரை எல்லா வயதினரும் இந்த படத்தை பார்த்து கொண்டாடலாம். லவ், எமோஷன், ஆக்சன், செண்டிமெண்ட் என எல்லா விஷயங்களும் இந்த படத்தில் அமைந்துள்ளது" என்றனர்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர், " ரொம்பவே எமோஷனலாக உள்ளது. எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய 'கட்சி சேரா' பாடல் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கீர்த்தி என்னிடம் கதை சொன்னார். உடனே, அவருடன் வேலை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது ஸ்பெஷலாக உள்ளது. பிரதீப் ப்ரோ, கீர்த்தி ப்ரோ, மமிதா, என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. 'ஆச கூட...' பாடலில் மமிதாவை காஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், டேட் பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. எனக்கு பிடித்ததை செய்ய அனுமதித்த என் பெற்றோருக்கு நன்றி. பாடல்களைப் போலவே பின்னணி இசையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்".
இயக்குநர் கீர்த்தீஸ்வரன், "எல்லோரைப் போலவும் நானும் உதவி இயக்குநராக, இயக்குநர் சுதா கொங்கராவிடம் 7 வருடங்கள் பணிபுரிந்தேன். 'டியூட்' படத்தின் கதை எழுதி முடித்ததும் நண்பரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நிகேத் பொம்மியிடம் கதை சொன்னேன். அவர் பயங்கரமாக என்ஜாய் செய்துவிட்டு மைத்ரியிடம் பேசுவதாக சொன்னார். ஆனால், அப்போது கூட படம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பிறகு ஹைதராபாத்தில் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னதும் உடனே அவர்களுக்கு பிடித்து விட்டது. படத்தில் 'ஊரும் பிளட்டும்' பாடல் உருவாவதற்கு முன்பு நமக்கு பிடித்தது போல செய்யலாம். இப்போதுள்ள டிரெண்டுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்றுதான் யோசித்தோம். ஆனால், பாடல் வெளியானதும் மக்கள் எல்லோருக்கும் பிடித்து போய் சென்சேஷன் ஆகிவிட்டது. பழைய சரத் சாராக ஆடல் பாடலுடன் இந்த படத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து தான் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்து விட்டது. மமிதாவுக்கும் நன்றி. 'பிரேமலு', 'சூப்பர் சரண்யா'வில் என்ன செய்தாரோ அதுவும் இந்த படத்தில் இருக்கும். அதை தாண்டி நிறைய எமோஷனாகவும் நடித்துள்ளார் மமிதா. படத்தில் உங்களுக்கு எல்லோருக்கும் பிடித்த பயங்கர ஹைப்பரான பிரதீப்பையும் பார்ப்பீர்கள். இன்னொரு பக்கம் மெச்சூர்டான, எமோஷனலான இன்னொரு வெர்ஷன் பிரதீப்பையும் பார்ப்பீர்கள். என்னுடைய முதல் படத்திலேயே நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே கொண்டு வர சப்போர்ட் செய்த பிரதீப் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. திரையரங்கில் பார்த்து கொண்டாடும் படியாக லவ், ஆக்சன், எமோஷன், ஹியூமர் என எல்லாமே இந்த படத்தில் இருக்கும்" என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன், "உங்களில் ஒருவனான என்னை மேடையேற்றியதற்கு நன்றி. சரத் சார் இந்தப் படத்தை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. நான் பார்த்து வளர்ந்த ஹீரோ உடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவருடைய வயசும் எனர்ஜியும் எனக்கு பயங்கர இன்ஸ்பிரேஷன். 'லவ் டுடே' படத்திற்காக ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தபோது மமிதாவை ஒரு ஷார்ட் ஃபிலிமில் பார்த்தேன். 'லவ் டுடே' படத்திற்காக அவரை முயற்சி செய்தபோது அவர் 'வணங்கான்' படத்தில் பிசியாக இருந்ததால் பிடிக்க முடியவில்லை. ஆனால், 'டியூட்' படத்தில் மமிதா தான் நடிக்கிறார் என கீர்த்தி சொன்னபோது சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இதுவரை பார்க்காத மமிதாவை இந்த படத்தில் பார்ப்பீர்கள். நேஹாவும் அற்புதமாக நடித்துள்ளார். டிராவிட், ரித்து, ரோகிணி மேம் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக கீர்த்தி வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. அவரை என் தம்பி போலதான் பார்க்கிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு என்னை பாடவும் வைத்த சாய் அபயங்கருக்கு நன்றி. தீபாவளியை 'டியூட்' படத்துடன் கொண்டாடுங்கள்" என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா