சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் அகத்தியன் - கவிதை 482015
Updated on : 05 August 2015

தனி அறையில்

நொடிப்பொழுதில்

எனக்கு

மாமல்லபுரத்தின் சிற்பம் காட்டினாய்.

கஜுராஹோவை

கண்முன் நிறுத்தினாய்.

பிறந்ததைப்போலவே

வளர்ந்திருக்கிறேன் என்றாய்.

பின் வந்தவை

நான் பெண் ஆனதும்

பிரம்மன் எனக்கு வைத்த

பொட்டுக்கள் என்றாய்.

கூந்தலுக்குள்

ஒரு கோலம் போடச் சொன்னாய்.

காதுகளைக் காதுகளில்

வரையச்சொன்னாய்.

நெற்றிக்கு

முத்த ஒத்தடங்கள்

பழசு என்றாய்.

கண் இமைகளினால்

நெற்றியைக்

கவ்விப்பிடி என்றாய்.

உன் முத்தங்களைக்

கண்களுக்குக்கொடு

எனக்கட்டளை இட்டாய்.

இதழ்களில் உண்ணாதே

பறிமாறு என்றாய்.

பிரம்மனின் பொட்டுக்களை

விரல்தொட்டு

ஒட்டிக்கொள் என்றாய்.

கன்னத்தின்

மெல்லிய உரோமங்களால்

இடையில்

ஒரு கவிதை எழுது என்றாய்.

களைப்பாக இருந்தால்

நீரருந்தச்சொன்னாய்.

அந்தத் தனி அறையில்

கஜுராஹோவைச்

சுற்றிக்காட்டினாய்.

பின் ஒரு

கவிதை எழுதச்சொன்னாய்.

பூமி பார்த்துப் படுத்து

முதுகில் எழுது என்றாய்.

எழுத்தறிவித்தவன்

இறைவன் என்றேன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா