சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

ஜல்லிக்கட்டை மீட்டு தந்த மாணவர்களுக்கு வைரமுத்துவின் வாழ்த்து கவிதை
Updated on : 26 January 2017

மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவாக தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு மீண்டும் கிடைத்துள்ளது.



 



மாணவர்களின் இத்தகைய வரலாற்று சாதனைக்கு தனது கவிதை மூலம் கவிப்பேரரசு வாழ்த்துகளை சமர்ப்பித்துள்ளார்.



 



வைரமுத்துவின் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள அந்த வாழ்த்து கவிதை:



 



 வாடிவாசல் திறந்துவிடும்



வாழ்த்துகிறேன் தம்பி – இனி



கோடிவாசல் திறக்கும்உன்



கொள்கைகளை நம்பி



 



தலைவர்களே இல்லாத



கட்சியொன்று காட்டி – ஒரு



தலைமுறைக்கே வழிசொன்னீர்



தமிழினத்தைக் கூட்டி



 



அடையாளம் தொன்மங்கள்



அழிக்குமொரு கூட்டம் – உங்கள்



படையாழம் பார்த்தவுடன்



பயந்தெடுத்த தோட்டம்



 



பீசாவும் பெப்சியுமே



இளைஞர்கள் என்று – வாய்



கூசாமல் சொன்னவரைக்



கொன்றுவிட்டீர் கொன்று



 



சொல்வாங்கி எல்லாரும்



சூளுரைத்த பாட்டு - கடல்



உள்வாங்கிப் போனதடா



உங்கள்குரல் கேட்டு



 



ஒருகொம்பு ஆணென்றால்



மறுகொம்பு பெண்தான் – அந்த



இருகொம்பின் மத்தியிலே



இடுங்கியது மண்தான்



 



தண்பனியால் சுடுகதிரால்



தமிழினமா சாகும்? – அட



தண்ணீரில் வீழ்வதனால்



வெயில்நனைந்தா போகும்?



 



தெருவிருந்து போராடத்



திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்



கருவிருந்து பெற்றாரின்



கால்களுக்கும் வணக்கம்



 



சதுராடிக் களம்கண்ட



சகோதரிகாள் வணக்கம் – உங்கள்



எதிர்காலக் கருப்பைகள்



நெருப்பைத்தான் சுமக்கும்



 



காளைகளை மீட்டெடுக்கக்



களம்கண்ட கூட்டம் – இனி



நாளைகளை மீட்டெடுக்க



நாணில்அம்பு பூட்டும்



 



வரம்புகளை யார்விதித்தார்



வரட்டுமொரு யுத்தம் – எங்கள்



நரம்புகளில் ஓடுதடா



ராஜ ராஜ ரத்தம்



 



போராடிச் சாதித்துப்



புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்



சாராயம் குறித்தும்நீர்



ஆராய வேண்டும்…

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா