சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தலாய் லாமா சந்திப்பு
Updated on : 11 November 2015

இன்று காலை தலாய் லாமா அவர்களை சந்தித்தேன்.



 



 



அவரது இணகத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை காந்திஜியின் ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக இருப்பதும்,  இது ஆன்மிகம் சார்ந்த சந்திப்பு இல்லை எனினும் இந்த சந்திப்பு எனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்தது.



 







எனக்கு ஆன்மிக விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடில்லாமல் இருந்ததோ அதே போல அவருக்கு சினிமா விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை. 'நான் இதுவரை ஒரு சினிமாவையும் பார்த்ததில்லை, தொலைக்காட்சியைக் கூட பார்த்ததில்லை' என அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.



 





 

ஆனாலும், எனது கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த 'அகிம்சை' என்ற மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என அறிவுரைத்தார்.



 



 







அகிம்சையின் பால் எனக்குமிருக்கும்  நம்பிக்கையை அவரிடம் சொன்னேன், விரைவில் அந்த திசையில் பயணிப்பேன் என்றும் கூறினேன்.



 







அவர் அறிமுகம் இல்லாத யாருடனும், அவருக்கு அந்நியமான எங்களுடன் நேரம் செலவழிப்பதை அவர் விரும்பி  உற்சாகத்தோடு உரையாடினார்.. அது எனக்கு 2000 ஆண்டுகள் பழமையான சமணர்  கவிதையை ஞாபகப்படுத்தியது.



 









யாதும் ஊரே யாவரும் கேளிர்!



 







கமல்ஹாசன்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா