சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பாலா இயக்கத்தில் மல்டிஸ்டாரர் திரைப்படம்
Updated on : 17 November 2015

இயக்குனர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக பிரம்மாண்டமான மல்டிஸ்டாரர் திரைப்படம்







'சேது', 'பிதாமகன்', 'நான் கடவுள்' போன்ற தமிழ் திரையுலகின் முக்கியமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா.



 







பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.



 







விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்து தான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.



 







தற்போது சசிகுமார் நாயகனாக நடித்து பாலா இயக்கியிருக்கும் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் 1000வது படம் இது. விரைவில் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.



 







தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகள் மும்முரமாகி இருக்கிறார் இயக்குநர் பாலா. நடிகர்கள் ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, அதர்வா, ராணா ஆகியோரை  இணைத்து தமிழ் திரையுலகின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பாலா.



 







இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க பாலா திட்டமிட்டு இருக்கிறார்.



 







முன்னணி நாயகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதால், தற்போதே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா