சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

அனுஷ்காவை போலவே 'இஞ்சி இடுப்பழகி'
Updated on : 17 November 2015

பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான 'இஞ்சி இடுப்பழகி' ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா  சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக  இருந்தாலும், தயாரிப்பு நிறுவனமான        பிவிபி சினிமா இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.



 



 



அனுஷ்காவை  போலவே 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படமும்  தன்னுடைய  எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா, அனுஷ்கா , ஊர்வசி , பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் இப்போது கௌரவ வேடத்தில் நாகார்ஜுன், ஜீவா, பாபி சிம்மா, ரானா ஆகியோருடன் ஹன்சிகா,தமன்னா,ஸ்ரீ திவ்யா, ரேவதி ஆகியோர் நடித்து உள்ளனர்.ஜீவாவும் , ஹன்சிகாவும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், பாபி  சிம்மாவும், ஸ்ரீ திவ்யாவும் ஆர்யாவுடன் பெங்களூரு days remake படத்தில் இணைந்து நடித்து இருப்பவர்கள் என்பதாலும் மறுப்பேதும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டனர்.



 



 



'இஞ்சி இடுப்பழகி'  படத்தின் மையக் கருத்து அழகு என்பது  உடல் அமைப்பிலோ, தோற்ற பொலிவிலோ இருப்பது அல்ல. நம்முள் இருக்கும் நல்ல எண்ணம் தான் உண்மையான் அழகு  என்பதுதான். இந்தக் கருத்தை  ஆமோதிக்கும் காஜல்  அகர்வாலும் , தமன்னாவும் நடிக்க கேட்டவுடன் உடனே  நடிக்க ஒப்புக் கொண்டனர் . அழகாக இருப்பதற்கு, இயற்கையான முறைகளே போதும் , செயற்கை சாதனங்கள்  வேண்டாம் என்றக்  காரணத்தை வலியுறுத்தும் ரேவதியும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.பி வி பி நிறுவனத்தாருக்கு நட்சத்திரங்கள் இடையே நல்ல தொடர்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று.



 



 



 பெண்கள் இடையே என்றும் பிரபலமாக இருக்கும் ஆர்யாவும்  சமீபத்திய பிரம்மாண்ட வெற்றிகளால் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க படும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் பழம் பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் கே எஸ் பிரகாஷ் ராவ். மரகத மணியின்  இசையில் , மதன் கார்க்கியின்  வரிகளில் வெளி வந்த 'இஞ்சி இடுப்பழகி' பாடல்களும் , முன்னோட்டமும் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து உள்ளது.



 





பல்வேறு தரப்பினரை கவரும் 'இஞ்சி இடுப்பழகி' இந்த மாதம் 27 தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளி ஆகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா