சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

போக்கிரி ராஜா
Updated on : 27 November 2015

பிடிஎஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மோத்வானி, அறிமுக நாயகி மானஸா, மனோபாலா, சித்ரா லட்சுமணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துவரும் படம் “போக்கிரி ராஜா”.



 



தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் வெற்றிப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கி வருகிறார்.



 



இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பாண்டிச்சேரியில் கொட்டும் மழையிலும் இடைவிடாது நடைபெற்று வந்தது. அப்போது சுற்றி நின்றிருந்த மக்கள் கூட்டத்தில் ஹன்சிகா சிக்கிக்கொண்டார். அவரை படத்தின் நாயகன் ஜீவாவும், சிபிராஜும் கூட்டநெரிசலில் இருந்து மீட்டு பத்திரமாக கேரவானுக்குள் அனுப்பி வைத்தனர். ஜீவா மற்றும் சிபிராஜின் இந்த உதவியால் நெகிழ்ந்த நாயகி ஹன்சிகா இருவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.



 



மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் போக்கிரி ராஜா படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியை தொடர்ந்து அடுத்து சென்னையிலும் நடைபெற உள்ளது.



 



இப்படத்திற்கு இசை - டி.இமான்; ஒளிப்பதிவு – ஆஞ்சநேயலு; கலை – வனராஜா; எடிட்டிங் – சாபு; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ராம்பிரகாஷ் ராயப்பா

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா