சற்று முன்

விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ வெளியானது   |    'திரு மாணிக்கம்' திரைப்படம், 24 ஜனவரி 2025 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!   |    சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' வெளியிட்டு தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ஜெய் பீம், குட்நைட், லவ்வர், வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’   |    இனி யார் படம் எடுத்தாலும் 'பாட்டல் ராதா' படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது - இயக்குனர் அமீர்   |    கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது, அது ஒரு வரலாறு, சரித்திரம் - நடிகர் சரத்குமார்   |    சந்தானத்தின் பிறந்த நாளான இன்று 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை!   |    யூடுபிலிருந்து சினிமாவிற்கு வருவது அத்தனை எளிதல்ல - இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்   |    நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படத்துக்கு விருது!   |    படப்பிடிப்பு நிறைவு, உற்சாகத்தில் 'நிறம் மாறும் உலகில்' படக்குழுவினர்!   |    சிறு இடைவேளைக்குப் பிறகு, முன்னணி நடிகை நஸ்ரியா நஜிம் நடிக்கும் 'சூக்ஷ்மதர்ஷினி'   |    முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'!   |    நல்ல நோட்டு தான் கள்ள நோட்டு! - இயக்குனர் எம் ஜி. ராயன்   |    இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!   |    'டி என் ஏ' திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்   |    ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது ZEE5 !   |    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள்!   |    அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார் - இயக்குநர் கிருத்திகா உதயநிதி   |    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'   |    நடிகர் தனுஷ் வெளியிட்ட 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டீசர்!   |   

சினிமா செய்திகள்

ஆகம்
Updated on : 02 February 2016

ஜ்யோ ஸ்டார் என்டர் பிரைசஸ் சார்பில் எம் .கோட்டீஸ்வர ராஜூ , எம். ஹேமா ராஜு இருவரும் தயாரிக்க இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ், தீக்ஷிதா , ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கருக்கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதி இயக்கி இருக்கும் படம் ஆகம் . 



ஆகமம் என்பதன் தமிழ் வடிவமே ஆகம் . ஆகம் என்ற சொல்லுக்கு வந்து சேர்தல் என்று பொருள் என்கிறார்  டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம். இவர் மனித வள மேம்பாட்டுத்துறை வல்லுநர் . தனது சிறப்பான பயிற்சிப் பட்டறைகள் மூலம் பல லட்ச்ம் இளைஞர்களுக்கு தன்னபிக்கைப் பயிற்சி கொடுத்து மனச் சோர்வை நீக்கிய சாதனைக்கு சொந்தக்காரர் .



இவர் எழுதிய ஒரு சிறகு போதும் என்ற தன்னம்பிக்கை நூல் விகடன் பிரசுரத்தின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்று என்கிறார்  டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.



தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராசு என் ஐ டி யில் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ) எம் டெக் படித்து லண்டனில் வாழும் தொழில் அதிபர் . ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்கள் நடத்துபவர் .



ஆகம் என்ன கதை ?



''இந்தியாவுக்கு எதிராக எத்தனையோ விதமான தீவிரவாத செயல்பாடுகள் நடக்கின்றன. இதில் பலரும் விழிப்புணர்வு அடையாத திறமைக் குறைபாட்டை உருவாக்குகிற -- நாலெட்ஜ் டெர்ரரிசம் எனப்படும் அறிவு அழிப்புத் தீவிரவாதம் பற்றி பேசுகிறேன் " என்று ஆரம்பிக்கும்  டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் அது பற்றி கம்பீரமாக சொல்கிறார் . 



''  இன்று உலகின் மிக முக்கியமான நாடுகளில் முக்கியமான தொழில் நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் எல்லோரும் இந்தியர்கள்தான் . 



இந்தியாவில் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்தியக் கல்வி நிறுவனங்களில் படித்த அறிவாளிகளை அயல்நாட்டு நிறுவனங்கள் கொத்திக் கொண்டு செல்கின்றன. பின்னர் அவர்களை வைத்தே மேலும் மேலும் இந்தியாவில் இருந்து அறிவாளிகளைக் கொண்டு செல்கின்றன. அதனால் இந்தியாவின் முன்னேற்றம் தடை படுகிறது . நம்மவர்களால் அந்த அந்நிய  தேசங்கள் முன்னேறுகின்றன . 



இதுதான் இந்தியாவின் முன்னேற்றத்தைக் கெடுக்கிற-- இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரிய தீவிரவாதம் . இதைதான் நான் படமாக ஆக்கி இருக்கிறேன் ." என்கிறார்   டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராமிடம், 



 கதை என்ன என்று அவரிடம் கேட்ட போது ....



'' அண்ணன் தம்பிகள் இருவர் . அண்ணன் அந்நிய நாட்டு வாழ்வை விரும்புபவர் . அந்த வாழ்க்கை முறைக்கு ஆசைப்படுபவர்  ஆற்றோரம் காலைக் கடன் கழிக்கப் போனாலும் டிஷ்யூ பேப்பரோடு போகும் குணம் உள்ளவர் .  தம்பி நேர் மாறானவன் . இந்தியர்களின் உழைப்பு அறிவு திறமை எல்லாம் இந்தியாவுக்கே பயன்படவேண்டும் என்று ஆசைப்படுபவன் . இவர்கள் வாழ்க்கை முறை நமது சமூகத்தோடு இழையும்போது நடக்கும் சம்பவங்களே இந்தக் கதை . 



''நாட்டில் நடைபெறும் லஞ்ச லாவண்யம் , ஊழல் , திறமைக்கு மதிப்பின்மை , அரசியல் குறுக்கீடு இவற்றால்தானே பலரும் மனம் வெறுத்து வெளிநாட்டுக்கு போக நினைக்கிறார்கள் . அப்படி இருக்க , இது ஏதோ அந்நிய நாட்டு சதி என்பது போல நீங்கள் சொல்வது எப்படி சரியாகும்?'' என்று உங்களுக்கு தோன்றலாம் . .



வெகுஜனம் அப்படிதான் நினைத்துக் கொண்டு இருக்கிறது . ஆனால் உண்மை அப்படி இல்லை . நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் இல்லை என்று சொல்லவில்லை . ஆனால் இப்போது அது குறைவுதான் . இன்று  இந்தியாவில் திறமைக்கும் உழைப்புக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன .. இது பற்றி நான் ஒரு சர்வே எடுத்து அதன் முடிவுகளை வைத்துதான் கதையே அமைத்தேன் . 



உண்மையில்  டாலர் சம்பள ஆசை காட்டி அந்நிய நிறுவனங்கள் இழுப்பதுதான் நம்மவர்கள் வெளிநாடு போகக் காரணம் . இந்த விசயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது . 



உதாரணமாக  ஒருவர் அமெரிக்காவில் நாலாயிரம் டாலர் சம்பளம் வாங்குகிறார் என்றால் அமெரிக்காவை ஒப்பிடும்போது அது ஒன்றும் பெரிய சம்பளமே இல்லை . ஆனால் ஒரு டாலரின் மதிப்பு அறுபது ரூபாய் என்பதால் இந்திய மதிப்பில் அந்த சம்பளம் சுமார் இரண்டரை லட்சம் என்று ஆகிறது . இதை வைத்துதான் நம்மவர்களை அவர்கள் இழுத்து நாலெட்ஜ் டெர்ரரிசம் எனப்படும் அறிவழிப்புத் தீவிரவாதத்தை செய்கின்றனர் " என்கிறார் .



இதை ஒட்டியே  பேசும் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜூ '' அமெரிக்கா ஏர்போர்ட்டில் நான் சந்தித்த ஒரு இந்தியர் எம் பி ஏ படித்தவர் . அவர் அங்கே விமான நிலையத்தின் தரையை துடைக்கும் வேலை செய்து கொண்டு இருந்தார் . அவரிடம் பேசியபோது அவர் சொன்னதும் டாலர் மதிப்பால் கிடைக்கும் பணம் பற்றித்தான் . அது மட்டுமல்ல 'நான் இங்கே இப்படி தரை துடைக்கும் வேலை செய்வது இந்தியாவில் உள்ள என் அம்மாவுக்கு தெரிந்தால் , என் அம்மா செத்தே போய் விடுவார் 'என்று சொன்னார் 



பல கல்வி நிறுவனங்களில் படித்து முடித்த பின்பு அமெரிக்க போக ஆசை உள்ளவர்கள் கை தூக்குங்கள் என்று சொன்னால் தொண்ணூறு சதவீதம் பேர் உடனே கை தூக்குகிறார்கள் . அவர்களில் பலர் இங்கும் நன்றாக சம்பாதிக்க வாய்ப்பு உள்ளவர்கள்தான் . 



இந்த மோகத்தை மாற்றவே இந்தப் படம் எடுத்து இருக்கிறோம் " என்கிறார் கோட்டீஸ்வர ராஜு.



தொடரும் இயக்குனர்  விஜய் ஆனந்த் ஸ்ரீராம் " இப்படி எல்லாம் சீரியசாக இருப்பதால் , இது என்னவோ  டாக்குமெண்டரி மாதிரி இருக்கும் என நினைத்து விடாதீர்கள் . காமெடி,  காதல் , குத்தாட்டம் , சண்டை கிளாமர் எல்லாம் இருக்கிற பக்காவான கமர்ஷியல் சினிமா " என்கிறார் . 



சக தயாரிப்பாளரான " முக்கியமாக இது ஒரு பரபரப்பான இன்டரஸ்டிங்கான சோஷியல் திரில்லர் . படம் அவ்வளவு சுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருக்கும் . படம் முடியும் போது பார்த்த ஒவ்வொருவர் மனதிலும் நம் அறிவை அந்நியநாட்டுக்கு அடிமைப்படுத்தக் கூடாது என்று தோன்றும் ." என்கிறார் உறுதியான நம்பிக்கையோடு . 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா