சற்று முன்

போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |   

சினிமா செய்திகள்

க்யூப் விஷயத்தில் விஷால் முக்கிய நடவடிக்கை!
Updated on : 15 June 2017

க்யூப் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், புதிதாக முதலீட்டாளர் ஒருவரைப் பிடித்துள்ளார் என தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.



 



இதுதொடர்பில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், "அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். க்யூப் விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், புதிதாக முதலீட்டாளர் ஒருவரைப் பிடித்துள்ளார். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 22,500 வாங்கக்கூடிய இடத்தில் 5000 ரூபாயும் மற்றும் சிறுபடங்களுக்கு 22,500 ரூபாய்க்கு பதிலாக 2,500 ரூபாய்க்கும் அளிக்க ஒரு ஏற்பாடு செய்துள்ளார்.



 



இதில் திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடைய ஆதரவின்றி இதனை செயல்படுத்த முடியாது. பெரிய படங்களின் தயாரிப்பாளரால் 22,500 ரூபாயை கட்டிவிட முடியும். இந்த முடிவால் சிறுமுதலீட்டு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பயனாக இருக்கும். அவர்களுடைய மொத்த பாரமும் கீழே இறக்கி வைத்துவிடக்கூடிய சூழல் ஏற்படும். அப்படியொரு சூழலை ஏற்படுத்துவதற்கு பெரிய படங்கள் மற்றும் சிறு படங்கள் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஒற்றுமையை முதலில் கடைபிடிக்க வேண்டும்.



 



ஏதாவது ஒரு தேதியை முடிவு செய்துவிட்டு, அதற்கு மேல் இனிமேல் 23,500 ரூபாய் கட்ட மாட்டோம். 5000 ரூபாய் அல்லது 2500 ரூபாய் மட்டுமே கட்டுவோம் என்ற முடிவை எடுக்க வேண்டும். அதை மீறும் தயாரிப்பாளர்கள், ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கு செய்யும் துரோகமாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும். அப்படி யாராவது முறியடிக்க வேண்டும் என நினைத்தால், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என முடிவு எடுத்தோம் என்றால் இந்த க்யூப் பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் வரும். அந்தக் காலம் வருவதற்கு நாட்கள் அதிகமாக இல்லை.



 



அனைத்து தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக இருந்து முடிவு எடுக்கும்போது, 50% திரையரங்க உரிமையாளர்கள் நாம் கஷ்டப்படுகிறோம் உதவியாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். இதர திரையரங்கு உரிமையாளர்களுடைய போக்கு வேறுமாதிரியுள்ளது. அப்படி ஒரு சூழல் இருக்கும் போது, இப்பிரச்சினையைச் சொல்லி புரியவைக்க வேண்டும். அவர்களும் நமது முடிவுக்கு கட்டுப்படுவது போல, சங்கத்தோடு பேசி அனைத்து தயாரிப்பாளர்களும் உழைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுடைய ஆதரவும், முழு ஒத்துழைப்பும் இந்த க்யூப் விஷயத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையோடு இதை செயல்படுத்தி வருகிறோம்" என்று ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா