சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

எங்களையும் வாழவிடுங்க - நடிகர் சங்கத்தின் குரல்
Updated on : 24 February 2016

நவீன பொழுதுபோக்கு சாதனங்களால் தற்போது அழிந்து கொண்டிருக்கின்றது நாடகம் துறை. அதையே நம்பி வாழும் நாடக கலைஞர்கள் இதனால் மிகுந்த கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர்.



 





கடந்த பொது தேர்தலில் இருந்து தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதால் அந்த நேரத்தில் எங்கள் நாடக கலைஞர்கள் வேலை இன்றி மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களின் குழங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் இதர  விஷயங்கள் பாதிக்கபடுகின்றன. 



 





எனவே தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி வழங்கி உதவிடவேண்டும் என்றும் இதற்காக தேர்தல் ஆணையம் விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் நடப்பார்கள்”. என்றும் கூறி மனு ஒன்றை தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லங்கோனி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து அளித்தனர்.



 



மனுவை பரீசிலித்த தேர்தல் அதிகாரி திரு.ராஜேஷ் லங்கோனி.IAS அவர்கள் ,தேர்தல் காலங்களில் சுதந்திரமாக மக்கள் செயல்படுவதற்க்கு சட்டப்படி எந்த தடையுமில்லை. நான் இது பற்றி விசாரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார். 



 





தேர்தல் நேரங்களில் எங்களது நாடக நடிகர்கள் கட்சி மற்றும் அரசியல் சார்ந்த நாடகங்கள் எதுவும் போடாமல் பார்த்துக்கொள்வது எங்கள் கடமை என உறுதி கூறினோம் மேலும் தேர்தல் அதிகாரி எங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்லில் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடிகர்களின் வீடியோ பதிவை செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளோம். என்று கூறினார்.



 





செய்தியாளர்களிடம் துணை தலைவர் .பொன்வண்ணன் இவ்வாறு கூறினார் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா