சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சிலை அவரது பிறந்தநாளில் திறப்பு!
Updated on : 22 June 2017

கவிப்பேரரசு வைரமுத்துவின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ள இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சிலை, அவரது பிறந்தநாளான ஜூலை 9 அன்று கே.பாலசந்தர் பிறந்த ஊரில் திறக்கப்படுகிறது.



 



சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.



 



சிலை திறப்புப் பற்றி கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திரையுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு பேராளுமை இயக்குநர் கே.பாலசந்தர். ஒரு மகனைப்போல என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப்போல் அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்; சமூகத்தின் இருட்டின்மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; தமிழ்  சினிமாவிற்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர். அவர் படங்களில் வெற்றிப் படங்கள் தோல்விப் படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்துகொள்ளப்பட்டவை புரிந்துகொள்ளப்படாதவை என்று மட்டுமே இனம் பிரிக்கலாம்.



 



அவருக்குச் சிலை எடுப்பது என்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றிமட்டுமல்ல; முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்தப் பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்” இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.



 



வெற்றித்தமிழர் பேரவையைச் சார்ந்த தஞ்சை இரா.செழியன், ஆசிப் அலி, சுப்பிரமணிய சர்மா, தருமசரவணன், பன்னீர்செல்வம், மற்றும் நல்லமாங்குடி கமலக்கண்ணன், ரெங்கநாதன், கும்பகோணம் தி.வெ.ஷத்தீஷ், சிலைச்சிற்பு செந்தில் உள்ளிட்டோர் விழாக் குழுவாகச் செயல்படுகிறார்கள்.



 



ஜூலை 9 மாலை 5  மணிக்கு நல்லமாங்குடி குரு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் விழா நடக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா