சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

ரெண்டு ஆட்சி மாறியாச்சு, இதுவரை ஒண்ணும் பெரிசா நடக்கலை - சுரேஷ் காமாட்சி
Updated on : 25 February 2016

சமிபத்தில் சென்னை கமலா திரையரங்கில் 'நேர்முகம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை நமீதா பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட நடிகர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.



 





ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் நேர்முகம். மேலும் இதை பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைத்திருக்கிறார் 



 



தயாரிப்பாளர் ஜின்னா, சுரேஷ் காமாட்சி, நடிகைகள் நமீதா, மீரா நந்தன், நடிகர்கள் பிரஜின், கூல் சுரேஷ் உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.



 



இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட “திருப்பதி லட்டு” படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் தயாரிப்பளார் சுரேஷ்காமாட்சி, 



 





நேர்முகம் ட்ரைலர் பார்க்கும்போது படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது. புதுமுகம் ரஃபி நன்றாக நடிக்கிறவர் என்று தெரிகிறது. இயக்குனர் முரளி கிருஷ்ணா அனுபவம் வாய்ந்தவர். அவர் தயாரிப்பாளரை காப்பாற்றிவிடுவார் என நம்பலாம். இப் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். இங்கு நிறைய மீடியா சகோதரர்கள் இருப்பதால் முக்கியமான ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும்.



 



 



​“சேதுபதி” படம் ரீலிசான அன்னைக்கே படம் டோரண்ட்ல வெளியாகிருச்சு. பல கோடிகள் போட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தா அன்னைக்கே இப்படி

​ஆன்லைன்ல வரதைப் பத்தி தயாரிப்பாளர்கள் அடங்​கிய வாட்ஸ் அப்பில் செய்தியாகப் போட்டு வருத்தப்பட்டிருந்தேன். ஆனா ​யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கவே இல்லை. ​ஏன்னா யாரோ வீட்டிலதானே தீ எரியுது நமக்கென்ன என்றிருந்துவிடுகிறார்கள்.. ​யார் ​பண்றாங்கன்னு ​கண்டுபிடிக்கிறது ஒண்ணும் அவ்ளோ பெரியவிசயமில்லை. ஆனா கண்டுபிடிக்கிறதை ​யாரும் ​பெரிசாஎடுத்துக்கல. அதான்​ வருந்தவேண்டிய விசயமா இருக்கு. மானியம் கிடைக்காம 400 தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுறாங்க.  மானியம் கொடுத்து 8 வருஷமாச்சு. ​ரெண்டு ஆட்சி மாறியாச்சு. தயாரிப்பாளர் சங்கத்துல மூணு தடவை நிர்வாகிகள் மாறியாச்சு. ஆனா, இந்த மானியம் விஷயத்துல இதுவரை ஒண்ணும் பெரிசா நடக்கலை. இவங்க நேரடியாக தமிழக முதல்வர்கிட்ட கேட்​கல’ 



இவ்வாறு மிகவும் காரசாரமாக பேசினார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா