சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

விஜய்யை போல் நன்றி மறக்காத அட்லீ!
Updated on : 09 March 2016



"ராஜா ராணி"  என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குனர் அட்லீ, இப்போது விஜய்யின் "தெறி" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டே படங்களில் முதன்மையான இயக்குனராக மாறியுள்ள அவரின் இந்த வளர்ச்சிக்கு, அட்லீயின் நற்குணமும் காரணமாக இருக்கலாம் என்பது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.



 



சமீபத்தில் நடைபெற்ற "தோழா" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தான் அத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் அட்லீயை, பத்திரிக்கையாளர் ஒருவர் உடனிருந்து  அழைத்து சென்று உதவியுள்ளார். ஏற்கனவே பரிச்சியமான அந்த பத்திரிக்கையாளரிடம் அப்போது சரியாக பேசாமல் கைபேசி அழைப்பில் கவனம் செலுத்தியுள்ளார் அட்லீ.



இதனை எண்ணி அந்த பத்திரிக்கையாளரும் மனம் வருந்தியிருக்கிறார். ஆனால், அவரே எதிர்பார்க்காத நிலையில் அந்த பத்திரிக்கையாளரை நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்த அட்லீ, விழாவின்போது தங்களை கவனிக்க முடியாமல் கைபேசி அழைப்பில் இருந்துவிட்டேன் எனக்  கூறி வருந்தியதுடன், மேற்கொண்டு அவரை நலம் விசாரித்துள்ளார்.



 



அட்லீயின் இந்த பண்பு அந்த பத்திரிக்கையாளரை மட்டுமின்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யும் இவ்வாறான நற்பண்பு உடையவர் என்பதால், அவருடன் இணைந்த அட்லீயும் நன்றி மறவாத தனது குணத்தை நிரூபணம் செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா