சற்று முன்
சினிமா செய்திகள்
கமல் ரசிகர் கமலிடம் கண்ட பத்து சிறப்பம்சங்கள்
Updated on : 18 July 2017
நடிகர் ரஜினிகாந்தை விட கமல்ஹாசன் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக வர 10 தகுதியும் பக்காவாக பொருந்தி இருக்கிறது - கமல்ஹாசனை ஒட்டுமொத்தமாக ஆதரிக்கும் வடஇந்திய ஊடகங்கள்!
1, நடிகர் கமல்ஹாசன் திராவிட கொள்கை கொண்ட தேசப்பற்றாளர். வருமான வரியை மறைக்காமல் கட்டி வருபவர் என்பதற்காக பாராட்டு சான்று பெற்றவர். பெரும் பணம் புழங்கும் திரைப்படத்துறையில் இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2, களத்தூர் கண்ணம்மா முதல் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் கமல். தனது உடலையே, தானமாக கொடுத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமானவர். கிட்டத்தட்ட 37 வருடங்களாக நற்பணி இயக்கம் மூலமாக மாநிலம் முழுக்க நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர். தமிழகத்தில் ஏரி தூர்வாறுவது, மரம் நடுவது, ரத்த தானம் செய்வது என்பதோடு, கமலின் நற்பணி இயக்கம், கடல் கடந்தும் சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது.
3, கமல்ஹாசன் தவறு என்று பட்டால் உடனடியாக அதை அச்சமின்றி வெளியிடக் கூடியவர். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் சென்னை வெள்ள பாதிப்பை அரசு சரியாக கையாளவில்லை என பகிரங்கமாக தெரிவித்தவர் கமல். கமலின் பேச்சுக்காக அவரது ஏரியாவில் மின் இணைப்பை துண்டித்து அரசு பழிவாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், பக்கம்பக்கமாக கமலை கரித்துக்கொட்டி அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று. அந்த அளவுக்கு கமலின் கருத்துக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுக்க காரணம், அவரது கருத்துக்கள் மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போக கூடியவை என்பதுதான்.
4, செய்தியாளர்களை கண்டாலே அஞ்சி ஓடிக்கொண்டிருந்த ஜெயலலிதா, ஒருகட்டத்தில், அவரே அழைத்து பிரஸ் மீட் வைத்தார். அதற்கு காரணம், விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டதால் அரசுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையை சமாளிப்பதுதான். கமல் கருத்து இப்படி ஆட்சி அதிகாரங்களை ஆட்டுவிக்கும் அளவுக்கு வலிமையானதாகவே இருந்து வருகிறது.
5, செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கமல் அளித்த அந்த ஒற்றை பதிலுக்காக அரசாங்கமே பதறிதுடிக்கிறது. எத்தனையோ எதிர்க்கட்சி தலைவர்கள் கூறும்போதுகூட கிணற்றில் போட்ட கல்மாதிரி இருந்த ஆளும் தரப்பு இப்போது, கமலுக்காக கதறி துடிக்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்ற அந்த வார்த்தை, உள்ளங்கை நெல்லிக் கனியாக அனைவருக்கும் தெரிந்ததுதான் என்பது அமைச்சர்களின் ஆவேசத்திற்கு காரணமாகியுள்ளது.
6, கமலிடம் மக்கள் கண்டு வியக்கும் ஒரு விஷயம், அவரும், திமுக தலைவர் கருணாநிதியை போலவே, வெகு புத்திசாலித்தனமாக பத்திரிகையாளர்கள் கேள்விகளை சமாளிப்பதை பார்த்துதான். கருணாநிதியிடமாவது ஒரு அளவுக்கு மேல் கேள்விகளை கேட்க முடியாது. கமலிடம் எப்படி, எப்படியெல்லாமோ கேள்விகள் வருகின்றன. எப்படி பந்து போட்டாலும் அதை அவர் சிக்சருக்கு தூக்குகிறார். பொதுவான லாஜிக் இருக்கிறதோ இல்லையோ, அப்போதைக்கு அதை யோசிக்க விடாத அளவுக்கு கமல் பேட்டிகள் அவருக்கே உரித்தான லாஜிக்கோடு அமைவது பத்திரிகையாளர்கள் புருவத்தை தூக்க செய்துள்ளது.
6, ரஜினி சிக்கலான கேள்விகளை தவிர்த்து பயந்து பதட்டத்துடன் கிளம்பி விடுவார் அல்லது நோ கமண்ட்ஸ் என்று தவிர்த்து விடுவார், ஆனால் கமல்ஹாசன் அத்தனை கேள்விகளுக்கும் அசராது அசால்ட்டாக பதில் அளிக்க கூடியவர் இங்குதான் ரஜினியிடம் கமல் வேறு படுகிறார் கமல்ஹாசன்.
7, ஜெயலலிதா, மோடி போன்ற தலைவர்கள் பத்திரிகையாளர்கள் பக்கம் வராமல் தவிர்ப்பதையும் பார்த்த மக்களுக்கு கமலின் பதில்கள் ஒருவகை புது உணர்வை கொடுத்துள்ளன என்பது நிதர்சனம்.
8, சென்னை வெள்ள பிரச்சினையில் கமலை, தமிழக அரசு கார்னர் செய்தபோது, இயக்குநர் பாரதிராஜா ஒரு விஷயத்தை சொன்னார். கமலை தேவையில்லாமல் சீண்டாதீர்கள். அவர் அரசியலை கற்றுக்கொண்டு வந்தால் தாங்க மாட்டீர்கள் என்றார். எந்த ஒரு விஷயத்திலும் முழு ஞானம் பெற வேண்டும் என்ற தேடுதல் உள்ள கமல் அரசியலில் இறங்கினாலும் அதையே செய்வார் என்ற எண்ணம் அரசியல் பார்வையாளர்களிடம் உள்ளது.
9, இந்தியாவில் இருக்கும் பல முக்கிய மொழிகளை நன்கு பேச தெரிந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் மற்றும் ஆங்கிலம். இந்தியாவில் தற்போது இருக்கும் 98% சதவிகித அரசியல் வாதிகளுக்கு தன் தாய் மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது! அப்படியே தெரிந்திருந்தாலும் இத்தனை மொழிகளை தெரிந்தவர் எவருமில்லை ( பாரத பிரதமர் மோடிக்கே
கூட இதற்கு தகுதியில்லை)
10, சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டும், பச்சைத்தமிழர் அடையாளம், பொதுமக்கள் எதிர்பார்க்கும் சேவை குணம், எதிரிகளை சமாளிக்கும் அறிவு, வாக்குகளை ஈர்க்கும் பேச்சுத்திறமை, திரைப்பட புகழ், டெல்லியிலுள்ள லாபி என அரசியல்வாதிக்கு தேவையான 10 பொருத்தமும் பக்காவாக உள்ளவர்தான் கமல்.
அறிவழகன்
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா